என் வீட்டில் டிவி இல்லை ,வெற்றிகரமாக ஆறு வருடங்கள் ஆகிவிட்டது !!!!ஊரிலிருந்து ஒரு மாசம் என்னுடன் தங்க வந்திருக்கும் அம்மா வேறு வழியில்லாமல் நான் வாங்கி படிக்காமலிருக்கும் அனேக புஸ்தகங்களைத் தூசி தட்டி படித்துக் கொண்டிருக்கிறாள் .

அசோகமித்ரனின் “அப்பாவின் ஸ்நேஹிதர்” சிறுகதைத் தொகுப்பைப் படித்துக் கொண்டிருந்தாள். எனக்கு சட்டென்று எலி கதை ஞாபகம் வந்தது .அந்த தொகுப்பில் இல்லை.. உடனே அழியாச் சுடர்கள் லின்க்கை ஓபன் பண்ணிக் கொடுத்தேன் .நானும் மீண்டும் ஒரு முறை படித்தேன் .வேறென்ன சொல்ல , Masterpiece!!! .சிரிக்காமல் இருக்க முடியாது யாராலும் .அது மட்டுமல்ல கதை!!!பல கதைகள் உள்ளது .நானும் அப்பாவும் எலிப் பொறியைத் தூக்கிக் கொண்டு சின்ன வயதில் போன ஞாபகம் வந்தது .இப்ப எலி தொல்லை இல்லைன்னு சொல்ல முடியாது .எலிப் பொறி தூக்கறது இல்ல. எலியோட வாழப்பழகிட்டோம் .

கதையின் கடைசி வரிகள் கீழே. இதுவே மினி கதை மாதிரி இருக்கிறது, முழுக் கதையின் சாரம் தெரிகிறது .அவசியம் படிக்க வேண்டிய கதை.

“”எலிக்குப் பதுங்க இடம் தெரியவில்லை. காக்கை எலியை அப்படியே கொத்திக் கொண்டு தூக்கிச் சென்றுவிட்டது. கணேசனுக்குத் துக்கமாக இருந்தது.

இன்னொன்றும் அவனுடைய துக்கத்தை அதிகரிக்கச் செய்தது. பொறியைத் தூக்கிக் கொண்டு வீடு திரும்ப ஆரம்பித்தவன் பொறிக்குள் பார்த்தான். அவன் முந்தின இரவு கொக்கியில் மாட்டிய வடை அப்படியே தின்னப் படாமல் இருந்தது””.

Advertisements