பீட்ல்ஸ் ஸ்டீவ் ஜாப்ஸ் அவரோட பிசினஸ் மாடலுக்கு எவ்ளோ இன்ஸ்பையர் பண்ணிருக்குன்னு ஒரு வீடியோ இருக்கு. கேட்டுப் பாருங்க. என் வாழ்க்கைலயும் பீட்ல்ஸ் மாதிரி மியூசிக் இன்ஸ்பையர் பண்ணிட்டே இருக்கு. எனக்கு HP ல லாஸ்ட் வொர்கிங் டே. good bye ஈமெயில் ஒண்ணு எழுதினேன் .அதுலயும் பீட்ல்ஸ் பாட்டு ஒண்ணு மென்ஷன் பண்ணேன் .”Life is what happens to you while you’re busy making other plans.”- Beautiful Boy . மெயில் போட்டுக் கொஞ்ச நேரம் கழிச்சு என் ப்ரெண்ட் ஜான் சீட் பக்கம் வந்தேன், வேற ஏதோ ராக் சாங் கேட்டுகிட்டு இருந்தான் .மச்சி நீ பாட்டுக்கு பீட்ல்ஸ் போட்டுப் போய்ட்ட. அப்டியே ஆரம்பிச்சு ஏதேதோ பாட்டு கேட்டுகிட்டு இருக்கேன்னு சொன்னான் .அந்த சந்தோஷம் போதும் .positive environment

(i) ராஜா (சாரப்) பத்தி அவரோட தீவிர ரசிகர்களை விட எனக்கு ரொம்ப அக்கறை இருக்கு.

(ii) என்னோட மியூசிக் டேஸ்ட் உங்க பார்வைக்கு கொஞ்சம் old fashioned ஆகக் கூட இருக்கலாம் .,Synth Pop , House மியூசிக் மேல எனக்கு அவ்வளோ ஈடுபாடெல்லாம் கெடையாது.,அதுக்காக அத சுத்தமா ஒதுக்கவும் மாட்டேன் .சுஜாதா எல்லா நல்ல எழுத்தாளரோட ஒரு படைப்பையாவது வாசிக்கணும்னு சொல்வாரு. எனக்கு மியூசிக் ல அப்படி தான் .என் கிட்ட எனக்கு புடிச்ச விஷயம் லாம், இந்த ஜஸ்டின் பீபர் மாதிரி ஆளுங்க மேலெல்லாம் எனக்கு கோவமே வராது. ஒரு தடவை Ozzy Osbourne னு ஒரு ஹெவி மெட்டல் தாத்தா கிட்ட ஒரு நிருபர், ஜஸ்டின் பீபர் பத்தி என்ன நெனைக்கிறீங்க னு கேட்டார். அதுக்கு அவர் “Who the **** is ஜஸ்டின் பீபர் னு கேட்டாரு 🙂 அது மாதிரி தான் .நான் கேக்கற contemporary bands “The Derek Trucks Band and Tab Benoit etc.. கொஞ்சம் பழசு தான் .

ஆனால் இந்த அனிருத் மாதிரி ஆளுங்கள விமர்சனம் பண்ணுவேன் , ஏன் அவரும் தான் இன்னிக்கு எந்த மியூசிக் vogue ல இருக்கோ அதத் தான பண்ட்றாருன்னுக் கேட்டா நான் என்ன பதில் சொல்ல. திருப்பி “தி ஜா” வோட quote பண்ணுவேன் . தி ஜா சொன்ன மாதிரி , எனக்கு தெய்வத்த பார்த்த மனநிலை வரல அவ்ளோ தான் .அது தான் சில பேரோட மியூசிக் கேக்கறப்போ எனக்கு ஏற்படுது. எழுதற எனக்கும் நான் சொல்லற விஷயத்துக்கும் உங்களுக்கும் எப்பவுமே சார்புத் தன்மை இருக்கணும்னு அவசியம் இல்ல. பட் எனக்கு அதுத் தேவைப்பபடுது. விமர்சனம் பண்ணுங்க. பட்,அதுக்கு முன்னாடி நான் கேக்கற கேள்வி இது தான். “Are my views and taste passé ? or yours ? இதுல தான் பெரிய இடைவெளி இருக்குறதா நான் feel பண்றேன் .ஸோ அதுக்கு அப்புறம் மாங்கு மாங்குன்னு எழுதி யூஸ் இல்ல.

சில மியூசிக் டைரக்டர்ஸ் மேல ஒரு எதிர்பார்ப்பு இருக்கறது ,அவங்களோட musical sensibilities தான் நான் வச்சிருக்கற அளவுகோல். அவங்க சினிமாக்குப் போய் உருப்படாம கூடப் போய்டலாம் , நிவாஸ் பிரசன்னான்னு ஒருத்தர் தெகிடில நல்ல பண்ணார். எப்படிப் போறாரோ.

