இவங்க ரெண்டு பேருக்கும் ஸ்நானப்ராப்தி கெடையாது .ரெண்டு சுமார் இல்லாட்டி சூரமொக்கை (எப்படி வேணும்னாலும் வச்சுக்கலாம், உங்க ரசனையைப் பொருத்தது .எனக்கு ரெண்டாவது) படங்கள கடைசி வரைக்கும் பாக்க வச்சது தான் ஒற்றுமை .நேத்து தாரை தப்பட்டை ப்ரெண்ட் லேப்டாப்ல இருந்துச்சு ,சும்மா ஒட்டிவிட்டேன். பாலாக்காக பாதி படம் பாத்துட்டேன், லிட் க்ளோஸ் பண்ணலாம்னு நெனைக்கற போது ரெண்டு மூணு நல்ல க்யூ வந்துச்சு .ராஜா!! எப்படி தான் பாலா இவ்ளோ ரகரகமா டிஸ்டர்பிங் கிளைமேக்ஸ் சிருஷ்டி பண்றாரோ!!! பாதி படத்துலையே யூகிச்சுட்டேன் .பாலாவோட ரசிகன்கறதுனால அடுத்து என்ன ஷாட் வரும், அதோட காம்பொசிஷன் எல்லாம் அத்துப்படி .இப்படி ஒரு சுவாரஸ்யம் இல்லாத கிளைமேக்ஸ்ல உருப்படியா இருந்த ஒரே விஷயம் ராஜா தான். அவரும் பாதிப் படத்துக்கு மேல மொக்கை தான் ,கடைசி அரை மணி நேரம் தான் .சில இடங்கள் கண்டிப்பா ஸ்டடி மெடீரியல்.
இதே மாதிரி Sleeping with the Enemyனு ஒரு மொக்கை படம் .ஜூலியா ராபர்ட்ஸ் நடிச்சது (தமிழ்ல அவள் வருவாளா னு காப்பி அடிச்சானுங்க ). அந்த மொக்கப் படத்த கொஞ்சம் பாக்கற மாதிரி பண்ணினது ,ஜெர்ரி கோல்ட்ஸ்மித் .மனுஷன் ஓமன் ஹேங் ஓவர்ல இருந்திருப்பாரு போல. எனக்கு ரொம்ப புடிச்ச கம்போஸர். Then, The Ghost And The Darkness Soundtrack இதுவும் செம்ம ஸ்கோர். தாத்தா தாறுமாறா பண்ணிருப்பாரு .
கடைசியா, ராஜாவோட 1000 ஆவது படம். பாலா அவர கடவுளா பாவிக்கிறார் .தப்பு கெடையாது. மார்டின் ஸ்கார்சசியே டாக்சி டிரைவர் பண்ணும் போது Bernard Hermann கிட்டக்க கேட்டாரு .டாக்சி டிரைவர்லாம் பண்ண முடியாது போ னு சொல்லிட்டாரு , அப்புறம் அவர கன்வின்ஸ் பண்ணினாரு. அவ்ளோ பெரிய கம்போஸர்ஸ் கிட்டக்க போய் அவங்க உச்சத்துல இருக்கும் போது இப்படி போடு அப்படி ஸ்ட்ரிங்ஸ் செக்ஷன் வைன்னு சொல்ல முடியாது வாஸ்தவம் தான். இன்னும் ராஜா செம்ம க்ரியேடிவா தான் இருக்காரு, நல்ல மியூசிக் கேட்டு வாங்க தான் ஆட்கள் இல்ல.எல்லாமே சொத சொதன்னு போய்டுது .ஹ்ம்ம்ம்ம்
Advertisements