24 படத்துல ஒரு பாட்டு, அது இந்தப் பாட்ட ஞாபகப்படுத்திருச்சு . ரெண்டு நாளா இத எழுதணும்னு நெனச்சி இப்போ தான் என்ன எழுதணும்னு தோணிச்சு. ரெண்டு நாளா ரஹ்மான் சாங்க்ஸ் மட்டும் தான் கேட்டேன் .இன்னிக்கு மத்யானம் நானும் அப்பாவும், Taal , Bombay னு ஒரு ரவுண்டு வந்தோம், அப்பா உணர்ச்சிவசப்பட்டு MSV க்கு அப்புறம் ரஹ்மான் தான்டா, இன்னும் எங்கயோ போயிடுவான்னு சொன்னார். இந்தப் படத்துக்கு ரஹ்மான் அவசியமான்னு நான் கேக்கப் போறதில்ல. அது அவரோட தனிப்பட்ட முடிவு. நான் ஷேர் பண்ணிருக்கற பாட்டக் கேளுங்க. செம்மத்தனமான ரிகார்டிங். சவுண்ட்ஸ் அரேஞ் பண்ணின விதமே செம்மையா இருக்கும். கோரா மாதிரி ஆப்ரிக்கன் வாத்தியம்லாம் வாசிக்கல. மிகச் சாதாரணமான ஒரு மெலடி அதுக்கு மேல ரஹ்மானோட மேஜிக் .தீண்டாய் பாட்டு. அது என்ன ராகம்னு (ஸ்ரீ ராகம் னு படிச்சிருக்கேன்) கூட நமக்குத் தேவை இல்ல. திறக்காத காட்டுக்குள்ளே பாட்டும் ஒரு அமர்க்களமான ராகத்தில இருந்து வந்தது, அப்புறம் ரஹ்மான் சேர்த்த சின்ன சின்ன சவுண்ட்ஸ் (என் பேவரிட் ஆனோம்,நாணம் க்கு அப்புறம் வர்ற அந்த எலெக்ட்ரிக் கிட்டார் கார்ட் சீக்வன்சஸ்) எல்லாமே மேஜிக் . Taal இன்னிக்கு கேக்கும் போது, அந்த அரேஞ்மென்ட்ஸ்லாம் எங்கயோ இருக்கு. அதுவும் Taal ல இஷ்க் பினா பாட்டுல வர்ற பிரிட்ஜ் செக்ஷன், கிரியேட்டிவிட்டியோட உச்சம். idea after idea

அப்புறம் என்னோட வழக்கமான பொலம்பல் .கடைசி வரைக்கும் ரோஜா, பாம்பே னு சொல்லிக்கிட்டு இருக்கப் போறோம்.

பதேர் பாஞ்சாலி மாதிரி ஒரு முழுமையான படம் (??) ஒரு நாள் தமிழ்ல வரும் போது அதுக்கு மியூசிக் திருஷ்டி பரிகாரம் மாதிரி இருக்கப் போகுது.

‘Tu Bin Bataye’ from ‘Rang De Basanti’, is an emotional ride into love, life and friendship. The movie is a new-age patriotic drama, directed by Rakeysh Ompr…
Advertisements