என்னோட ஆசைகள்ள ஒன்னு , நான் எய்டீஸ்ல டீன் ஏஜ் ல இருந்து இந்தாளு மியூசிக் நா காலைல எம் டீவி போட்டா கேக்கணும். அப்போல்லாம் ப்ளுஸ் , ராக் மாதிரி Genreக்கு அவ்ளோ நல்ல க்ளைமெட் இல்ல, டிஸ்கோ பேண்ட்ஸ் காலம் அது, எலெக்ட்ரானிக் மியூசிக் மெல்ல தலை எடுக்க ஆரம்பிச்ச கால கட்டம் .இந்த மாதிரி ட்ரம்மர், பேசிஸ்ட் ,கிட்டாரிஸ்ட் எல்லாம் பத்தோடு பதினொன்னா மாற ஆரம்பிச்ச காலம் .

ராபர்ட் க்ரே கிட்ட ஒரு முக்கியமான விஷயம், லிரிக்ஸ், முக்கால் வாசி எதாவது ரெலேஷன்ஷிப் பத்தி இருக்கும், ஏமாற்றம், நம்பிக்கை துரோகம் போன்ற டேம்ப்லேட்டான ப்ளுஸ் சங்கதிகள் தான், ஆனா, ஒரு ஃபிரெஷ்னேஸ் இருக்கும். ஸாம் குக் மாதிரி ஒரு ஸ்மூத்தான வாய்ஸ், கொஞ்சம் Trebly கிட்டார் டோன்.

ஒரு நண்பர் FBல சாட் பண்ணும் போது சொன்னார் தான் ஆங்கில படம் நெறைய பார்ப்பதாகவும், ஆனா ஆங்கிலப் பாடல்களோட வரிகள் அவ்வளவு இலகுவாகப் புரிவதில்லைன்னு .ஒரு சில வெப் சைட் உபயோகிப்பதாகவும், அதுவும் ஒரு கட்டத்துக்கு மேல் பயன்படவில்லை என்று. அது முதலில் கேக்கும் போது ஏற்படுவது வாஸ்தவம் தான்.

நான் போஸ்ட் பண்ணிருக்கிற பாட்டுல ராபர்ட் க்ரே அந்தப் பாட்டுப் பாடறவனோட வாழ்க்கைல இருந்து ஒரு குட்டி கதை நமக்கு சொல்றார் அவ்ளோ தான். புருஷன் பொண்டாட்டி பக்கத்துக்கு வீட்ல நைட் சண்டை போடறாங்க, பாடறவனுக்கு புருஷன் கோவத்துலக் கத்துறது மெல்லிய சுவத்துக்கு நடுவுல தெளிவாக் கேக்குது , யாருடி அவன்னு அவ கிட்டக்க புருஷன் கேக்கும் போது , அவ ஏதோ மெதுவா சொல்றா, அவன் நம்பல, பொய் சொல்லாதன்னு சொல்றான், பக்கத்துக்கு வீட்டுக்காரன் குற்ற உணர்ச்சியோடு எல்லாத்தையும் கேட்டிட்டுருக்கான் .மறு நாள் காலைல அவங்க வீட்டுக் கதவப் படார்னு சாத்திட்டு ரெண்டு பேரும் போறாங்க, அவ அழ ஆரம்பிச்சிட்டா, அவ கிட்டப் போ அப்டின்னு அவன் மனசு சொல்லுது, போய் என்ன சொல்ல?

இதுல வர்ற கோரஸ் வரி Strong Persuader தான் இந்தக் குட்டிக் கதைக்கு முடிச்சு போடும், தமிழாக்கம் பண்ணிக்கோங்க.

அவங்க ரெண்டு பேருக்கும் இடைல தகாத உறவாக் கூட இருக்கலாம், இல்ல, ரெண்டு பேரும் நல்ல நண்பர்களாக் கூட இருக்கலாம், இல்ல, அவனோட இசைல இவளுக்கு ஈர்ப்பு ஏற்பட்டு அவன் இவளோட வீட்டுக்கு வந்து ஏதாவது தடயத்த விட்டுப் போயிருக்கலாம். இதெல்லாமே பாட்டுல வெளிப்படையா வர்ல. பாப் டிலன், ஜானி மிட்சல், லியனார்ட் கொஹன் மாதிரி கவித்துமா ராபர்ட் க்ரே எழுத மாட்டார், இந்த பாப்புலர் சாங்க்ல உள்ள மாதிரி கூட ஒரு குட்டிக் கதை வடிவமா ஒரு தமிழ் பாட்டு கூட காணோம், எல்லாமே மொக்கையான பொண்ணு பத்தி இல்லாட்டி அவள டேம்ப்லேட்டா வர்ணிக்கற மாதிரி, அதான் கண்ணதாசனோட காத மூடிக்கிட்டேன்.

Music video by Robert Cray performing Right Next Door (Because Of Me). (C) 1986 The Island Def Jam Music Group
Advertisements