போன வருடம் ஒரு சனிக் கிழமை எனக்கு பிடித்த இசைக் குழுவின் ஆல்பம் வெளியீடு. அதுக்காக பெங்களூரு போயிருந்தேன் .அவர்களின் இசை “Blues Rock Instrumental வகையைச் சார்ந்தது. அவர்களின் புதிய ஆல்பத்திலிருந்து பாடல்களை இசைத்தார்கள். இரண்டு பேர், அவர்களை இந்த நிமிஷம் வரை என் நண்பர்களிடம் இந்த சம்பவத்தைச் சொல்லும் போதெல்லாம் இரண்டு பாஸ்டர்ட்ஸ் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன் , (போதும், பொதுத் தமிழ்னு நினைக்கிறேன்) இனிமே அவங்கள நாகரிகம் கருதி இரண்டு உத்தமர்கள் னு சொல்லலாமா இல்ல பாஸ்டர்ட்ஸ்னே சொல்லலாமான்னு நெனச்சதிலே இரண்டு கேனா கூனா னு சொல்றேன் . அந்த இரண்டு கேனா கூனா கிட்டார் வாசிச்சுக் கொண்டிருப்பவரப் பாத்து Middle finger காட்டினாங்க .டேய் பாடுடா னு கேட்ட வார்த்தைல திட்டினாங்க . என் கூட வந்த மாமா அவனுடைய விலா எலும்ப ஒடச்சிருப்பாரு, நான் தான் பௌன்சரக் கூப்டேன் . அப்புறம் சால்வ் ஆயிடுச்சு .

ஓகே , எதுக்கு இத எழுதறேன்னா ,(அவிங்கள நெறைய திட்டியாச்சு ,என்ன , I still regret that I should have broken those bastards’ ribs) முக்கியமா அந்த கேனா கூனா ரெண்டு பெரும் தமிழ் பேசினாங்க , இல்லாட்டி அவங்க பேசின கெட்ட வார்த்தைக்கு அவங்க வீடு போய் சேர்ந்திருக்க மாட்டாங்க .எனக்கும் என் மாமாக்கும் ரொம்ப கேவலமா இருந்துச்சு .இங்க நல்ல மியூசிக் இல்லன்னு தான் ஊர் ஊரா போய்டிருக்கோம், அங்கயும் வராதீங்க டா @##$%^^^. அதுக்கு என்ட்ரன்ஸ் பீஸ் 400. எதுக்கு அப்படிக் கொடுத்துட்டு வரணும் , வேற எதாவது பாருக்குப் போய் Justin Fucking Bieber or Some Gaga கேட்டு ஆட வேண்டியதான .முக்கிய காரணம் சினிமா மியூசிக் . இன்டிபென்டன்ட் ஆர்டிஸ்ட் , மியூசிக் வளரவே விடமாட்டாங்க .முந்தில்லாம் நம்ம தேவா சார் இருந்த பொற்காலத்துல வெளிநாட்டு இசையக் காப்பியடிப்பாங்க , இப்ப பிச்சை எடுத்தான் பெருமாளு புடுங்கித் தின்னான் அனுமாருன்னு இவிங்களுக்கு உள்ளயே காப்பி அடிச்சுக்கிறாங்க .ஜனங்க ரசனையையும் கேவலமா ஆக்கிவிட்டாங்க .இந்த பெங்களூர் ப்ரஹஸ்பதி மாதிரி எத்தனை பேர் என் பிரண்ட்ஸ் லிஸ்ட்ல இருக்கோ, please unfriend me if you must, thanks in advance, நம்ம கேவலமான மியூசிக் கேக்கறோம்னு சொரணையே இல்லாம இருக்காங்க .

Advertisements