என் கூட ஸ்கூல்ல நெறைய்ய பேர் படிச்சாங்க, இப்போ கு அழகிரிசாமி பேரக் கேட்டா எத்தனை பேருக்குத் தெரியும்னு தெரியல .ஆனா ஸ்கூல் டேஸ்ல அவரோட உலகத் தரமான சிறுகதை (ராஜா வந்திருக்கிறார்) ஒண்ண எல்லாரும் படிச்சிருப்பாங்க .எத்தனை பேர் இப்போ அழகிரிசாமியப் படிக்கிறாங்களோ ? என் ஃபிரெண்ட்ஸ் முக்கால்வாசி பேருக்கு இலக்கிய வாசிப்பு கெடையாது .பின்ன எதுக்கு ஸ்கூல்ல அப்டி ஒரு இலக்கியப் படைப்பை சிலபஸில வைக்கணும். வச்சது நல்ல நோக்கம் தான், சொல்லி கொடுத்த வாத்தியான் என்ன பண்ணினான்? அழகிரிசாமி யாரு, நம்ம எடசெவல்காரர்தான் பா, சிறுகதைக்காக முதல் சாஹித்ய அகாடமி அவார்ட்லாம் வாங்கிருக்காருன்னு போற போக்கிலாவது சொல்லிருக்கலாம்.எனக்கு அந்தக் கதை தான் இலக்கிய வாசல். அதுக்கப்புறம் தான் அசோகமித்திரன், தி ஜானகிராமன் ,சுஜாதா, சுரா, புதுமைப் பித்தன், etc வந்தாங்க எனக்கு இந்த நான்-டீடைல்ட் கதைகள் தான் மிச்ச சிலபஸ விட ஈர்த்தது .மிச்ச பாடம் எல்லாம் பாஸ் மார்க் வாங்க படிச்சேன் அவ்ளோ தான் .

தி ஜானகி ராமனின் முள் முடி, நாஞ்சிலோட ஒரு கதை பேர் மறந்து போச்சு. இப்டி சில கதைகள்.

ஒரு வாத்தியானாவது இவங்களப் பத்தி ஒரு சின்ன அறிமுகம் கூட தரல. எல்லாம் அல்வா, மிச்சர் தின்னுட்டு, எவனாவது ஒருத்தன நிக்க வச்சு படிக்க சொல்வாங்க .

ஒரு விஷயம் இதுல வர்ற பெரியசாமி சார் மேல உண்மைலேயே எங்க ஸ்கூல்ல எல்லாருக்கும் பெரிய பிரமிப்பு உண்டு .பறவைகள், விலங்குகள் ஆரம்பிச்சு காண்டம் வரைக்கும் சகலமும் டிஸ்கஸ் பண்ணுவோம் கிளாஸ்ல. ஒவ்வொரு க்ளாசுமே ஒரு இன்ஸ்பிரெஷனல் ஸ்பீச் மாதிரி இருக்கும்.

அப்புறம் எங்க தெருவுல கிருஷ்ணன் சார்னு ஒரு ஆங்கில ஆசிரியர் உண்டு .லாஸ்ட் லீஃப் ஷார்ட் ஸ்டோரி சிலபஸ்ல உண்டு, அதுக்கு முன்னாடி, ஒ ஹென்றி பத்தி அரை மணி நேரம் சொன்னார், ஒ ஹென்றி சிறைக்குப் போனது, ஒ ஹென்ரின்னு புனைப் பெயர் எப்டி வந்ததுன்னு சொன்னார். இதக் கேட்டதும் ஒ ஹென்றி பத்தி தேடினேன் .அதாவது இந்த வாத்தியார் அத ஒரு நல்ல எழுத்து என்று அறிமுகம் செஞ்சார் ,பத்தோடு பதின்னோன்னா வர்ற பாடம் இல்ல.

இப்டி தான் காலேஜ்ல என்னோட ஃபிசிக்ஸ் ப்ரொபசர் வேலுச்சாமி QED பத்திப் பேசும் போது ரிச்சர்ட் ஃபைன்மன் பத்தி சொன்னார். அப்புறம் பென்னிங்க்டன் லைப்ரரி போய் அவரப் பத்தி தேடினேன் .Surely You’re Joking, Mr. Feynman! கெடச்சது (some recommendations: What Do You Care What Other People Think? his master piece QED, Jame’s Gliek’s Genius etc)

ஃபிசிக்ஸ் வாஸ் மை ஃபர்ஸ்ட் லவ் .எனக்கு ஃபிசிக்ஸ்ல ஃபண்டமெண்டல் ரிசர்ச் எதாவது பண்ணனும்னு ஆசை இருந்துச்சு. வேலைக்கு போக வேண்டிய நிர்பந்தமும் கூட, இந்த புக் தான் என் வாழ்க்கையை மாத்திச்சு .அதுக்கு அப்புறம் தான் கிட்டார் கத்துக்கிட்டேன் .மியூசிக் நெறைய்ய கேக்க ஆரம்பிச்சேன் .சில புக்ஸ் உங்கள மாத்தும், இது மிகச் சிறந்த உதாரணம். இதெல்லாம் வேலுச்சாமி சார் சொன்ன சில வார்த்தைகள் தான், அவர் அன்னிக்கு ஃபைன்மன் பத்தி அவ்ளோ டீடைல்டா சொல்லலைன்னா நான் இது வரைக்கும் வந்திருக்க மாட்டேன். அதுக்கு அப்புறம் ஃபிசிக்ஸ் என் வாழ்க்கைல தேவைப் படல, நெறைய விஷயங்கள் மேல ஈர்ப்பு வந்திருச்சு .

ஒரு நல்ல விஷயம் கண்ணுலப் பட்டுச்சுன்னா அதத் தேடித் போகணும். ஃபிங்க் ஃபிளாயிட் இன்னிக்கு தான் கேக்குறீங்கன்னா ஒரு மாசத்துல பெர்கூபைன் ட்ரீ கேக்கணும், நம்ம தான் தேடித் போகணும் .

என் இதெல்லாம் சொல்றேன்னா , நம்ம கூட மிகச் சிறந்த ஆசிரியர்களும் இருக்காங்க, சிங்க் லாலா கடை அல்வா சாப்ட்டு பொழுதப் போக்கிட்டு போற ஆசிரியர்களும் இருக்காங்க .பெரியசாமி, வேலுச்சாமி மாதிரி சிறந்த ஆசிரியர்கள் மிச்ச ஆசிரியர்களுக்கு ஒரு நாலஞ்ட்ஜ் ஷேரிங் செஷன் பண்ணலாம் .இதுல ஈகோ லாம் இல்ல. பெஸ்ட் ப்ராக்டிஸ் ஷேரிங் தான் .தாங்கள் எப்டி மாணவர்களை திசை திருப்பி விடறோம், எப்டி சொன்னா பசங்க அடுத்த விஷயத்தைத் தேடி மேல போவான், என்னென்ன விஷயங்கள் முக்கியம் etc .இந்த மாதிரி சிறந்த ஆசிரியர்கள் சொல்ற விஷயங்கள் முக்கால்வாசி பாடப் புஸ்தகத்துக்கு வெளில தான் இருக்கும். நான் ஒரு ஸ்கூல், காலேஜ் பிரின்சிபால இருந்தா இதக் கண்டிப்பா செய்வேன்

Advertisements