MSV மேல ஏன் இந்த திடீர் அக்கறை? அவர் செத்துப் போன அன்னிக்கு RIP போட்டாங்க, ராஜா Tribute கான்சர்ட் நடத்தினார். அவ்ளோ தான். கருந்தேள் வேற ஒரு லைன் எழுதினார் நேத்திக்கு, நம்மில் பலபேருக்கு MSV யாருன்னே தெரியாது. அட் லீஸ்ட் அவர் ஒரு மியூசிக் டைரக்டர்னு இப்போதைக்கு எல்லாருக்கும் தெரியும். MSV பேரையே நம்ம கொஞ்ச வருஷத்துல மறந்தே போய்டுவோம். சும்மா சொல்லல. உதாரணங்கள் இருக்கு.

Searching for Sugar Man (Academy Award Winner). Sixto Rodriguez அமெரிக்கால இருக்கிற ஒரு ம்யூசிஷன். அவரப் பத்தி இது ஒரு அருமையான டாகுமெண்டரி பிலிம். பாக்காதவங்க கண்டிப்பா பாக்கணும். இவர் Cold Fact (1970) ,Coming from Reality (1971) ரெண்டு ஆல்பம்ஸ் ரிலீஸ் பண்ணினாரு. சுமாரான ஹிட். அவ்ளோ தான் அமெரிக்கா மறந்திடுச்சு. பட் ஆஸ்த்ரேலியா, நியூசிலாந்து, சவுத் ஆப்ரிக்கா போன்ற நாடுகள்ல செம்ம ஹிட் இவர் ஆல்பம்ஸ் .சவுத் ஆப்ரிக்கால நம்ம ரஹ்மானோட ரோஜா இங்க எப்டியோ அது மாதிரி செம்ம ஹிட். எல்லார் வீட்டுலயும் அந்த வினைல் இருந்துச்சு .ஆனா அவங்க யாருக்குமே Sixto யாருன்னே தெரியாது. அவர் செத்து போய்ட்டார்னு வதந்தி வேற. இவர் இங்க சாதாரண மனுஷனா அமெரிக்கால வாழ்ந்துக்கிட்டு இருந்தாரு. எவ்ளவோ காசு பாத்துருக்க வேண்டிய ஆளு.அவர் வீட்டுல ரெப்ரிஜிரேட்டர கீழ இருந்து அவங்க இருக்கற ப்ளோர் வரைக்கும் முதுகுல தூக்கிட்டு போவாராம், அவரோட பொண்ணு சொல்லுது. Bob Dylan, Neil Young, Cat Stevens, Leonard Cohen இவங்க பேர் கேள்விப் படலன்னா கேள்விப்படுங்க .இவங்க யாருன்னு சொல்ல கூகிள் இருக்கு. எல்லாருமே பயங்கர பேமஸ் .இவங்க யாருக்குமே sixto சளைச்சவர் கெடையாது. அப்புறம் இவர் பொண்ணு ஒரு வெப்சைட்ல அவருக்கு சவுத் ஆப்ரிக்காவுல இவ்ளோ ரசிகர்கள் இருக்கிறது தெரிஞ்சு, அந்த வெப்சைட் ஒனரக் கான்டாக்ட் பண்ண அவங்க கூலா சொல்றாங்க இங்க உங்க அப்பா பெரிய ஆளு. நாங்க ரொம்ப வருஷமா அவர் பாட்டக் கேட்டுகிட்டு இருக்கோம். ஒரு ரிவைவல் நடந்துச்சு .Sixto சவுத் ஆப்ரிக்கால ஒரு கான்செர்ட் பண்ண போறாரு. ஆயிரக்கணக்கான ரசிகர்கள், கூச்சல், கண்ணீர், சந்தோஷம் etc …சுபம்.
ப்ரில்லியன்ட் டாகுமெண்டரி .

P . S . (இந்த டாகுமெண்டரி உண்மைக் கதை, புனைவு இல்ல)

MSV யும் அப்டி காலப்போக்குல மறைஞ்சு போய்டுவார். எனக்கு வருத்தம் தான் பட் அப்டி நடந்தா எனக்கு ஆச்சர்யமில்ல.ஏற்கனவே ஒரு டர்கிஷ்காரன் MSV பாட்ட யு ட்யுப்ல கவர் பண்ணிருக்கான். ஸோ, வேற எந்த நாட்டுக்காரனோ மியூசிக் தெரிஞ்சவன் இவர் பாடல்கள resurrect பண்ணுவான். அந்த காலத்துல நானோ, கருந்தேளோ, மாஸ்டரோ டாகுமெண்டரி பண்ணினாதான் உண்டு.

