“”நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம். வேறு பலர் செய்யும் பொழுது, நமக்கு இந்த அனுபவம் ஏற்படுவதில்லை. ஒரு சமயம் நாம் பிரமிக்கலாம். மலைக்கலாம். வியக்கலாம். நுட்பமான ரசானுபவம், தன்மறதி போன்ற உணர்வு நிலைகள் வருவதில்லை. கலைஞர் உணர்வு மயமாகி ஆகி ஆடும்போதோ, வாசிக்கும் போதோ, தானாக ஒரு முழுமையும் ஓர் ஒருமையும் அந்தக் கலைப்படைப்பில் நிறைந்து, நம்முள்ளேயும் பரவி நிரம்பும். உணர்வு இல்லாமல் இயந்திர ரீதியில் படைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சாமர்த்தியத்தையும் அசகாய சூரத்தனத்தையும் காட்டி நம்மைப் பிரமிக்க வைக்க முடியும், ஆனால் மெய்மறக்கச் செய்ய இயலாது. நான் இந்த நோக்கில்தான் எந்தக் கலைப் படைப்பையும் பார்க்கிற வழக்கம். சிறுகதையையும் அப்படித்தான் பார்க்கிறேன்.””.

இன்டர்நெட் வம்புல மாட்டிக்க கூடாது .ஏ ஆர் ரஹ்மான் , இளையராஜா சண்டைலாம் இணையத்துல யாகூல கொழுந்து விட்டு எரியும் போது ஓரமா உக்கார்ந்து மக்காச் சோளம் சாப்டவங்க நாங்க .இன்னிக்கு தமிழ்ல மியூசிக் விட FB ல இலக்கியம், இலக்கியவாதிகள் தான் vogue .

கொஞ்ச நாளைக்கு முன்னாடி “No Critic Ever Changed The World” னு ஒரு quote யாரோ ஷேர் பண்ணினாங்க. அது வாஸ்தவம் தான். ஆனா இங்க கிரிட்டிக்கே இல்லியே. சும்மா டெக்னிகல் இத்யாதிகளப் பேசறவங்களத் தான் இசை விமர்சகர்னு சொல்றோம். நான் புக் படிக்கறதுல ரொம்ப ஸ்லொவ். நான் வாங்கி வச்ச புக்ஸ் எல்லாம் பக்கத்துல இருந்த லெட் ஸேப்ளின் dvd கிட்டக்க பேசிட்டு இருந்தத ஒட்டுக் கேட்டேன் ” என்ன ஜீ , உங்களையும் இப்டித் தான் கன்னி கழியாம வச்சிட்டிருக்கானா இந்தப் பய”.

எவனாவது ஒரு புக் படிச்சிட்டு FB ல இந்தப் படைப்புல எனக்கு ஏற்பு இல்லன்னு சொன்னா உடனே தம்பி நீ வளரனும்,இத இப்படிப் பார்க்க கூடாது. நீங்க இத இப்படித் தான் பார்க்க வேண்டும் , அப்படிப் பார்க்க வேண்டும் னு உபதேசம் பண்றது .இந்த டெம்ப்லேட் வாசகங்களப் பார்த்தாலே எனக்கு குமட்டிட்டு வரும். வேணும்னா எழுதறவங்க இனிமேல் இந்த படைப்பை இப்படித் தான் பார்க்க வேண்டும், நாவலோட கடைசியில பிற்சேர்க்கையா glossary மாதிரி உங்க உபதேசங்கள அட்டாச் பண்ணிடுங்க .சமதளத்துல இருந்து விவாதிக்க மாட்டாங்க. கீழ தள்ளி விட்டு உபதேசம் தான் நடக்குது இங்க. அதே மாதிரி fb ல எழுதறவங்க முக்கால்வாசி பேரு விகடன் டைப் எழுத்துன்னு சொன்னாக் கூட குத்தமாகிடுது .அதுக்கு மூஞ்சியத் தூக்கி வச்சிடறாங்க .நான் சொல்றது பெரிய இலக்கியம் எழுதறப் படைப்பாளிகளச் சொல்லல. இந்த ரெண்டு நாவல் எழுதிட்டு இருக்கறவங்க , FB ல ஆர்வத்துல எழுதரவங்களப் பத்தி மட்டும் தான் .இந்த மாதிரி கன்ஸ்ட்ரக்டிவ் ஃபீட்பேக் கொடுக்கறவங்களையும் கலாய்ச்சு அனுப்பிட்டா? நாங்க தான புக் வாங்கிப் படிக்குறோம் .இல்ல fb படிச்சுட்டு நல்லா இருக்குன்னு சொல்றோம் .எல்லாருமே ஜட்ஜ்மெண்டலா இருக்காங்க .ஜல்லிக்கட்டு மாதிரி எந்த சென்சிடிவ் விஷயம் வந்தாலும் உடனே பாஞ்சிடறது .கொளந்த மாதிரி நிதானமா யோசிச்சு எழுதறது கெடையாது .எனக்கு ஒண்ணு புரியல .கொஞ்சம் எழுத ஆரம்பிச்ச உடனே விழுமியம் மாட்டுக் கோமியம்னு எழுதிட்டு இலக்கிய வாதி முகம் வச்சுக்கறது. அதுக்கு தான் தி ஜா quote முதல்ல ஷேர் பண்ணேன் .

“அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம். வேறு பலர் செய்யும் பொழுது, நமக்கு இந்த அனுபவம் ஏற்படுவதில்லை.”.

ஆயிரம் பக்கம் நாவல விட பாயாசம், ரத்னாபாயின் ஆங்கிலம், கோவில் காளையும் உழவு மாடும் மாதிரி சிறு கதைகள் தான் மனசுல எப்பவும் ஒட்டிகிட்டு இருக்குது .என்னக் கேட்டா நெறைய எழுத தேவையே இல்ல இந்த மாதிரி நறுக்குன்னு ஒரு படைப்பக் கொடுத்துட்டு போய்ட்டா. அனுபமா னு ஒரு சிங்கர் , இருபது பாட்டு தமிழ்ல பாடிருக்கலாம் .ஆண்ட்ரியா இன்னும் 500 பாட்டு பாடலாம் ,ஆனால் திருடா திருடால வர்ற சந்திரலேகா பாட்டு மாதிரி பாடிட முடியாது. அந்த வாய்ப்பு கெடக்கறது ரொம்ப கஷ்டம் அந்த ஆச்சர்யம் நடக்குமான்னு தெரியல .

இத விட்டு தமிழ் மியூசிக் பக்கம் போணோம்னா கேக்கறதுக்கே ஆள் இல்ல. ஏற்கனவே சினிமா ரிவ்யூ னா விகடன்ல கேமரா சூப்பர் , கதை சொதப்பல் போய் கருந்தேள் மாதிரி ஆட்கள் வந்துட்டாங்க .ஒரு வாரத்துக்கு முந்தி இப்படி ஒரு போஸ்ட் போட்டேன் .

“அனிருத் Toss the Feathers ஐ அப்டியே ஆட்டைய போடலாமா வேண்டாமானு டாஸ் போட்டுகிட்டு இருக்கும் போது சந்தோஷ் நாராயணன் மெட்ராஸ் னு ஒரு brilliant album ரிலீஸ் பண்ணிட்டாரு. ஸோ ரெண்டும் சேர்ந்து குறை பிரசவமா ஒரு சுமாரான பாட்ட நல்ல பாட்டா மாத்தினது Talented Sean Roldan .கண்ணான கண்ணே னு ஒரு பாட்டு.

நான் எழுதிருக்கற மாதிரி அவ்வளவு மோசம் இல்ல. ஆனால் அனிருத்த வளர்த்து விடணும்னு எனக்கு அவசியம் இல்ல. அனிருத் மாதிரி ஆட்கள் பின்னாடி எடுத்துட்டுப் போன தமிழ் மியூசிக்க கொஞ்சம் கொஞ்சமா முன்னாடி கொண்டுபோய்ட்டு இருக்காங்க புதுசா வந்திருக்கற கம்போசர்ஸ் .யூ டுப் காமெண்ட்ஸ் செக்ஷன் ப்லாக் ல தான் நெறைய நல்ல கிரிடிக்ஸ் ஒளிஞ்சு இருக்காங்க .Mainstream ல இருக்குற இசை விமர்சகர்கள் எல்லாமே தேவை இல்லாத ஆணிகள் .

