இத எழுதணும்னு தோணக் காரணம் நியூஇயர ஒட்டி சில பேர் “இளமை இதோ” பாட்ட ஷேர் பண்ணாங்க. டைம்லெஸ், எவர் கிரீன் னு காமெண்ட்ஸ் வேற. நல்ல பாட்டு தான் இல்லேன்னு சொல்லல ஆனா அத விட நூறு மடங்கு செம்ம அமர்க்களமான ஒரு பாட்டு இருக்கு. அது நெறைய பேருக்குத் தெரியாது . ஸோ, அடுத்த வருஷமாவது நான் சொல்ற பாட்ட ரெண்டு மூணு பேர் ஷேர் பண்ணா சந்தோஷம் .அதுக்கு முன்னாடி சில assorted விஷயங்கள பாக்கலாம் .
எனக்கு MSV ரொம்ப பிடிச்சிருக்கிற காரணங்கள்ள ஒண்ணு, அவர் உருவாக்கின டெம்ப்லெட்ட தான் இன்னிக்கு வரைக்கும் கம்போசர்ஸ் யூஸ் பண்றாங்க, பெருசா மாற்றங்கள் எல்லாம் இல்ல,சந்தோஷ் நாராயணன் வரைக்கும் . ராக் அண்ட் ரோல், ஜாஸ், ப்ளுஸ், சைக்கடெலிக் ராக், வெஸ்டர்ன் பாப், கன்ட்ரி, ஈஸ்டர்ன், அராபிக் ஏன் ப்ளுஸ் கிராஸ் (சமீபத்தில ப்ளுஸ் கிராஸ் கேட்டது சுட்ட கதை னு ஒரு படம், ஏலே ஏலே சாங், MSV யே பாடினது). வரைக்கும் கம்போசர்ஸ் இயல்பா, சுதந்திரமா syncopate பண்ணிக் கம்போஸ் பண்றதுக்கு முன்னோடி MSV தான். அவர் மட்டும்னு சொல்ல மாட்டேன் , பட் எல்லாரையும் விட அவர் ஒரு வெரைட்டியான கம்போசர் அந்த டைம்ல. Poineer of Tamil Fusion Music.
சவுண்ட், ப்ரொடக்ஷன் க்வாலிட்டி பொறுத்த வரை ரஹ்மானோடது. அதுலையும் பெருசா வாட்டர்ஷெட் நடக்கல .சந்தேகம் இருந்தா திருடா திருடா சவுண்ட் ட்ராக் இன்னொரு வாட்டி கேட்டு பாருங்க. (Amit Trivedi’s interview on Thiuda Thiruda is highly recommended). ரஹ்மானே திருடா திருடாவத் தாண்டி புதுசா நச்சுனு ஒரு சவுண்ட் குடுக்க முடியல. எலெக்ட்ரானிக்ஸ்ல Moore’s law மாதிரி அந்த ஆல்பத்தோட பிரெஷ்னஸ் ஏறிகிட்டே போகுது ஒவ்வொரு பத்து வருஷத்துக்கும்.
MSV மியூசிக்ல இன்னொரு அடிச்சுக்க முடியாத விஷயம் .அவரோட பேண்ட் .செமத்தனமான பேண்ட் அது. ட்ரம்மர் நோயல், கிடாரிஸ்ட் பிலிப்ஸ், ஹென்றி டேனியல், இப்டி நெறைய பேரு. ஜாம்பவான்கள்னு சும்மா கிளிஷேல சொல்ல முடியாது. நோயல் எல்லாம் இளையராஜா போட்ட ரிதம் பேட்டர்னையே ராஜா மொக்கையா இருக்கு, கூட இருந்த Bongos ப்ளேயர் கிட்டக்க hey , play Come September னு சொல்லக் கூடிய ஆளு . இப்போ ராஜா கிட்டக்க வாசிக்கறவங்களுக்கு ராஜா தான் டியூஷன் எடுக்கறாரு .தம்பி இந்த Diminished Chord இப்டி வாசிக்கக் கூடாதுன்னு Guitar Fret Board ல கைய வச்சு சொல்லிக் கொடுக்கறாரு.
