ஒரு அன்பர் ராஜாவின் பாடல்களில் Psychedelic தன்மையைப் பற்றி சிலாகித்து இருந்தார் .என்னவொரு அதிசயம் என்றால், இசையமைக்கும் போது ராஜா சாருக்கே தோன்றாத பல சங்கதிகள் பாடலைக் கேக்கும் பொழுது அவரது ரசிகர்களுக்குத் தோன்றுமாம் என்பது ஒரு Myth.ஒரு வேளை ரசிகர்களும் சன்னத நிலைக்குத் தள்ளப்படுகிறார்களோ? அந்த சாங்கித்யம் வாய்ந்த ரசிகர்கள் என் நட்புப் பட்டியலில் இல்லையே என்று ஒரு ஆதங்கம் எனக்கு எப்போதும் உண்டு.

சில குறிப்பிட்ட இசைக்கருவிகளின் சேர்க்கையால், வாசிக்கும் பிரத்யேக முறையினால், (இதனால் மட்டுமல்ல) ஒவ்வொரு இசையும் அதற்கான பிரத்யேக வடிவம் பெறுகிறது. அதனால் உதாரணத்துக்கு fuzzy ஆன ஒலி கேட்டுவிட்டால் உடனே Psychedelic என்று சொல்லிவிடுகிறார்கள். நம்ம ஆளுங்க டபுள் பெய்ஸ், சாக்ஸ் வச்சு ஜாஸ்னு கதைவிடுகிற மாதிரி. சரி அவர்களினுடைய மனநிலை, அவர்களுடைய கருத்து அப்படி என்று விடலாம்னு பார்த்தால், தமிழ் சினிமாவின் முதல் Psychedelic தன்மை கொண்டது “கோட்டையை விட்டு வேட்டைக்குப் போன சுடலை மாடசாமி” பாடல் தான் என்று சொல்லி விடுவார்கள்

அப்போ Slip Inside This House ????

Advertisements