armchair critic னு ஒரு பதம் இருக்கு. (An armchair critic is someone who offers advice but never shows that they could actually do any better ). எங்க ஊர்ல ஸ்ரீனிவாசன் னு ஒரு மாமா எப்ப லக்ஷ்மன் பேட்டிங் பண்ண வந்தாலும் மூதேவி வந்த்ருத்துனு சொல்வார் லக்ஷ்மன் எப்படி பேட்டிங் பண்ணினாலும் ஒரே திட்டு தான் .லக்ஷ்மன் மேல அவருக்கு அப்டி என்ன கடுப்போ. ஆனால் மாமா லைப்ல ஒரு தடவ கூட கிரிக்கெட் பேட்டையே த் தொட்டது கெடையாது . எல்லாரையும் இப்டி தாளிக்கறேன்னு உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். அதுக்கு தான் கிட்டார் கத்துக்கிட்டேன் .மியூசிக் பண்ற விதம் கொஞ்சம் கொஞ்சமா அணுக முடிஞ்சுது .தனியா மியூசிக் பண்ணவும் முயற்சி பண்ணேன் .இப்போ தான் புரியுது. அதுனால ஓரளவுக்கு மேல பிரயோசனம் இல்ல.ஒரு ரசிகனா ஒரு பாட்டக் கேட்டு ஏற்படுற பிரமிப்பு, விமர்சனம் தான் முன்னாடி இருக்குது .அது தான் சரியான மனநிலை .சும்மா கிட்டார் கார்ட்ஸ் நல்லா இருக்கும்னுட்டு ஒரு மொக்க பாட்ட கேக்க முடியுமா ?இப்போ பண்ற மியூசிக் ரொம்ப சுலபம்னு என்னால ப்ரூவ் பண்ண முடியும். ஒரு நாள் என் ப்ரெண்ட் வினோத் ஏன் ரூமுக்கு வந்தான். அவன் மலையாளி , தமிழ்ல நல்ல எழுதுவான் .பேசிட்டே இருக்கும் போது இதே டாபிக் வந்துச்சு .அவன்ட சொன்னேன் நீ எழுது மச்சி, அரை மணி நேரத்துல ஒரு பாட்டு பண்ணிடலாம். இப்ப உள்ள சாங்க்ஸ் அப்படி தான் .இஷ்டம் இருந்தா இந்த லிங்க் கேட்டுப் பாருங்க.

(https://soundcloud.com/srinivasan-rengarajan-1/silly)

சும்மா அன்பே, பெண்ணே னு ஹை பிச்ல பாடினா போதும். இதப் பண்ண அரை மணி நேரம் தான் ஆச்சு .தமிழ் சினிமா பாட்டு மேல mockery அவ்ளோ தான் .வேணும்னே fundamental guitar chords ( C Major ), டெம்ப்லெட் வரிகள் . நாளைக்கே நான் எதாவது பரீட்சார்த்தமா experimental பாட்டுன்னு ஷேர் பண்ணா நீங்க ப்ரோ, புதுசா ஏதாவது ட்ரை பண்ணுங்க, இத மாதிரி நெறையக் கேட்டிருக்கொம்னு சொன்னா, அது என்னப் பொருத்தவரை கன்ஸ்ட்ரக்டிவ் பீட்பேக் .பீட்ல்ஸ் சாங் yesterday வ உலகமே கொண்டாடிட்டு இருந்துச்சு , பாப் டிலன் இது ரொம்ப மீடிஆக்கர், இத மாதிரி நெறைய பாட்டு இங்க இருக்குன்னு சொன்னார்.அப்புறம் அவர் அதே பாட்ட கவர் பண்ணாரு அது வேற விஷயம் , Legends do compromise.