Mainstream மியூசிக்னால தான் எவ்ளோ நல்ல ஆர்டிஸ்ட் பேர் வெளில தெரியாமப் போய்டுது .மஹெஷ் னு ஒரு 24 வயசுப் பைய்யன் கம்போஸ் பண்ணி பாடி ஒரு மொபைல் ரெகார்டிங் நேத்து ஈவினிங் போஸ்ட் பண்ணேன், என்ன சொல்ல, இந்த மாதிரி டேலன்ட் எல்லாம் ரொம்ப மிஸ் பண்றோம் .இல்ல ரொம்ப லேட்டா வெளிச்சம் படுது அவங்க மேல.

பெங்களூர்ல ஏன் ப்ரெண்ட் சௌவிக் பெங்காலி எனக்கு ஜீரோ , இண்டஸ் க்ரீட் , மாதிரி இந்தியன் பேண்ட் லாம் அவன் தான் அறிமுகப் படுத்தினான் .அதுனால தான் ராக் ஆன் மாதிரி படங்கள் அங்க வருது. Dil Chatha Hai, Rock On இங்க எடுக்கவே முடியாது. அந்த படம் நல்ல படமா, மொக்கையா அது உங்க இஷ்டம், அந்த Content , அவ்ளோ conservative ஆ நம்ம ?

ஒருத்தர் வந்து ராக், ப்ளுஸ், போல்க் பத்தி அறிமுகம் கொடுங்கன்னு கேட்டார் ,எதுக்கு வீண்வேலை. சுஜாதா கர்னாடிக் அறிமுகம் கொடுத்து எதனை பேரு சாமஜவரகமணா கேக்கறோம் .சுஜாதா ஒரு தடவ சொன்னார், வகுளாபரணம் மாதிரி சிக்கலான ராகங்கள் அவருக்கு சரியாய் கண்டுபுடிக்க முடியலன்னு..அப்போ தான் இந்த பாட்டு ஞாபகம் வருது .சம்போ சிவ சம்போ , சிக்கலான ராகம், MSV acid rock ட்ரீட்மென்ட் கொடுத்திருக்கார். அதுல வர்ற க்ரோமேடிக் கார்ட் ப்ரொக்ரஷன், பெர்கஷன் அரேஞ்ச்மென்ட் ,குட்டி எலெக்ட்ரிக் கிட்டார் லீட், ஸோலோ . ரஹ்மானே அடிக்கடி சிலாஹிக்கற MSV யோட யாருமே கிட்டக்க நெருங்க முடியாத வாய்ஸ். இதெல்லாம் உள்ள பாட்ட விஜய் ஆண்டனி கொலை பண்றதப் பாத்தா என்னாலத் திட்டாம இருக்க முடியாது. அப்படி ஆரம்பிச்சு அவன் கூட கம்போஸ் பண்ணற எல்லாருக்கும் சேர்த்து ஒரு மண்டகப் படி அவ்ளோ தான் .

பின் குறிப்பு :

 

எனக்கு இந்த The Derek Trucks Band அப்புறம் Ry Cooder ரொம்ப புடிக்கும், காரணம் என்னென்னா, அவங்களோட musical sensibilities காலேஜ் டேஸ் ல ரிச்சர்ட் பைன்மென் போல வாழ்க்கைய வாழணும்னு ஒரு ஆசை .இப்போவும் லைட்டா இருக்கு .அதுக்கு அப்புறம் Ry Cooder .ஏன் சொல்றேன்னு ஆர்வம் இருந்தா படிச்சு தெரிஞ்சுக்கோங்க . அதுக்கு தான் இளையராஜா பத்தி பேசும் போது ரிகார்ட் ப்ரடூசர் னு பொலம்பி தீர்த்தேன் .பாட்டம் லைன் இதான் இவங்களோட musical sensibilities . இந்த மியூசிக் தான்னு கெடையாது. மியூசிக் !! அவ்ளோ தான் .Ry திடீர்னு ஆப்ரிக்கால பாலில உள்ள Ali Farka Touré .அப்புறம் நம்ம விஸ்வ மோகன் பட் கூட சுதந்திரமா collaborate பண்ணுவார் .அப்புறமா அப்புறமா The Derek Trucks Band இந்த வீடியோ மேற்கொண்டு சொல்லும். மேன்டலின் ஸ்ரீநிவாஸ் to காஸ்பல் வரைக்கும் எல்லாமே மியூசிக் தான். ஒரு மனுஷனுக்குள்ள இவ்ளோ musical sensibilities அப்டின்னு நான் அடிக்கடி ஆச்சர்யப்படற ரெண்டு பேர் இவங்க தான் .

ஸோ இப்படி தான் அடிக்கடி எழுதுவேன் ,நீங்க snob னு என்ன சொல்றதுக்கு பெரிய வித்யாசம் கெடையாது .பட் அதுக்கு இந்தப் பக்கம் தான் நான் இருக்கேன் .My views and taste are passé னு சொல்றதுல கூட எனக்குப் பெரிய தயக்கம்லாம் இல்ல. snob னு சொல்றதுக்கு அது பரவால்ல .

Advertisements