இங்க FBல நெறைய மியூசிக் பேஜஸ் இருக்கு, ப்ளுஸ் , கிளாசிக் ராக், ஜாஸ், கன்ட்ரி ….செவண்டீன் ஆர் எய்டீன் இருக்கும் மும்பைல இருக்கற சின்ன பையன் சிக்ஸ்டீஸ்ல வந்த ப்ளுஸ் பாட்ட கிடார்ல வாசிச்சு பாடறான். சிக்ஸ்டீஸ்ல வந்த பீட்ல்ஸ் பாட்ட டெய்லி யாரவது ஒருத்தர் யு டுப் ல கவர் பண்ணி போடறாங்க .ஆனா நம்ம எய்டீஸ் தாண்டி மியூசிக் ல போக மாட்டோம் ,குறிப்பா சொல்ல போனா ராஜா சார தாண்டிப் போக மாட்டோம்
இது இங்க மட்டும் ஏற்பட்ட பிரச்சினை இல்ல. அமெரிக்காவுலயும் நடந்துச்சு.
ஒவ்வொரு கால கட்டத்துக்கும் மியூசிக்ல வடிவ மாற்றங்கள், ஒலி , ரெகார்டிங் அமைப்பில் மேம்பாடு, இப்டி நெறையா மாற்றங்கள் ஏற்படுது. What is in vogue becomes a hit .இதுல தப்பு கெடையாது. நம்மளோட செவிகளும் புதுசான ஒலிகளுக்கு பழக்கப் பட்டு போய்டுது காலப்போக்குல .திடீர்னு மோனோ ரெகார்டிங்க்ல டிஎம்ஸோட முற்காலத்த ஞாபகப்படுத்தக் கூடிய ஒரு குரல கேக்கும் போது பொதுவா நெறைய பேருக்கு ஈர்ப்பு இல்லாம போய்டுது வாஸ்தவம். எதாவது ஒண்ணு ரெண்டு பாட்டு விதி விலக்கு, இதுல சில நெறைய படிச்சவங்க, அந்த காலத்து பாட்டுல ரோமேண்டிசைஸ் பண்ணப் பட்டிருக்குன்னு அவங்களா ஒரு கற்பிதம் பண்ணி காத மூடிக்கிறாங்க .
காலப் போக்கில எல்லாரும் பழைய லேஜண்ட்ச மறந்துட்டாங்க எரிக் க்ளாப்டன் , ஸ்டீவி ரே வான் , ரோலிங் ஸ்டோன்ஸ், கேரி மோர், ராபர்ட் க்ரே போன்ற பேன்ட்ஸ்லாம் அடிக்கடி BB King, Albert King, Freddie King, Lightnin’ Hopkins, Robert Johnson , T bone Walker etc தங்களோட இன்ஸ்பிரேஷன்னு சொன்னாங்க.ஒரு மியூசிக் ரிவைவல் நடந்துச்சு . நெறைய அவங்க பாடல்கள கவர் பண்ணாங்க .பழைய லெஜண்ட்ஸ் மேல கொஞ்சம் வெளிச்சம் ஏற்பட்டுச்சு. இங்க அப்டி Tribute/Cover பண்ணக் கூட ஆட்கள் இல்ல. ஒரு ப்ரஹஸ்பதி அவள நம்பித்தான் மோசம் போனேன்னு சம்போ சிவ சம்போ பாட்ட ரேப் பண்றான். பாக்கறப்போ நிர்வாணா சாங் “ரேப் மீ” மாதிரி டிஸ்டார்ஷனக் கூட்டி வச்சு கிடார வாசிச்சு கம்போஸ் பண்ணவன் மண்டைல Curt Cobain ஸ்டைல்ல ஒரே போடு போடணும் போல இருக்குது. இவங்க மியூசிக் கேக்கும் போது தான் தமிழ் பிலிம் மியூசிக் மேல விமர்சனம் இல்ல வெறுப்பு தான் மிச்சம் இருக்குது.
மெயின்ஸ்ட்ரீம் மியூசிக் சீன் தான் இந்த ரிவைவல் கொண்டு வரமுடியும். நம்ம கிட்ட சினிமா பாட்டு ,கர்நாடிக் தாண்டி பெருசா வேற அவுட்லெட் இல்ல. ஸ்ரீதர் மாதிரி சில டைரக்டர்ஸ் மட்டும் தான் இவர்ட இருந்து வேற லெவல் மியூசிக் வாங்க முடிஞ்சுது .மர்மரம் மாதிரி சில மலையாள படங்கள்ல நெறைய ட்ரை பண்ணிருப்பார். அவர் காலகட்டத்துல இருந்த தட்டையான டைரக்டர்ஸ் அப்டி .இப்பவும் அப்டிதான் இருக்காங்க. மியூசிக் (ரெகார்ட்) ப்ரடூசர் கான்சப்ட் இங்க இல்ல. பீட்ல்ஸ் ஜார்ஜ் மார்டின், பாப் மார்லேக்கு ஒரு க்றிஸ் ப்ளாக்வேல் மாதிரி. மியூசிக் கம்போசர்ஸோட கற்பனைய க்ரியெட்டிவிட்டிய அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு போற மாதிரி .