அந்தப் பாட்டு பால் மெக்கார்ட்னி கனவுல தோணிச்சாம், காலைல எழுந்த வுடனே பியனோல போய் ஒரு rough take பண்ணி முடிச்சிட்டு அவர் பார்த்த எல்லார் கிட்டயும் இந்தப் பாட்ட எங்கயாவது கேட்டிருக்கீங்களானு ஒரு வாரம் கேட்டாராம், யார் பாட்டையோ நம்ம தெரியாம காப்பி அடிச்சிருக்க கூடாதுன்னு ஒரு கவலை அவருக்கு. எல்லாருமே இது புதுசா இருக்கு, நீ தைரியமா ரிலீஸ் பண்ணலாம்னு சொன்னதுக்கு அப்புறம் தான் அத ரிலீஸ் பண்ணினாரு. ஹ்ம்ம் , என்ன சொல்ல இந்த மாதிரி ஆட்கள் கேட்டுட்டு நம்ம ஆட்கள் பண்றத எப்டி கேக்க முடியும்.

அந்தந்த காலகட்டத்துல இருக்கற மியூசிக் genre நம்ம தமிழ் சினிமால இருக்கிறது இயல்பு தான் .MSV கு ராக் ன் ரோல், ராஜாக்கு டிஸ்கோ , ரஹ்மானுக்கு டெக்னோ பீட்ஸ். அதையும் தாண்டி உள்ள soul இருக்கணும் .இந்தப் பிரச்சினை ராஜா காலத்துல இருந்தே இருக்கு. விமர்சனமே இல்ல.அவரு போட்ட மொக்க பாட்டெல்லாம் கேட்டுகிட்டே வந்திருக்கோம் .இப்போ தான் ஒரு எழுபது பேர் ப்ரெண்ட் ரிக்வஸ்ட் கொடுத்தாங்க. அன்ப்ரெண்ட் பண்ணிருவாங்கனு நெனைக்கறேன் .நிற்க .ராஜா எவ்வளவோ விஷயம் பண்ணிருக்கலாம், சாத்தியங்கள் இருந்தன .நீங்க தான் அவர இப்டி டொக்காக்கி வச்சிருக்கீங்க .இந்த fm காரங்களுக்கு தான் எப்படி அவரோட மொக்க பாட்டெல்லாம் கெடைக்குமோ , என்ன பெத்த ஆத்தா டைப் சாங்க்ஸ் ,என்கிட்டே வாங்க என் vault இருந்து நல்ல பாட்டெல்லாம் தரேன் . அதப் போடுங்க .சும்மா அவர் ரசிகர்களைச் சீண்டனும்னு சொல்லல .

ஜார்ஜ் மார்டின் , பீட்ல்ஸ் பேண்டோட ரெகார்ட் ப்ரடூசர் .சும்மா நாலு பசங்க லிவெர்பூல் ல ஒரு பேண்ட் ஆரம்பிச்சு பாடிட்டு இருந்தாங்க .அவங்கள இன்னிக்கு நம்ம அம்பது வருஷத்துக்கு அப்புறமும் கொண்டாடற படி மாத்தினது இவர் தான். அவங்க வேண்டாம்னு ஒதுக்கற விஷயத்த கட்டாயமா சில நேரங்களில் நுழைச்சு சாதனையா மாத்திக்காட்டினவர் .எங்கயோ ஜமைக்கால ஒரு மியூசிக் பண்ணிட்டு இருந்த பாப் மார்லேவ UK ல பாப்புலர் ஆக்கினவர். க்றிஸ் ப்லாக்வெல் னு ஒருத்தர்.