இதையும் தாண்டி இன்னொரு விஷயம் .மியூசிக் ரசனை ! நான் யாருக்கும் நீ கேக்கறது அத்தனையும் மொக்க இந்த மியூசிக் கேளுன்னு வியாக்யானம் பண்ண முடியாது, அது என் வேலையும் இல்ல. அது ஒவ்வொருத்தர் விருப்பம் . இன்னும் சில பேர் மொபைல்ல பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ், கேஸோலீனா etc …நோ காமெண்ட்ஸ் .ராக் அண்ட் ரோல், பீட்ல்ஸ் , பாப் டிலன் ,ப்ளுஸ் லாம் வேண்டாம். Sarava Ganesh ஷேர் பண்ற மாதிரி Tame Impala வரைக்குமாவது போங்கப்பா சீக்கிரம் .நீங்க எங்கள மாதிரி பின்னாடி போக வேண்டாம். முன்னாடியாவது வாங்க சீக்கிரம்.

அடுத்த விஷயம், நம்ம படங்கள்ல வர மியூசிக் references .அஜித் மப்புல ராஜா சார் பாட்டு தான்னு சொன்னாரு. உடனே இன்னிக்கு வரைக்கும் சில பேர் ஸ்டேடஸ் தொடருது. அட் லீஸ்ட் ராஜா கேக்கறாங்க. அந்த மட்டுக்கும் க்ஷேமம், இப்போ சிம்பு ஏ ஆர் ரஹ்மான் சாங் மாதிரி இருந்தாட அவ னு சொல்லியாச்சு . நாளைக்கு அஜித்தோ விஜய்யோ அண்ணன் தங்கச்சி பாசத்துக்கு தாத்தாவோட பாச மலர் பாட்டு மாதிரி வராது மச்சி னு சொன்னா எல்லாரும் தாத்தா பக்கம் திரும்பிடுவாங்க போல .ஏன்னா இவங்க ரெண்டு பேரும் தான் அண்ணன் தங்கச்சி கதைய போட்டி போட்டு நடிக்கிறாங்க .ஒரு இங்கிலீஷ் படம். 500 Days of Summer I guess, லிப்ட்ல ஒரு சீன் .ஹீரோ ஐ பாட்ல பாட்டு கேட்டுட்டு வருவான் .”ஹீரோயின் ஹீரோ கிட்டக்க நீங்க ஸ்மித்ஸ் (The Smiths) பாட்டா கேக்கறீங்க” இப்டி ஒரு சீன் வரும். கவனிக்க ஸ்மித்ஸ் எர்லி எய்டீஸ் பேண்ட். அங்க உள்ள படங்கள்ல ஒரு பொண்ணுக்கு ஒரு பையன் மேல அவன் கேக்கற மியூசிக் னால கூட ஈர்ப்பு வருது. அவங்க ப்ரெண்ட் ஆயிடுவாங்க .இங்க ??

நம்மளும் MSV பாடல்கள ஐ பாட்ல வச்சுக்கலாம். அதுக்காக டிஎம்எஸ் நாதழுத்து உணர்ச்சிமயமான சோதனை மேல் சோதனை எல்லாம் வேண்டாம். நம்ம ஊரு சிங்காரி கேக்கலாம். ஒபனிங்க்ல அந்த G Minor கிடார் கார்ட்ல ஆரம்பிக்கற கார்ட் ப்ரோக்ரேஷன், SPB வாய்ஸ் போதும். அது மாதிரி பெப்பியா எவ்வளவோ சாங்க்ஸ் பண்ணிருக்காரு .ஹீரோ எப்படிப்பட்டவன் அவனுக்குள்ள ரசனைகள் என்ன அவன் என்ன வகையான மியூசிக் கேக்கறான், படிக்கறான் போன்ற references எந்த படத்துலயும் இருக்கமட்டேன்குது. கேரக்டர் எஷ்டாப்ளிஷ் பண்ணாமலேயே அநேக படம் போய்டுது .

அப்புறம் நீடில் ட்ராப் (Needle Drop ). மார்டின் ஸ்கார்சசி , டரண்டினொ போன்ற டைரக்டர்ஸ் அவங்களோட பழைய ஜாஸ், ப்ளுஸ் ,கிளாசிக் மியூசிக் பாடல்கள வினைல் டு டிஜிடல் கிராப் பண்ணி அத படங்கள்ல சில சீன்ஸ்கு எத்த மாதிரி சொருகி அந்த சீனோட இண்டென்சிட்டிய கூட்டறது, அப்புறம் கதை நடக்குற காலகட்டத்த பிரதிபலிக்கிற மாதிரி பண்றதுக்காக யூஸ் பண்ற ஒரு செம்ம உத்தி.

