ஜோ பேஸ் கேட்டுகிட்டு இருந்தப்போ திடீர்னு டிவில இந்தப் பாட்டு. ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத காம்பசிஷன். எம் எஸ் வி அஞ்சு நிமிஷத்துல சொல்றத கே வி மாமா அம்பது செகண்ட்ஸ்ல சொல்லிடுவாரு. ரெண்டுமே எனக்கு பிடிக்கும். இதுல வர்ற வீணை ஸோலோ. ஒவ்வொரு ம்யூசிஷனும் கேக்கணும், அவ்வளோ விஷயம் இருக்கு.ஒரு நல்ல ஸோலோன்னா ஒரு அட்டகாசமான பிகினிங், குட்டி கான்வர்சேஷன், ஒரு க்ளைமேக்ஸ், முடிவு இருக்கணும். இப்டி ஒரு முழுமையான, தீவிரமான இன்ஸ்ட்ருமென்ட் ஸோலோ சினிமாலப் பாக்கறது அரிது. அவ்வளவு உக்ரமான வயலின் க்யூவும் கே வி கிட்ட மட்டும் தான் கேக்க முடியும். பத்து செகண்ட்ஸ் தான், லைட்னிங் மாதிரி. ஒரு ஜிங்சா வேற, செம்ம டைமிங்க்ல கூடவே வரும்,

இந்தப் பாட்டுல நாகேஷ ரசிக்கறது ஒரு தனி அனுபவம். சைட் கேப்புல கெடாவெ வெட்டிருப்பாரு தல. எல்லாத்தையும் மீறி ஒரே ஒரு ஆள் தான் இந்தப் பாட்டுக்கு ஹீரோ. வேற யாரு, கவிஞர்!!! எந்த மனத் தடங்கலும் இல்லாம கவிஞர்னு இவர சொல்றதுல மட்டும் தான் திருப்தி இருக்குது. கலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆள் இல்லையோ. அய்யா தமிழ் சினிமாக் கவிஞர்களே இப்டி ஒரு பாட்ட எழுதிட்டு க்யூல நில்லுங்க, உங்களைக் கேக்க முயற்சி செய்யறேன் .

“கலைமகள் கைப்பொருளே – உன்னைக் கவனிக்க ஆள் இல்லையோ விலையில்லா மாளிகையில்- உன்னை மீட்டவும் விரல் இல்லையோ கலைமகள் கைப்பொருளே – உன்னைக் கவனிக்க ஆள் இல்லையோ

உன்னிடம் ஆயிரம் ராகங்களே; என்றும் உனக்குள் ஆயிரம் கீதங்களே… இசையறிந்தோர்கள் மீட்டுங்களேன்… இல்லை எனக்கேனும் வழி காட்டுங்களேன்..

நான் யார் உன்னை மீட்ட…. வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழிக்காட்ட….. ஏனோ துடிக்கின்றேன்??? ஏனோ துடிக்கின்றேன்??? அதன் இனம் தெரியாமல் தவிக்கின்றேன்….. விலையில்லா மாளிகையில்- உன்னை மீட்டவும் விரல் இல்லையோ

சொர்க்கமும் நரகமும் நம் வசமே… நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே….. சொர்க்கமும் நரகமும் நம் வசமே… நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே….. சத்தியம் தர்மங்கள் நினைக்கட்டுமே…. சத்தியம் தர்மங்கள் நினைக்கட்டுமே இது தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே

கலைமகள் கைப்பொருளே – உன்னைக் கவனிக்க ஆள் இல்லையோ.”

Advertisements