ஒரு படத்தோட டைரக்டர் visionary ஆக இருந்தால் படத்தோட மியூசிக் அலுப்பூட்டாதுன்னு ஸ்ரீதர் படங்களப் பார்த்தாலே தெரியும் .ஒரே ஸ்க்ரிப்ட் ரெண்டு மியூசிக் டைரக்டர்ஸ் கிட்டப் போகும் போது வேற வேற மாதிரி தான் மியூசிக் அமையும். ஒரே ஸ்க்ரிப்ட் ரெண்டு டைரக்டர்ஸ் கிட்டப் போனால் ? ஒரு ஸ்க்ரிப்ட ஸ்கார்சேசி கிட்டயும், நோலன் கிட்டயும் போகும் போது கண்டிப்பா வித்யாசம் இருக்கும்.ரேஜிங் புல் ஸ்க்ரிப்ட் வேற யார் கிட்டயும் போனா அந்த மாதிரி படம் வந்திருக்குமான்னு தெரியல .எடுத்த எடுப்புலயே Black n white, ரிங்குக்குள்ள டிநீரோ தனியா, சுத்தி இருக்கிற ஆடியன்ஸ் எல்லாம் silhouette ல ,அந்த கிளாசிகல் மியூசிக்!!!இந்த ஸ்க்ரிப்ட் நூறு பேர் கைல போயிருந்தாலும் ரேஜிங் புல் மாதிரி இருந்திருக்காது. சரி வேற எங்கயோ போறேன், விஷயம் இதான் , மியூசிக் கண்டிப்பா மாறுபடும், தமிழ்ல எனக்குத் தெரிஞ்சு ஒரே ஸ்க்ரிப்ட் ரெண்டு மூணு டைரக்டர்ஸ் கிட்ட போனாலும் ஒரே தரத்துல தான் இருக்கும். சாங்க்ஸ் பத்தி மட்டும் இல்ல. பின்னணி இசை, இப்ப முன்னணி இசைன்னு புதுசா சேர்த்திருக்காங்க. ஸோ, அதெல்லாம் தான் .
ரே, ஈஸ்ட் வுட் மாதிரி ஆளுங்க மியூசிக் கூட பண்ணுவாங்க. சாருலதா படத்துக்கு ரேயோட மியூசிக் அவ்வளவு கரெக்டா பொருந்திருக்கும். ஒரு டெஸ்ட் மேட்ச்ல ட்ராவிட் மாதிரி .டெஸ்ட் மேட்ச் மாதிரின்னாலும் எனக்கு ரொம்ப புடிச்ச படம்.
Lemme get this out quickly, before I get sidetracked..

https://www.youtube.com/watch?v=935jBptczUg

இதக் கட் பண்ணிப் போடலாம்னு தான் பாத்தேன், நீங்களே ஃபார்வேர்ட் பண்ணிப் பாத்துக்கோங்க .பிட்வீன் 01:10:30 – 1:17:00 ஸ்ரீதர் + எம் எஸ் வி. செம்ம ஸ்கோர் இது. மொதல்லையே impending action எம் எஸ் வி சில Cues ல உணர்த்திருப்பார். அந்த டபுள் பேஸ்!!!! சான்சே இல்ல. இந்த மாதிரி ஆங்கிள்ள கேமரா!!அதுவும் அந்த மாடிப்படில ஏறும் போது உள்ள கேமரா பொசிஷன் லாம் செம்ம .ஒரு வழக்கமான சீன பெரிய எக்ஸ்சைடிங் சீனா மாத்திட்டாங்க ரெண்டு பேரும்.

சில பேர் தங்களோட டீனேஜ், காலேஜ் டேஸ் ஞாபகார்த்தமா சில பாடல்கள ஷேர் பண்ணிப் பார்த்திருக்கேன் . சமயத்துல தேவா, சிற்பி, பரணி இசையமைச்ச பாடல்களெல்லாம் வரும். எல்லாமே எங்கேர்ந்தாவது உருகினதாக இருக்கும். கேக்கறவங்கள என்ன சொல்ல முடியும், நான் கூட தான் காலேஜ் முடியறவரைக்கும், தமிழ் பாடல்கள் மட்டும் தான் கேட்டுட்டு இருந்தேன் .காலேஜ் முடியற தருவாயில தான் எங்க வீட்ல டி வியே வந்தது, கொஞ்ச நாள்லயே ப்ளாக் சேபத் அப்புறம் கொஞ்சம் ப்ரொக்ரசிவ் ராக் பேண்ட்ஸ் மேல் ஈர்ப்பு ஏற்பட்டது எனக்கு. எனக்கும் யாராவது ஸ்கூல் , காலேஜ் படிக்கும் போதே பீட்ல்ஸ், பாப் டிலன், சைமன் அன் கார்ஃபன்கெல், மார்க் நாப்ஃலர் etc ….அறிமுகம் கொடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்.