மார்டின் ஸ்கார்சசி , டரண்டினொ அசத்தலா நச்சுனு யூஸ் பண்ண உத்திய கேவலமா யூஸ் பண்றாங்க நம்மாளுங்க . ஹீரோ ஹீரோயின பாக்கும் போது பொத்தி வச்ச மல்லிகை மொட்டுன்னு மிக்ஷிங்க் டேபிள்ள இருக்குற எல்லா நாபையும் தேச்சு மொக்கயாக்கிடறாங்க. ஒரு அளவுக்கு மேல அதுவும் சுவாரசியமா இல்ல.பட் ஸ்கார்சசி லாம் Needle Drop, Silence வச்சு ஒரு படத்தையே முடிச்சிடுவார். ஒரு டைரக்டருக்கும் இளையராஜாவுக்கும் சண்ட வந்துச்சாம். நீ இல்லாம நான் படம் பண்ணிகிறேன்னு. ஸ்கார்சசி எல்லாம் அப்டி யார்ட்டையும் சண்ட போட்டார்னா , போங்கடா எனக்கு எவனுமே ஸ்கோர் பண்ண வேணாம். அவர் அட்டகாசமா பண்ணிடுவார்.

The Departed படம் ஸ்கோர் மாதிரி , ஹாவர்ட் ஷோர் ஸ்கோர் விட நீடில் ட்ராப் செம்மையா இருக்கும். ஸ்கார்சசி எல்லாம் மியூசிக் சூப்பர்வைசர் ஆர் கன்சல்டன்ட் யூஸ் பண்ணுவாரு. (For Ex: Robbie Robertson in The Departed). அவங்களோட வேலை இந்த மாதிரி நீடில் ட்ராப்ல நல்ல மியூசிக்க தேர்ந்தெடுத்துக் கொடுக்கறது .இங்க இப்ப தான் ஸ்க்ரீன் ப்ளே கன்சல்டன்ட் வரைக்கும் வந்திருக்காங்க .ரொம்ப தூரம் போகணும் .கருந்தேள்னால பத்து நல்ல படம் சீக்கிரம் வரும்னு நம்பறேன் .அப்புறம் மியூசிக் பக்கம் எட்டிப் பாக்கலாம் .

இப்போ செவெண்டீஸ்ல நடக்கற கதை , மொதல்ல எந்த டைரக்டர்சும் அப்டி ஒரு கன்டம்பரரி பீரியட் படம் எடுக்க மாட்டேன்கறான். அவள் அப்படித் தான் மாதிரி. எடுத்தா காவிய தலைவன் இல்லாட்டி , ஒண்ணுமில்ல.அப்டி ஸ்டைலிஷா எடுத்தா MSV ஸ்கோர் எவ்ளவோ செட் ஆகும். இந்த மாதிரி சினிமா டைரக்டர்ஸ் ரசனையோட ரெபரென்ஸ் கொடுத்தா நல்லாருக்கும். இவிங்க இப்ப தான் ஸ்க்ரீன் ப்ளே ஒழுங்கா எழுத கத்துகிட்டு/எழுதிட்டு இருக்காங்க. சில பேர் கருந்தேள ஸ்க்ரீன் ப்ளே விஷயமா கன்சல்ட் பண்றதே பெரிய மாற்றம் .தனி ஆளா டீ ஆத்திகிட்டு இருந்தவருக்கு கெடச்ச மரியாதை .

கடைசியா போன வாரம் என் பிரெண்ட்ஸ் ரூமுக்கு வந்திருந்தாங்க .தமிழ் பாட்டு தான் கேட்டுகிட்டு இருந்தோம். மச்சி நீ கேக்கற இங்கிலீஷ் பாட்டு எதாவது போடேன்னு சொன்னான். டக்குன்னு கேட்டதினால ஏதோ ஒரு எரிக் க்ளாப்டன் பாட்டு போட்டேன்னு நெனைக்கறேன் .ஸோ இந்த மாதிரி நல்ல மியூசிக் கேக்கறதுக்கு நல்ல காது இருந்தா போதும். ரசனை எல்லாம் தன்னால உருவாகிடும். openness வேணும்.

இந்த மாதிரி அலுப்போட, சலிப்பா வியாக்யானம் பண்ற மாதிரி எழுதக் கூடாதுன்னு நெனைப்பேன். சரி எப்பவோ ஒரு தடவ தான் எழுதறோம், எழுதி தீத்துடுவோம். முடிந்தது. சுபம். ஹேப்பி பொங்கல் 🙂

இந்த பாட்டு வாசிக்கும் போது கிளாப்டனுக்கு அம்பத்தெட்டு வயசு இருக்கும்.

https://www.youtube.com/watch?v=YhpW8MAGnzs

Attn: Scorsese fans. must watch video .The Art of Silence:

https://www.youtube.com/watch?v=NUrTRjEXjSM

My favorite is the departed. You may hear Vijay say I am waiting 🙂

Cocaine (J.J. Cale Album Troubadour 1976) Eric Clapton – Cocaine “Crossroads Guitar Festival” Live Concert From Dallas, Texas 2004 USA Guitar…
youtube.com
Advertisements