ஒரு இசைக்குழு சிறந்து விளங்க அதிலிருக்கும் ஒவ்வொருத்தரும் ஒரே வைப்ல் (Vibe) இருக்க வேண்டும். நிர்வாணா மாதிரி பேண்டுக்கு அது போதும். எனக்கு மிகவும் பிடித்த பேண்ட் Tedeschi Trucks Band (TTB) .இவர்கள் R & B ,Soul , Rock , Blues ,Jazz , Qawwali , Gospel மாதிரி ஏகப்பட்ட இசையின் தாக்கத்தில், அவர்களின் இசையை உருவாக்குகிறார்கள்.இவர்களுக்கு பேண்டில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒரே மாதிரியான மியூசிக்கல் சென்சிபிளிட்டியைக் கொண்டிருக்க வேண்டும் . உதாரணத்துக்கு கிட்டாரிஸ்ட் டெரக் ட்ரக்ஸ் ஒரு நஸ்ரத் ஃபட்டே அலி கான் பாடலை வாசிக்கப் போகிறார் என்றால் பேஸ், பெர்கஷன் வாசிக்கிறவர்கள் எல்லாரும் ஒரே அலைவரிசையில் இருக்க வேண்டும், குறைந்தபட்சம் Qawwali பற்றி ஒரு நல்ல சென்சிபிளிட்டியாவது இருக்கவேண்டும் .

ரஹ்மான் நமக்கு பிரம்மாண்டமாய்த் தெரிந்து, மிகப் பிரம்மாண்டமாய்த் தெரிந்து இப்போது சமயங்களில் சாதாரணமாகத் தோன்றுகிறார் . எனக்குக் கண்டிப்பாக இப்போது ரஹ்மான் சாதாரணமாகத் தான் தோன்றுகிறார் .இதைப் பற்றி இன்னொரு நாள் எழுதுகிறேன் .இப்போது இன்னொருவரைப் பற்றி எழுதப் போகிறேன். ரோஜா , திருடா திருடா , Taal ,உயிரே ஆல்பங்களை நினைக்கும் போது ரஹ்மான் நிச்சயமாக மிகப் பிரம்மாண்டமாய்த் தெரிகிறார் .ரோஜா வெளிவரும் நேரத்தில் என்ன மாதிரியான மனநிலையில் இருந்திருப்பார் என கணிக்க முடியவில்லை. ஏனெனில் நிறைய விஷயங்களை புதிதாகச் செய்யப் போகிறார். எமினெம் லிரிக்ஸ் தான் ஞாபகம் வருகிறது

Look, if you had, one shot, or one opportunity
To seize everything you ever wanted. In one moment
Would you capture it, or just let it slip?

கண்டிப்பாக அப்போது இருந்த ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரி ஒரு கமர்சியலான ஆல்பம் பண்ணியிருக்கக் கூடும். ரஹ்மான் செய்தது Reggae Based Bass-lines , Operatic சிங்கிங் , 80’s ராக் பேண்ட் மாதிரி எலெக்ட்ரிக் கிட்டார் . இதை எல்லாம் மீறி முடிந்தவரை ஏதாவது ஒரு கர்னாடக சங்கீத ராகத்தில் இருந்து மெட்டு அமைக்க முயற்சிக்கிறேன் என்று அப்துல் ஹமீத் நேர்காணலில் சொல்கிறார் .இப்படி ஏகப்பட்ட மியூசிக்கல் சென்சிபிளிட்டியுடன், கனவுகளுடன் இருக்கும் ஒருவருக்கு அமைகிற பேண்ட் ரொம்ப முக்கியம். சந்திரலேகா பாடலுக்கு அனுபமா இல்லாவிட்டால் ரஹ்மான் அந்த பாடலைச் செய்திருக்கவே முடியாது. இப்போது ரஹ்மானுக்கு ஒரு ப்ளுஸ் or ஜாஸ் பீஸ் பின்னணி இசைக்குத் தேவைப் படுகிறதென்றால் ஏகப்பட்ட செஷன் ஆர்டிஸ்ட்ஸ் இருக்கிறார்கள். ஒரு பிரபலமான ஆர்டிஸ்ட் கூட வாசித்துவிட்டுப் போகலாம் .உதாரணத்துக்கு Orianthi for Sadda Haq , Guy Pratt for Dil Se re