நான் கண்டிப்பா திருடா திருடா எனக்கு அடுத்த ஜெனரெஷனுக்குக் கொண்டு போவேன் .நினைத்தாலே இனிக்கும் (1979), அப்புறம் இப்போ நான் தீவிரமா ஃபாலொவ் பண்ற வாரென் மெண்டொன்சா . இந்தப் படைப்புகளோட டைம்லெஸ்னஸ் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, நல்ல மியூசிக் தன்னாலேயே ரிஜூவநெய்ட் ஆகிடும் .என் அப்பாவோட வைனல் கலெக்ஷன்ல இருந்து இந்தப் பாட்டு கேட்டேன்னு சில அமெரிக்க பசங்க பெருமையா காமெண்ட்ஸ் போடுவாங்க யூ ட்யூப்ல. என் பையனுக்கோ பொண்ணுக்கோ என்னோட கலக்ஷன்ல எத்தனை தமிழ் பாட்டு தேறும்னு தெரியல. ஒரு பத்து பாட்டு தேறலாம், அதுக்கு அப்புறம், ப்ளூஸ், ஜாஸ், ஃபோல்க், ஆர் அன் பி, ராக் னு போகும். அவ்ளோ தானா? மிகப் பழமையான, பாரம்பரிய இசை நம்முடையது .வேத காலம், புராண காலத்துல இருந்து நம்மளோட இசை வற்றாம வந்துகிட்டு இருக்கு, John McLaughlin, Ry Cooder போன்ற ஆட்கள் எல்லாம் தேடி வர்றாங்க நம்ம இசைக்கு. ஆனா நம்ம?? வெஸ்ட்லையும் எல்லாரும் பழசைத் தேடித் போவாங்கன்னு சொல்ல வரல, ஆனா ஒரு Sizable கூட்டம் இருக்கு. இங்க மாதிரி இல்ல.அங்க நல்ல இசை மெயின்ஸ்ட்ரீம்ல இருந்திகிட்டே வந்திருக்கு. யாராவது ஒருத்தங்க அந்த டார்ச்ச எடுத்துகிட்டு போறாங்க. பாப் டிலன், நீல் யங், ஜானி மிட்சல் மாதிரி பாட்ட கேட்டதுக்கு அப்புறம், நம்மளோட எண்ணங்கள், பார்வைகள் , சமயத்துல வாழ்க்கை முறையே மாறிப் போகிற மாதிரி யாரும் பாட்டு எழுதறது கெடையாது .சந்திரனைத் தொட்டது ஆர்ம்ச்ற்றாங்கா? இல்ல நான் தான்னு ஒரு அரிய கண்டுபிடிப்ப நமக்கு சொல்றாங்க, இல்ல நிலவுல ஆக்சிஜன் நிரப்பறேன்னு காதலை அறிவியலோடு அவிக்கறாங்க. பின்ன எப்படி எனக்கு அடுத்த ஜெனரேஷனுக்கு இந்தப் பாட்டெல்லாம் எடுத்திக்கிட்டுப் போக முடியும். மியூசிக்ல செமத்தனமான பேஷன் வேணும், எனக்கு இந்த மாதிரி ஆர்டிஸ்ட் மட்டும் இன்ஸ்பிரேஷன் கிடையாது. கிரீன் பார்க்ல கீ போர்ட் வாசிச்சுப் பாடற, ரேமண்ட்ஸ், அவர் கூட ட்ரம்பெட் வாசிக்கிறவர் கூட இன்ஸ்பிரேஷன் தான். ஒரு நாள் அவ்ளோ பெரிய லாபில யாருமே கேக்க இல்ல, இவங்க ரெண்டு பேரும் ஒரு ஸ்டீவி வொண்டர் பாட்ட ப்ளே பண்ணிக்கிட்டு இருந்தாங்க, அது கொளுத்தற சம்மர்ல, தண்ணிப் பஞ்சத்துல எவனோ குழாயைத் தொறந்து விட்டுப் போன மாதிரி இருந்தது .அப்புறம் நான் போய் பீட்ல்ஸோட ஹே ஜூட், கேரி மோரோட ஸ்டில் ஐ காட் த ப்ளூஸ் பாடச் சொல்லி கேட்டேன் .

திருச்சில ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி எங்க மாமாவோட பக்கத்துக்கு ரூம் காரங்க கல்யாணத்துல கச்சேரி வாசிக்கறவங்க, எங்க மாமா யாதும் ஊரே யாவரும் கேளீர் பாட்டு வாசிங்க இன்னிக்குன்னு சொன்னதுக்கு , ஓசில மங்களம் பாடறவனுக்காக (மிஞ்சிப் போனா ஒரு க்வாட்டர் வாங்கிக் கொடுத்திருப்பான் )ஒரு கீ போர்ட் எக்ஸ்ட்ரா ரெடி பண்ணி , பாட்டோட லீட், அரேஞ்மென்ட்ஸ்லாம் கஷ்டப் பட்டு எடுத்து மேடைல வாசிச்சாங்க .அதான் பேஷன். அந்தக் கிட்டாரிஸ்ட்கு ஒரு விரல் கெடையாது .எனக்கு தெரிஞ்சு ப்ளாக் சேபத் கிட்டாரிஸ்ட் டோனி ஐயோமிக்கும் அவரோட ரெண்டு விரல்களோட நுனி இல்ல, சின்ன வயசுல ஒரு ஆக்சிடண்ட்ல போச்சு .
Both are Legends! Lot to loiter over this grey area……

Nebraska -01.Their Pie
https://www.youtube.com/watch?v=4gB7icns1F4

Advertisements