டெசர்ட் ப்ளூஸ், மாலியன் ப்ளூஸ்

The farther apart good artists are ,
the closer they are musically and sound in unison

-Srinivasan R

ஈடிஎம் (EDM) ஆசாமிகள் இதப் படிக்க வேணாம். உங்களுக்கு ஒண்ணும் இல்ல. ப்ளூஸ், இன்ஸ்ட்ருமெண்டல் மியூசிக் மேல ஆர்வம் இருக்கறவங்க ,மியூசிக் இஸ் எ லாங்க்வேஜ் னு நெனைக்கறவங்க கண்டிப்பா படிக்கலாம் .
சில பேர் என்கிட்ட நல்ல மியூசிக் அறிமுகப் படுத்துங்கன்னு சொல்றாங்க. எனக்கு அதில நம்பிக்கை இல்ல, ஓரளவுக்கு பண்ணலாம். பீட்ல்ஸ், ஃபிங்க் பிளாய்ட் , ஈகிள்ஸ் னு பொத்தாம் பொதுவா சொல்வேன் .

மத்தபடி நான் என்னோட மனசுக்கு புடிச்ச மியூசிக் மட்டும் தான் கேப்பேன் ,வலுக்கட்டாயமா ஆரம்பத்துலையே திணிக்க மாட்டேன். கிராம்மி போன்ற லொட்டு லொசுக்கு அவார்ட்லாம் வின் பண்ணிருந்தாலும் எனக்கேத்த மியூசிக் இல்லேன்னா அது எனக்கு தேவைப்படாது . யூ ட்யூப்லையே சில சமயம் suggestions வருது .அதெல்லாம் சும்மா க்ளிக் பண்ணிப் பார்ப்பேன் .புடிச்சிருந்தா அவங்களோட repertoire தேடித் பார்ப்பேன் .etc …. என் பிரெண்ட்ஸ் சினிமா Torrent ல தேடும் போது IMIB ரேட்டிங் பாத்து டவுன்லோட் பண்ணுவாங்க. நான் அந்த டைப் கெடையாது. அப்டி தான் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி கான் வித் தெ வின்ட் படம் டவுன்லோட் பண்ணிப் பாத்தேன் .ஹ்ம்ம். அரை மணி நேரம் கூட தாண்ட முடில. பட் ஏஜ் ஆப் தெ இன்னொசன்ஸ் படம் டிவி ல பாத்த உடனே புடிச்சிருச்சு .நம்ம தமிழ் சினிமால தொவச்சுப் போட்ட ட்ரை ஆங்கிள் லவ் ஸ்டோரி .அது ஸ்கார்சேசி னு அப்போ தெரியாது, அப்புறம் அவரோட repertoire பாத்தா அதுக்கு நேர் ஆப்பசிட் .அந்தப் படம் ஒரு ஓரத்துல இருக்கு அவரோட மிச்ச படங்களப் பாக்கும் போது.

மெயின் ஸ்ட்ரீம்ல இப்போ இருக்குற மியூசிக் தவிர வேற ஏதாவது யாராவது ஷேர் பண்ணா கேட்டுப் பாக்கறதுல தப்பு இல்ல. புடிச்சிருந்தா தேடித் போறது நம்மளோட ஆர்வம் மட்டும் தான்.

இப்போ சொல்லப் போறது டெசர்ட் ப்ளூஸ், மாலியன் ப்ளூஸ்….முக்கியமான ஆர்டிஸ்ட், அலி ஃபர்கா. அமெரிக்கன் ப்ளூஸ்ல பிபி கிங், ஜான் லீ ஹூகர், லைட்னிங் ஹாப்கின்ஸ் மாதிரி .

இவர்டேர்ந்து வந்தது தான் டினரிவென் பேண்ட். சஹாரா பாலைவனத்துல இருந்து வந்த பேண்ட் .இது போதும், நீங்களே தேடிக்கோங்க, பாட்டு புடிச்சிருந்தா.சும்மா விக்கிபீடியால இருந்து தமிழாக்கம் பண்ண விரும்பல, நானே ரெண்டு மூணு வருஷமாத் தான் கேக்கறேன், பல வருஷமா இந்த பேண்ட் கேட்கற மாதிரி சீன் போடறதுக்காக ஒரு பக்கக் கட்டுரை எழுத முடியாது. எனக்கு புடிச்ச பேண்ட் இது .இவங்களோட பாடு பொருள், இண்டர்னஷலா இவங்களோட அங்கீகாரம் எல்லாம் கூகுள்ள கெடைக்கும்.

Tinariwen : https://www.youtube.com/watch?v=aA2-vJS6tvc

அடுத்து பாம்பினோ , செம்ம பேண்ட் , டெசர்ட் ப்ளுஸ் ப்ளஸ் ராக் அண்ட் ரோல். டினரிவென் ரொம்ப ரா ப்ளூஸ். இவங்க செம்ம பெப்பி .ஐ ஜஸ்ட் லவ் தீஸ் பாஸ்டர்ட்ஸ் .கேட்டுப் பாருங்க.