அந்த வகையில் ரஹ்மானுக்கு வாய்த்த ஒரு அட்டகாசமான பேஸிஸ்ட் கீத் பீட்டர்ஸ் .
கீத் மாதிரி ஆட்கள் ரஹ்மானின் ஆரம்ப காலத்தில் பேண்டில் இல்லாமல் ரஹ்மான் இப்படி ஒரு சாதனையை தமிழ் நாட்டில் ஏற்படுத்தி இருக்கமுடியாது. ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால் கீத் பற்றி இணையத்தில் அவ்வளவு தகவல்கள் இல்லை, ஸ்கூல், காலேஜ் காலத்தில் ஆடியோ கெசட் கவரில் அவரின் பெயர் பார்த்த ஞாபகத்தில் எழுதுகிறேன் .அது போக ஒரு சில படங்கள் தவிர கீத் தான் ரஹ்மானின் ஆஸ்தான பேஸிஸ்ட் . திருடா திருடாவில் வரும் தீ தீ பாடலுக்குப் பிறகு தான் கிட்டார் மீது எனக்கு மோகம் ஆரம்பித்தது, அது பேஸ் கிட்டார் என்று அப்போது தெரியாது, காலேஜ் படிக்கும் போது மெட்ராஸ் போன பிற்பாடு பேஸ் கிட்டார் கற்றுக் கொள்ளவேண்டுமென ஒரு கனவே இருந்தது .ஒரு வகையில் கீத் தான் எனக்கு முதலில் அறிமுகமான கிட்டாரிஸ்ட் .இப்போது அமெரிக்க, பிரிட்டிஷ் கிட்டாரிஸ்ட்ஸ் போக ஆப்ரிக்கன் (ஃமாலியன்) கிட்டாரிஸ்ட் கூட அத்துப்படி .எனக்கு அந்நிய இசை சென்னை வரும் வரை நிறைய அறிமுகமாகவில்லை, எங்கள் வீட்டில் நான் காலேஜ் படிக்கும் வரை டிவி இல்லை. அது ஒரு காரணமாக இருக்கலாம். ஒரே வடிகால், ஒரு சின்ன ஃபிலிப்ஸ் டேப் ரிகார்டர் ,ஆடியோ கெசட்ஸ் .ரஹ்மானின் வழியாகத் தான் எனக்கான இசையைத் தேட ஆரம்பித்தேன் .கீத் போன்றவர்கள் எனக்கு அவ்வளவு பரிச்சயம் ஏதோ நேரில் சந்தித்த மாதிரி ,கெசட் கவரில் யார் பாடியது தவிர பேஸ், கிட்டார், கோரஸ், வோகல் ஹார்மனி , அரேஞ் பண்ணியது என்று பார்ப்பதில் ஒரு ஈடுபாடு .

பெரும்பாலும் ஒரு பாடலின் ரிதம் செக்ஷனில் பீட்ஸ் கணக்கை உணர்த்திச் செல்வதற்கு பேஸ் கிட்டார் வரும். ஒவ்வொரு இசைக்கும் ஒவ்வொரு வகையான முறை உண்டு. ஒரு ஹார்மனியை உருவாக்குவதற்கு பேஸ் கிட்டார் உதவுகிறது .ஒரு லீட் கிட்டாரிஸ்ட்க்கு இருக்கும் புகழ் இவர்களுக்குக் கிடைக்காது. “மாப்ள பேஸ் ஏத்தி வை” அல்லது “சில்நெஸ் கொறச்சு வை” இது சாதாரணமாக பாட்டு கேக்கும் போது எங்க ஊர் பக்கம் நான் கேட்டிருக்கிற ஒரு காமெண்ட். இதை எல்லாம் தாண்டி ரஹ்மான் என்கிற பிரம்மாண்டத்தின் உருவாக்கத்தில் கீத் ஒரு பில்லர் . சரி, எனக்குப் பிடித்த சில பாடல்களைப் பற்றிச் சொல்கிறேன், முடிந்த அளவுக்கு “2:04 பாஸ் பண்ணிக் பேஸ் கேளுங்க” போன்ற போதனைகள் இல்லாமல் எழுத முயற்சி செய்கிறேன் .

