நேத்து ஆஃபீஸ்ல ஒரு அமெரிக்கர் கிட்டக்க ஒரு டாஸ்க் செய்யச் சொல்லிருந்தேன், ரெண்டு மணி நேரத்துக்கு அப்புறம் பிங்க் பண்ணி முடிச்சாச்சான்னு கேட்டேன். அவர் இங்க ஆள் குறைப்பு நடந்துகிட்டு இருக்கு, நெறைய பேரு கொஞ்ச நாளைக்கு முன்னால தான் அவங்களுக்கு வேலை போயிருச்சுன்னு கேள்விப்பட்டாங்க, அவங்களோட வேலை எல்லாம் இந்தியாவுக்குப் போகுதுன்னு சொன்னாரு .ஸோ, யார் இப்ப டீம்ல இருக்காங்கன்னு தெளிவாத் தெரியல கொஞ்சம் டைம் கொடுங்க, செக் பண்றேன்னு சொன்னாரு .நானும் விட்டுட்டேன், நானும் ஒரு இந்தியன் , என்ன நெனச்சிருப்பாரோ ?இதப் பத்தி நான் எழுதப் போறதில்ல, அமெரிக்கால அவங்க அன்றாடம் பாக்கற விஷயம் இது, ராபர்ட் க்ரே ஒரு பாட்டுல இதப் பத்தி எழுதினாரு, அவங்க மியூசிக்ல அடிக்கடி இந்த மாதிரி விஷயங்களப் பதிவு பண்ணிடுறாங்க. அவங்களோட வீழ்ச்சிய, சமுதாய மாற்றங்கள மியூசிக்ல சொல்லிகிட்டே வர்றாங்க. Sam Cooke’s “A Change is gonna come” ஒரு கருப்பரா அவர் வளர்ந்து வந்த காலகட்டம், அவர் சந்திச்சப் பிரச்சினைகள் பத்தின ஒரு டாகுமெண்ட் .அங்க இருந்த ஃபோல்க் ஆர்டிஸ்ட்ஸ் நெறைய பொலிடிகல் விஷயங்கள அவங்க மியூசிக்ல சொன்னாங்க.

இதுக்கு தான் Independent Music வேணும். இந்த மாதிரி நம்ம வாழ்க்கைல நடக்கற நெறைய விஷயங்களப் பதிவு பண்ணலாம். சினிமால இதுக்கு எல்லாம் ஒரு எழவும் எடமே கெடையாது. உடனே வைரமுத்துவோ, இல்ல அவரோட புள்ளையாண்டனோடபாட்ட ஷேர் பண்ணாதீங்க. மியூசிக்ல எதுக்கு இப்டி கருத்து சொல்லிக்கிட்டு, ரசிக்கற மாதிரி இசை இருந்தா போதாதான்னு கேட்டா, இசை ஒரு வாகனம் தான், உணர்வுகள, கலைஞனோட எண்ணங்களைக் கடத்துற வாகனம் அது. அதுல என்ன விஷயம் வேணும்னாலும் சொல்லலாம், நம்மளோட கார்ப்பரேட் லைஃப் பத்திக் கூடச் சொல்லலாம் .பொதுவெளியில இருக்கறதுக்கு நேர் மாறா ஒரு விஷயத்துக்கு இன்னொரு பிம்பம் இருக்குதுன்னா அதப் பத்தி தாராளமா பாட்டு எழுதலாம், மியூசிக்ல சொல்லலாம். இந்த மாதிரி விஷயங்கள் தான் பிரதானமா இருக்கணுமான்னு கேட்டா, இன்னிக்கு எனக்கு பிரதானாமாப் படற விஷயம் இது, ஏன் நம்ம லவ் பத்தியே இன்னும் அழகா, உருப்படியாப் பாட்டு எழுத மாட்டேங்கறோம் .

Take a listen :Paul McCartney’s All My Loving
Joni Mitchell’s All I want

சும்மா ஹீரோ, ஹீரோயினோட காதல், பிரிவு, இன்னொரு வகை நம்ம கவிஞர்களோட சிறப்பம்சம், விரக தாபம், அப்புறம் ஹீரோவோட ஏற்ற தாழ்வு, அவ்ளோ தான், சினிமாப் பாட்டு. இத எழுதறதுக்கு எதுக்கு தெறமை இருக்கற எல்லாரும் சினிமாக்குப் போகணும்? Independent Music மேல கொஞ்சம் ஆர்வம் காட்டலாமே? இவ்ளோ பெரிய மாநிலத்துல எவ்வளவோ விஷயங்கள் அன்றாடம் நடந்துகிட்டு இருக்கு, அதப் பத்தி மியூசிக்ல எழுதத் தான் ஆட்கள் இல்ல.சில பேர் தேடி Independent Music பண்ற பசங்களக் கேக்குறதப் பாக்கறேன் .ஆனா பண்ண தான் ஆட்கள் இல்ல. நம்மளோட ஒரு வரலாற்று சம்பவமாது இசைல பதிவு பண்ணப்பட்டிருக்கான்னு பாத்தா ஒண்ணும் பெருசாத் தேறாது .கோடம்பாக்கம் மேல இருக்கற கவர்ச்சி போகணும்.என்னோட நார்த் இந்தியன் ஃப்ரெண்ட்ஸ் கிட்டக்கக் கேட்டா அட் லீஸ்ட் ரெண்டு மூணு இந்தியன் பேண்ட்ஸ் பேரு அவங்க கேட்டு வளர்ந்ததாச் சொல்வாங்க. இங்க நம்ம ரகுமான் ,ராசா தான் எல்லாம் .சில பேர் பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணும்னு சீரியஸ் இலக்கியம் தாம் பண்ணுவோம்னு திரியறாங்க, ஆனந்த விகடன் கூட நிப்பாட்டிருவாங்க ரசனை எலை நாலு விட்டதுக்கு அப்புறம் .சுஜாதாவ குறுக்குவெட்டுத் தோற்றம் பண்ணி விமர்சனம் எழுதுவாங்க .இந்த வைராக்கியம் நம்மாளுங்களுக்கு Independent Music மேல இல்ல. ஆப்பசிட்டா சினிமாக்கு தான் பாட்டு எழுதுவோம், மியூசிக் போடுவோம். தமிழ் சினிமா இசை “தலைத்தொங்கட்டும்”

Lyric Video for “A Change Is Gonna Come” performed by Sam Cooke. Directed & Produced by: Robin Klein, Mick Gochanour, Hector Sanitizo Video Editor: Andre…
youtube.com
Advertisements