இலக்கிய நூல்களை மெய்வருத்தம் பாராமல் அலைந்து கண்டெடுத்துப் படித்து மகிழும் பழக்கம் ஓரளவு சிறு வயதிலேயே அவனிடம் படிந்துவிட்டது எனலாம். எல்லோரையும்போல் இவனும் சிறு வயதில் பேதாபேதம் உணராமல் அச்சேறிவிட்ட கௌரவத்தை அர்த்தமற்று மதித்து அகப்பட்டதை எல்லாம் கூசாது விழுங்கினான் என்றாலும் , ரசனை எனும் விதை துளிர்த்து இரண்டு இலை விட்டதும் உண்மைக்கும் போலிக்குமான வேற்றுமை அவன் பிரக்ஞையில் படர்ந்து வரலாயிற்று .வாசகன் என்ற நிலையில் அவசியம் உணர்ந்துகொள்ள வேண்டியவற்றைக் காலம் தாழாமல் அவன் தெரிந்துகொண்டான் என்று சொல்ல வேண்டும். குப்பைகளை நிர்தாக்ஷண்யத்துடன் ஒதுக்கத் தைரியம் வந்தது அவனுக்கு. போகப் போகக் குப்பைகளே அதிகம் என்பதையும் அவன் புரிந்து கொண்டான்.

– இல்லாத ஒன்று (சுந்தர ராமசாமி) 1966

A Day In The Life .கேட்டுட்டுத் தூங்கப் போனேன். அப்டியே, Jeff Beck , Roy Buchanan ,Nitin Sawhney ….னு போச்சு . அப்படியே எழுதிட்டா இன்னும் நாலு பேர் கேப்பாங்க .பீட்ல்ஸ் தான். ஏன் அடிக்கடி பீட்ல்ஸ் னா நான் முதல்ல கேட்ட பேண்ட் பீட்ல்ஸ் .பத்து வருஷத்துக்கு மேல இருக்கும். சென்னை வந்த புதுசுல பெருங்குடில வேலை, போருர்ல ரூம். பஸ்ல ரிடர்ன் வரும் போது செம்ம போர் அடிக்கும் மொபைல் கெடையாது, சரின்னு ஒரு ஒரு பேட்டரில இயங்குற ஒரு fm கிட் வாங்கினேன் .அதுல கேட்டது பீட்ல்ஸ் , மறுநாளே பிரௌசிங் சென்டர் போய் பீட்ல்ஸ் யாருன்னு தேடினேன் .இவங்களப் பத்தி பேசாத, எழுதாத கேக்காத ஆளுங்களே கெடையாது .நம்ம வாலி வரைக்கும் இன்ஸ்பயர் ஆகிருக்காங்க .என்ன மாதிரி Individual Music பண்ணனும்னு ஈடுபாடு இருக்கறவங்களுக்கு பீட்ல்ஸ் டிக்ஷனரி. இது வரைக்கும் பீட்ல்ஸ் கேக்காதவங்களுக்கு இந்தப் போஸ்ட்னு வச்சுக்கலாம் .சும்மா அவங்க காதுல போய் இதக் கண்டிப்பாக் கேளுன்னு திணிக்கல. அவங்க இஷ்டம். இன்னொரு முக்கியமான விஷயம் .பீட்ல்ஸ் ல ஆரம்பத்துலையே கேக்க ஆரம்பிச்சா அடுத்து எந்த progressive ராக் , electronica,ஏன் மெட்டல் கூட கேக்கலாம், கேட்டாலும் அதுல ஆர்ட் இருக்கா இல்லியான்னு சுலபமா முடிவு பண்ணிடலாம். குப்பைகளை ஈசியாக் கண்டுபுடிச்சிடலாம் .பீட்ல்ஸ் அப்படி ஒரு தாக்கத்த ஏற்படுத்தும் , அப்படி ஏற்ப்படுத்தலேன்னா ,இருக்கவே இருக்கு ஆலுமா டோலுமா.

இந்தப் பாட்டு ஒரு Musical Achievement!

இதக் கேட்டு முடிச்சிட்டு Jeff Beck பண்ணின கவர் கேளுங்க.

(https://www.youtube.com/watch?v=hHHY3eRUMsM)

கிராம்மி அவார்ட் வாங்கினது .Personally I don’t give a damn about Grammy or any award for that matter, they neither diminish nor extol the artistry and brilliance of an artist. Instrumental music தான். எனக்கு அது அலெர்ஜினு யாராவது சொன்னா? என்ன பண்ண முடியும், Instrumental Music எப்படிக் கேட்பதுன்னு ஒரு கட்டுரையா போட முடியும். Live at Ronnie Scott’s full show youtube ல இருக்கு. கேட்டுப் பாருங்க, அப்புறம் பாக்கலாம்.

சில பேர் மெசேஜ்ல கேட்டாங்க, அவங்களுக்காக சில சாங்க்ஸ், ஆர்டிஸ்ட் லின்க்ஸ். நிதின் சாவ்னே கேக்கலாம். jaaz ,electronica,R&B இத்யாதிகளை கலந்து அடிக்கறவர். மேண்டலின் ஸ்ரீநிவாஸ் கூட இவர் collaborate பண்ணிருக்கணும். செம்மையா வந்திருக்கும்.

Some songs:

Cause We’ve Ended As Lovers (Stevie Wonder cover, incredible song, ART!!

https://www.youtube.com/watch?v=VC02wGj5gPw

Nitin Sawhney – Nadia

https://www.youtube.com/watch?v=ZBjxLv9Dfhk

Roy Buchanan- Sweet Dreams.

The Departed , படம் முடிஞ்சு அந்த எலி ஜன்னல்ல ஓடும் போது ஒரு மியூசிக் ஆரம்பிக்குமே, எங்க நம்ம தான் லாப்டாப மூடிருப்போமே, இந்த பாட்டு தான் .

https://www.youtube.com/watch?v=swX9oq6TVAU

Project YUJ – Miracle(Cover)

அமானுஷ்யம், sudden ecstasy or excitement, கோவம், ஆத்திரம். சாந்தம் இதெல்லாம் கேட்டப்போ எனக்கு தோணுது, இதெல்லாம் கம்போஸ் பண்ண அந்த ஆள என்ன சொல்ல. இது செம்ம சாங். மேண்டலின் ஸ்ரீநிவாஸ் கவர், ஸ்ரீநிவாஸ் ஜீனியஸ் .வேற லெவல் மனுஷன் .சீக்கிரமா போய்ட்டான்.

https://www.youtube.com/watch?v=KfGOGHxAt7A

மேல இருக்கற எல்லா பாட்டும் உங்களுக்கு போர் அடிச்சதுன்னா இதக் கேட்டு ஸ்டார்ட் யுவர் டே 🙂

https://www.youtube.com/watch?v=uSquiIVLhrQ

நேரம் கெடைக்கும் போது வேற ஒரு ஆர்டிஸ்ட் Quintessential Songs பத்தி சொல்றேன் .

https://www.youtube.com/watch?v=usNsCeOV4GM

A Day in The Life The Beatles 1 Video Collection is Out Now. Get your copy here: http://thebeatles1.lnk.to/DeluxeBluRay “If you listen to my playing, I try t…
Advertisements