ரோஜாவின் எல்லா பாடல்களும் என்னோட ஃபேவரிட். குறிப்பாக சின்ன சின்ன ஆசை, தமிழ் சினிமாவில் பேஸ் கிட்டாருக்கு அது வாட்டர் ஷெட். அந்த Reggae ஃபீல் கொடுக்கிறது கீத்தின் பேஸ் கிட்டார்!

தீ தீ (திருடா திருடா) : தமிழ் சினிமா இசையில் கீத்தின் மாஸ்டர் பீஸ்.வேற வழி இல்லை, 1: 30

https://www.youtube.com/watch?v=bjnZnpuJT6k

காதல் சடுகுடு, பச்சை நிறமே (அலைபாயுதே)

கண்ணாலனே (பம்பாய்):

0:35 க்கு அப்புறம், சித்ரா, கீத் பீட்டர்ஸ் தான். எவ்வளவு கச்சிதம், அப்புறம், மெல்ல யுகுலேலே மாதிரி ஏதோ ஒரு ஸ்ட்ரிங்ஸ் கூடவே வரும், ஒரு ரிதம் கிட்டாரிஸ்ட் (Chord Progression) வேலையை கீத் பீட்டர்ஸ் பேஸில் பண்ணிருப்பார். ரஹ்மான் வாய்சில் அந்த கோரஸ் செக்ஷனிலும் கவனித்தால் கீத் பீட்டர்ஸ் snapping அட்டகாசமாக பண்ணிருப்பார். பாடலில் தப்லா தவிர்த்து பார்த்தால் பேஸ் கிட்டார் இவ்வளவு அட்டகாசமாக பயன்படுத்திய வேறு பாட்டை யோசிக்கவே முடியவில்லை .MSV யின் ஃபேவரிட் கூட இந்த பாடல்.

https://www.youtube.com/watch?v=A3-W2D1Bqr0

ஊர்வசி ,முஸ்தஃபா மாதிரி ஏகப்பட்ட Groove/riff பண்ணியிருக்கிறார் .

Osaka Muraiya (One 2 ka 4) : பாட்டின் ஆரம்பம் முதலே அட்டகாசமான க்ரூவ் .just funk

https://www.youtube.com/watch?v=lAzlzNMo_rc
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் : டைட்டில் சாங்.

அதிசய திருமணம் :பார்த்தாலே பரவசம்

பூவுக்கென்ன பூட்டு (பாம்பே ): என்னோட ஃபேவரிட் , slapping டெக்னிக்

https://www.youtube.com/watch?v=uMgd3Y_qpQU

4:14 க்கு அப்புறம்

அப்புறம் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும் .சரவண கணேஷ் .

பத்தோடு பதினொன்னா இருக்காமல் தன்னாலான ஒரு சின்ன மாறுதலாவது இந்த ஃபேஸ்புக்கில் கொண்டு வந்ததுக்காக .நல்ல ஹெட்செட்டில் பாட்டு கேக்க சிலரை இன்ஸ்பயர் பண்ணியிருக்கிறார் .

சுதீப் ஆடியோ சேனல் மாதிரி ஏதாவது ஆரம்பித்து இந்த மாதிரி ஆட்களை இண்டர்வியு செய்ய வேண்டும். ஒரு ஃ பேஸ்புக் பிரபலம் ஒத்தாசை இருந்தால் சரவண கணேஷ் ஆரம்பித்து கீத் பீட்டர்ஸ் வரை நேர்காணல் எடுத்துவிடலாம். எவ்வளவோ டெக்னிசியன்ஸ் பற்றித் தெரியாமல் இருக்கிறோம். எனக்கு ரஹ்மான் அளவுக்கு கீத் பீட்டர்ஸ் முக்கியம்.

சுபம்

SudeepAudio.Channel : https://www.youtube.com/watch?v=MF_JSEce0Ws

Advertisements