சில விஷயங்களை ஆங்கிலத்தில் எழுதி முடித்தேன் .இதைத் தமிழில் எழுதி இருக்கலாமென்று தோன்றியதில் இது. ஏன் நம்மளோட இசை பற்றி அடிக்கடி எழுதறேன்னு நீங்க நினைக்கலாம் .என்னோட மேதாவித்தனத்தைக் காட்டவா? நிறைய பணம் புழங்குற இடம், நம்முடைய ரசனையில் மாற்றம் ஏற்படும் வகையில் இசை வருகிறதா?

விசாரணை பார்த்தேன். ஹ்ம்ம், நடிக்கிற ஆர்வம் இருந்தால் நடிக்கப் போய்விட வேண்டியதுதானே? ஏன் இப்படி ஒரு கழிவிரக்கம், இந்த மாதிரி ஒரு Shoe String பட்ஜெட் படத்துக்கு நான் பண்றேன்னு முந்திரிக் கோட்டை மாதிரி முன்வந்து ஹ்ம்ம் .ஸ்க்ரிப்ட் தயாராகும் போதே ஃபிலிம் ஃபெஸ்டிவல் சர்க்யுட்ல மார்க்கெட் பண்ற அளவுக்கு அசாத்திய தன்னம்பிக்கை வெற்றிமாறனுக்கு இருக்கிறது. அவரோட கணிப்பு என்றுமே தப்பாகவில்லை. ஆடுகளத்துக்கு ஆறு நேஷனல் அவார்டு கிடைக்குமென்று பாலு மகேந்திரா படம் வெளியாகும் முன்பே கணித்துவிட்டார் .அவ்வளவு நேர்த்தியாகத் திட்டமிட்டபடி படமெடுக்கும் திறமை இருக்கிறது. அப்புறம் ஏன் இசையில் மட்டும் பாரபட்சம்.ஏன் ரஹ்மானை அணுகி இருக்கக் கூடாது? உலகத் தரத்தில் கொண்டு செல்லும் நிறைய முயற்சிகள் இங்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு படத்தில் கூட ரஹ்மானின் இசை இல்லை .இந்த இடைவெளி எதற்கு ?வெற்றிமாறன் தயங்குகிறாரா? ஆடுகளம் படத்தின் மதிப்பே போதுமே ரஹ்மானுக்கு இந்தப் படத்துக்கு இசையமைக்க. விசாரணை மாதிரி இன்னும் பத்து படங்கள் கூடிய சீக்கிரம் வரலாம்.

இன்று தான் திரைப்படங்களில் கலரிஸ்டுடைய பங்கு பற்றி ஒரு நல்ல கட்டுரை படித்தேன் .ஸ்க்ரிப்ட் கன்சல்டன்ட் , கலரிஸ்ட் என்று நிறைய ஏரியாக்களில் பிரக்ஞை வந்துவிட்டது . இசை நீங்க போங்க நா பின்னாடியே வரேன்னு இருக்கிறது. வெற்றிமாறனே ரஹ்மானுடன் இணைய முடிவதில்லை. புது இயக்குனர்களில் யாரவது ஒருத்தர் ஒருநாள் உலகத் தத்தில் முழுமையான ஒரு படைப்பைக் கொடுக்கும் போது அந்தப் படத்தில் இசை கண்டிப்பாக ஊனமாக இருக்கும். விசாரணை படத்துக்கு ரஹ்மானோ ராஜாவோ தேவை இல்லை தான் ,ஆனால் அவர்கள் இருந்தால் படத்தில் நிறைய சைலென்ஸ் இருந்திருக்கும், இது ஒரு டூல்னு இவர்களுக்கு தெரியவில்லை.

ஒரு மலையாள இயக்குனர், அடூர்னு நினைக்கிறேன், படம் முடித்து விட்டு இசையமைப்பாளரிடம் காண்பிக்கிறார், பார்த்ததும் இந்தப் படத்துக்கு இசையே தேவை இல்லை என்று சொல்கிறார் இசையமைப்பாளர், இயக்குனரும் நான் நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் என்கிறார். தாரை தப்பட்டைக்கு நேஷனல் அவார்ட் கிடைத்ததில் எனக்கு ஆச்சர்யம் இல்லை, ஏற்கனவே எழுதி விட்டேன், முதல் பாதி, இசை ரொம்ப அலுப்பு, கடைசி அரை மணி நேரம் கண்டிப்பாக ஸ்டடி மெடீரியல். இதுக்காகவே அவார்ட் கொடுக்கலாம். சும்மா ராஜா சார் தெய்வம், உயிர் என்று நம்ம இசையமைப்பாளர்கள் ஒப்புக்கு சொல்லுகிறார்கள். முதலில் அவர் மனுஷன், திறமையான மனுஷன் .அவரவிடத் தீவிரமாக உழைத்தால் சிறப்பாக பண்ணலாமென்று நினைக்க வேண்டும்.

இந்தப் பத்தி இன்னொரு ஐந்து வருஷம் கழித்து எழுதி இருந்தால் இன்னும் தீவிரமாக பேசி இருப்பேன். அப்போது Novice நிலையில் இருந்து Connoisseur நிலைக்கு போய் இருக்கலாம் .