தென், அலி ஃபர்கா, எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச வேர்ல்ட் ம்யுசிஷன். ஆஃப்ரிக்காக்காரனப் பாத்தாலே ஒரு ஜெர்க் வரும், அதெல்லாம் தாண்டி மியூசிக். இவர் எப்டித் தெரியும்னா, நான் ஸ்லைட் கிட்டார் ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்கும் போது, ராய் கூடர் கேட்டேன், அவர் இந்த ஆஃப்ரிக்காக்காரன்களோட பண்ணின கொலாபொரேஷன். மியூசிக் ப்ரடூசர்ஸ்லையே எனக்கு ரொம்ப புடிச்ச ஆளு. டால்கிங் டிம்பக்டு ,என்னோட ஃபேவரிட் பத்து ஆல்பங்கள்ள கண்டிப்பா இருக்கும். இது கிராமி அவார்ட் வின் பண்ணினது. கிராமி மேல எனக்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது. கிராமி பெருமைப் பட்டதுன்னு சொல்லலாம்.

In the Heart of the Moon – https://www.youtube.com/watch?v=NpWUcI7bGmY

அப்புறம் இவர மாதிரியே, மாலில இன்னொருத்தர், Toumani Diabaté. இவர் ஒரு பிராடிஜி. இவர் ஆஃப்ரிக்க இன்ஸ்ட்ருமென்ட் கோரா வாசிக்கறவர், அது கிராமத்திய இன்ஸ்ட்ருமென்ட்,தோராயமா ஹார்ப் மாதிரி இருக்கும். அலிய விட வயசுல சின்னவர், அலி அவங்க அப்பா கூடல்லாம் வொர்க் பண்ணிருக்கார். இவங்க ரெண்டு பேரும் மொதல்ல கொலாபொரேட் பண்றாங்க, ஒரு டாகுமெண்டரி லிங்க் தரேன் பாருங்க,

மொத மொதல்ல மீட் பண்றாங்க, ரிஹர்சலே கெடையாது, டைரக்டா ட்ராக் கட் பண்ணிருக்காங்க, இந்த ஆல்பத்துல இருக்கற எல்லா பாட்டுமே, ரிஹர்சல் இல்லாம ஜாமிங்க்ல பண்ணினது. ரெண்டு பேருக்கும் அவ்ளோ கெமிஸ்ட்ரி. அலி என்னிக்குமே ரிஹர்சல் பண்றது கெடையாது. மியூசிக் அப்டியே வர்றது தான். இந்த ஆல்பமும் கிராமி அவார்ட் வின் பண்ணினது.

கடைசியா சொல்ல விரும்பறது. மொதல்ல சொன்னது தான் Music in Unison

.டால்கிங் டிம்பக்டு ல ஒரு பாட்டு, கொம்னி, (Ry Cooder & Ali Farka Toure: Gomni ) இதக் கேட்ட முடிச்ச பின்னாடி, மூணு பாட்டு வெவ்வேறு கால கட்டத்துல பண்ணினது நினைவு வந்துச்சு .

Gomni : https://www.youtube.com/watch?v=W_uxPcz9tgk

ஒண்ணு. Gori Tera Gaon Bada Pyaara – Chitchor ரவீந்திர ஜெயின், மல்கௌன்ஸ் ராகத்துல பண்ணினது. சூப்பர் டூப்பர் ஹிட், நம்ம ஜேசுதாஸ் சார் திருக்கோவில தெருக்கொவிலேனு பாடினார், எம் எஸ் வி தாத்தா திட்டி விட்டாரு. நானும் மலையாளி தான், தமிழ கத்துட்டு வானு அனுப்பிவிட்டாரு. அவரும் ஒரு hiatus எடுத்துக்கிட்டாரு, ஹிந்திக்குப் போனாரு, சூப்பர் ஹிட் ஆனாரு, தமிழ்ல தெய்வம் தந்த வீடு பாட்டு மூலமா எம் எஸ் வி யே கம் பேக் சாங் கொடுத்தாரு.

Gori Tera Gaon Bada Pyaara – Chitchor: https://www.youtube.com/watch?v=tA9ZgeE1fcA

ரெண்டாவது, செவ்வானம் சேலை கட்டி சாங், மொழி படத்துல ,எனக்கு புடிச்ச வித்யாசாகர்.

Mozhi | Sevvaanam Selai Katti : https://www.youtube.com/watch?v=jVej0oUCJwA

அப்புறம், தாவணி போட்ட தீபாவளி, அது Gori Tera Gaon Bada Pyaara – Chitchor ல இருந்து சுட்டது, எதுக்கும் கணக்குல எடுத்துக்கலாம், இல்ல வேண்டாம்.

ஸோ இந்த மூணு பாட்டுக்கும் என்ன தொடர்பு? எனக்குத் தெரிஞ்சு இந்த கேசுல யாரும் யார் கிட்ட இருந்தும் இன்ஸ்பயர் ஆகல. எங்கயோ மாலில இருக்கற மியூசிக், நார்த் இந்தியால இருக்குற மியூசிக், தமிழ் நாட்டுல இருக்குற மியூசிக். எல்லாம் ஒரே எடத்துல கன்வெர்ஜ் ஆகுது. அதான் நல்ல மியூசிக்!!

https://www.youtube.com/watch?v=_-cB62Mvakk

Lemme quit rambling, happy listening!!

Omara “Bombino” Moctar is an internationally acclaimed Tuareg guitarist and singer-songwriter from Agadez, Niger. His music frequently addresses Tuareg geopo…
Advertisements