எதுக்கு இதெல்லாம் சொல்றேன்? பரத் பாலா ரஹ்மான வச்சு வந்தே மாதரம் பண்ணார்.அந்த மாதிரி individual மியூசிக் ல நெறைய ப்ரடூசர்ஸ் வேணும். எங்க ராஜா தான் ஹவ் டு நேம் இட் ,திருவாசகம் லாம் பண்ணினாரேன்னு சொல்வாங்க உடனே. எவ்ளோ பண்ணிருக்காரு அப்படி ?தாரை தப்பட்டை அவரோட 1000 ஆவது படம் .அதுல பாதியாவது புதுசா பண்ணிருக்காரா. எதுக்கு இப்படி படத்துக்கு பாட்டு பண்ணிட்டே இருக்கணும் .அதுல தான் ஓரளவுக்கு மேலே போக முடியலையே .அவரோட ஈகோ இருக்கத்தான் செய்யுது .அவர நல்ல ரிகார்ட் ப்ரடூசர்ஸ் இருந்தா எவ்ளோ தூரம் கொண்டு போயிருக்கலாம் .சும்மா சினிமா பாட்டுல மொசார்ட் மூவ்மெண்ட் மாதிரி பண்ணி எதுக்கு .சலில் சௌத்ரி கூட தான் நெறைய பண்ணிருக்காரு அங்க. எக்கச்சக்க தீம் ல ராஜாவா வச்சு ஆல்பம்ஸ் பண்ணிருக்கலாம் .வீட்டுக்கு வீடு வாசப் படி பாட்டுல மொசார்ட் டைப் சங்கதிகள் இருந்து என்ன பிரயோசனம். இன்னிக்கு இருக்கற மியூசிக் டைரக்டர்ஸ் அத பெருசா சிலாஹிக்கறாங்க .ஜானி மிட்சல் னு ஒரு கனேடியன் சிங்கர் பண்ணினதுல ராஜா பாதி கூட பண்ணல. ஆனால் அவங்க எல்லாரையும் விட ராஜாவோட potential ஜாஸ்தி . அவர் இன்னும் எதுவுமே பண்ண ஆரம்பிக்கல .

சரி individual மியூசிக் மேல என் இந்த கரிசனம் னு கேக்கலாம் .போன வருஷம் பெங்களூர்ல ஒரு ப்ளுஸ் gig போயிருந்தேன் .Blackstrat Blues பேண்ட் .நைட் 11 மணிக்கு மேல ஒருத்தர் instrumental மியூசிக் வாசிக்கராரு அதுக்கு அவ்வளோ வரவேற்பு .அந்த மாதிரி ஆர்டிஸ்டக் கொண்டாடறாங்க. அவருக்கு சென்னைல இன்னும் ஸ்பான்சர்ஸ் கெடைக்கல .அதுக்கு தான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன். ஒண்ணு கர்னாடிக் இல்லாட்டி சினிமா பாட்டு .நல்ல individual மியூசிக் பண்றவங்களும் சினிமாவுக்குப் போய் சொதப்பறாங்க. இன்னொரு நாள் இதத் தொடறேன்

கடைசியா…என்னோட பேவரிட் ஷான் ரோல்டன் பத்தி .அவரப் பத்தி ஒரு அறிமுகம் மட்டுமே. அவர் ஒரு கர்னாடிக் சிங்கர், அப்புறம், ப்ளுஸ், Folk , பக்கம் இவரோட ரசனைப் போக ஆரம்பிச்சது .ராபர்ட் ஜான்சன் , பாப் டிலன் இவரோட ஆதர்சம் ,இன்னிக்கு தமிழ் சினிமால ரெண்டு படம் பண்ணிருக்கார். எல்லா genre ளையும் புகுந்து விளையாடுற மனுஷன் .ரொம்ப திறமையான ஆளு .

செமத்தனமான கிட்டார் ரிப்ப்ஸ், அப்புறம் அந்த பால்கனி ரெகார்டிங். பாட்டு ஆரம்பிச்ச சில நொடிகள்ள ஆரம்பிக்கற பேஸ் கிட்டார் அன்ட் ட்ரம்ஸ் .கூலான வாய்ஸ், கர்நாடிக் சங்கதிகள் வேற!! மாமன் மனச பறிச்சாயே கிளியே!!

அப்புறம் நான் மறந்துட்டேன், மயக்குற பூ வாசத்துல கர்னாடிக் ல வர்ற நிரவல் மாதிரி ஒரு போர்ஷன். ஒரு நபர் individual மியூசிக் ல இருக்கும் போது எவ்ளோ பின்னிப் பெடல் எடுக்கராரோ ,சினிமால ? அவர் சினிமாலப் பெருசா இன்னும் வரல , still have high hopes 🙂

https://www.youtube.com/watch?v=IWYTwuR11LI

© & ℗ EarthSync India Pvt. Ltd. All Rights Reserved Sean Roldan – also known as R. Raghavendran – is a classically trained Carnatic musician, with a…
Advertisements