நல்ல மியூசிக் எப்படி இருக்க வேண்டும் ?(என்னைப் பொருத்தவரை) ஒருவர் ஒரு ஐந்து நிமிடம் கிட்டார் அல்லது பியானோ வாசிக்கிறார் என்றால் அதில் ஒரு உரையாடல் இருக்க வேண்டும். சின்ன சின்ன இசைத் துணுக்குகள், இன்னும் ஆழமாகப் பேசினால் நோட்ஸ். அவையெல்லாம் சேர்ந்து ஒரு முழுமையான அனுபவத்தை நமக்குக் கொடுக்கிறது. நாம் எப்படி சின்ன சின்ன வாக்கியங்களால் ஒரு நீண்ட உரையாடலை சாத்தியமாக்குவது போல .நீண்ட உரையாடல் என்றாலும் சில வார்த்தை பிரயோகம் மட்டுமே எல்லோரையும் கவரும். எழுத்தாளர் சுஜாதா மேடைப் பேச்சிற்கு முன்பு சிறு குறிப்பு எடுத்துச் செல்வாராம், இதனால் கச்சிதமாகப் பேசி விடலாம், நேர விரையம் ஏற்படாது என்றார் .

அது போல இசையமைப்பதற்கு முன்பு காட்சியைப் பார்த்த பிறகு சிறு குறிப்பு எடுத்துக் கொள்ளலாம் .

முதலில் சோகக் காட்சிக்கு வயலினைத் துறந்து மற்ற இசைக்கருவிகளை முயற்சி செய்து பார்க்கவும் .

அடுத்த விஷயம் சைலென்ஸ், எங்கு சுற்றுப்புற ஒலிகள் இருக்கவேண்டும், எங்கு சைலென்ஸ் இருக்கவேண்டுமென்று தீர்மானிக்கவும் .முடியாவிடில் கற்பனை பண்ணிப் பார்க்கவும், அடுத்தக் காட்சியின் தீவிரத்தை உணர்த்தக் கூட சைலென்ஸ் உபயோகிக்கலாம்.

ஒரு திரைப்படத்தை பதினாறு முறை கூடப் பார்க்கலாம், பார்த்து முதலில் அந்தத் திரைபடத்தின் பிரதான இசைக் கருவியை தேர்வு செய்யவும்.

127 Hours படத்துக்கு ரஹ்மான் பெரும்பாலும் கிட்டார் தேர்வு செய்தார், தனியாக சிக்கிக் கொண்டிருக்கும் ஒருவனின் மனநிலையை பிரதிபலிக்கும் விதமாக இருக்கும் .அங்கு இரண்டு மேற்பட்ட இசைக்கருவிகளுக்கு வேலையே இல்லை.நிறைய இயற்கையான சப்தங்கள் மெல்லிய இழைந்தோடும் கிட்டார் போதும் .மார்டின் ஸ்கார்செசியின் டாக்சி டிரைவர் பார்த்தல் தெரியும் அதன் பிரதான இசை ஜாஸ் மயமானது, அந்த சாக்ஸஃபோனின் இசை ட்ராவிஸ் பெக்கிள் கடந்து போகும் அழுக்குமயமான ந்யூயார்க் நகரைப் பிரதிபலிக்கும். அடுத்த உதாரணம் ஹிட்ச்காக்கின் சைக்கோ. அந்தக் கோரமான ஸ்ட்ரிங் செக்ஷன் .

இதுக்குப் பெயர் Leitmotif என்று சொல்வார்கள். (What is Leitmotif? A pattern of notes which represent a concrete idea, often has a recognizable melody) பின்ணணி இசையில் இசையில் ஒரு சில நோட்ஸ் சேர்ந்து ஒரு மியூசிக்கல் ஐடியாவை உருவாக்குவது. அதன் மூலம் மகிழ்ச்சி, சோகம், கோபம், திகில், பயம் இப்படி எல்லாவற்றையும் உருவாக்குவது. இந்த Leitmotif சில நேரம் படம் நெடுகத் தொடரும். டார்க் நைட் படத்தில் வரும் ஜோக்கர்ஸ் தீம் மிகச் சிறந்த உதாரணம் .தயவு செய்து இந்த வீடியோவைப் பாருங்கள் தெரியும்.

https://www.youtube.com/watch?v=vt5_TB3mB2U

சில செல்லோ நோட்ஸ் தான், ஆனால் ஜோக்கர்ஸ் வருகிறான் என்று நமக்கு உணர்த்திவிடும் .இது அந்தக் கதாப்பாத்திரத்துக்கு இன்னொரு வடிவம் தருகிறது. தமிழில் இதை பிரதானமாக பிரமாதமாகப் பயன்படுத்தி வருபவர் இளையராஜா ஒருவரே .இந்த விஷயத்தில் ராஜாவை நெருங்க ஆளே இல்லை. நாயகனின் தென்பாண்டி சீமையிலே தொடங்கும் முன் வரும் அந்த ஆறு நோட்ஸ், கூட இருக்கலாம். எண்ணிப் பாருங்கள். வாழ்த்துக்கள் and நன்றி இளையராஜா.

https://www.youtube.com/watch?v=Ee0HbusYpuk

Advertisements