சில MSV பாடல்கள என் பிரண்ட்ஸ் கொஞ்ச பேருக்கு நல்ல FLAC ரெகார்டிங் ,சில டெக்னிகல் இத்யாதிகள், அவர் பாட்டுல பண்ண வடிவ சோதனைகள், பரீட்சார்த்த முயற்சிகள், ட்ரெண்டியான அணுகுமறைகள்னு கொஞ்ச நேரம் மொக்க போட்டதுல ஒரு பலன் , எல்லாருமே ரசிச்சாங்க .புரிஞ்சிகிட்டாங்க . அது போதும் , இனிமே அவங்க ஜம்பு லிங்கமே ஜடாதரா கேட்டாலும் சரி , சம்போ சிவ சம்போ கேட்டாலும் சரி, ஆரம்பம் இன்றே ஆகட்டும் கேட்டாலும் சரி, கொஞ்ச நேரம் நின்னு ரசிச்சுட்டு போவாங்க. அந்தக் காலத்துலேயே தாத்தா சைக்கெடெலிக் ராக்ல என்னாமா விளையாண்டிருக்குன்னு அமெச்சூர்த்தனமா சொன்னாலும் நல்லதே .
Something Is Better Than Nothing. இப்டி கேக்க ஆரம்பிச்சாலே போதும் .க்ஹோலி டோனி கேம் பாக்கறதுக்கும், ஈடன் கார்டன்ல லக்ஷ்மன் ஷேன் வார்ன் போட்ட ஒரே மாதிரி பால வெரைட்டியா ,மிட் ஆப் மிட் விக்கெட் மிட் ஆன், பல விதமா விளையாண்டதை ரசிக்கறதுக்கும் வித்தியாசம் இருக்கு. கொஞ்ச நாள்ல கண்ணதாசனோட வரிகள ரசிக்க ஆரம்பிச்சிடுவாங்க. தமிழ் சினிமால ஒரே கவிஞர் கண்ணதாசன் தான்னு என்ன மாதிரி உணர்ச்சிவசப்பட்டு சொல்வாங்க.
சரி நான் போஸ்ட் பண்ண வந்த பாட்டுக்கு வரேன். இப்டி ஒரு அட்டகாசமான இன்ட்ரோ ரொம்ப ஆச்சர்யம். Jimi Hendrix’s Voodoo Chile இன்ட்ரோ மாதிரி .செம்ம செக்ஸியான Wah Wah கிடார் இன்ட்ரோ. அடுத்து சிவமணியோட பிரமாதமான Drum Fill. Horn Section இப்டி ஒரு டெம்போவில ஆரம்பிக்கற வேற எந்த பாட்டும் கேட்டதே இல்ல. தென் பாஸ்ட் பார்வர்ட் டு 1:35, Badass Bass Guitar lines, again Wah Wah கிடார், மறுபடியும் அதே ஹிப்னாடிக் பேஸ் லைன்ஸ் ,கி போர்டு, Sexy guitar riffs, முடிஞ்சவுடனே சிவமணியோட Drum Fill, Horn Section, Bongos னு வரிசையா வந்து பொளந்து கட்டுவாங்க. இப்டி போகும் பாட்டு .கேட்டு பாருங்க. TMS வாய்ஸ் பத்தி எதுவும் சொல்லல .இந்த மாதிரி டெம்போவுல அனாசயமா பாடிருக்கான் பாருங்க அதான் அந்தாளு .
இந்த மாதிரி டெம்போ, எனெர்ஜி , வெரைட்டி, பேண்ட் வொர்க் , ஆச்சர்யம், டைம்லெஸ்நெஸ் அதான் MSV!!!
சரி முடிக்கறேன், பாட்ட முடிஞ்சா கேளுங்க.
Advertisements