பொறந்தநாள், ஸோ, ஏதாவது உருப்படியா எழுதுவோம் .எல்லாருக்கும் ஞாபகம் வர்றது தான், ஏஜ்!! இட்’ஸ் ஜஸ்ட் எ நம்பர் னு பீத்தலா சொல்லிடலாம். அது கழுத ஏறிக்கிட்டே தான் போகுது .என்ன பண்ண முடியும்? நான் வயசப் பத்தி நெனச்ச ஒரே தருணம் பெங்களூர்ல. அங்க போனப் புதுசுல ஃப்ரெண்ட்ஸ் யாரும் கெடையாது. எம் ஜி ரோட்டுல ஃப்ரெண்ட் கூட ஃபோன்ல பேசிக்கிட்டு இருக்கும் போது தோணிச்சு, ஏன் கிட்டார் கத்துக்கக் கூடாது? அடுத்த நாளே போய் ஒரு நல்ல இன்ஸ்டிட்யூட்ல போய் நின்னேன் . கொஞ்ச நாள்ல ஜிமி ஹென்ரிக்ஸ் பத்தி ஒருத்தன் சொன்னான், நெட்ல போய் தேடித் பாத்தா அந்தாள் 27 வயசுல எல்லாத்தையும் பண்ணிட்டு செத்துப் போய்ட்டான். 27 க்ளப் னு ஒரு பெரிய லிஸ்டே இருக்கு. முக்காவாசி ராக் ஸ்டார்ஸ் 27 வயசுல (அல்பாயுசல) போய் சேந்துட்டான். ஆனால் மியூசிக் மட்டும் நெறைய விட்டிட்டுப் போயிருக்கான் .கிட்டார், மியூசிக் இதெல்லாம் தற்செயலா
என் தோள்ல தொத்திருச்சு. காலேஜ் படிக்கும் போது ஃபிசிக்ஸ் மட்டும் தான் என் மனசுல இருந்துச்சு. அவ்ளோ புடிக்கும். அது மட்டும் தான் எனக்கு நல்லா வரும். சுஜாதா சொன்ன மாதிரி வாழ்க்கையே படிப்படியான சமரசங்களால் ஆனது. அதாவது ப்ரோக்ரேசிவ் காம்ப்ரமைசஸ். என்ன மாதிரி யோசிச்சிருப்பான் அந்தாளு .ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஒரு விஷயத்துக்கு காம்ப்ரமைஸ் பண்ணிக்கும் போது இந்த வாக்கியத்தத் தான் நெனச்சுப்பேன் . சரி ஜிமி மாதிரி ஆளுங்களப் பத்தி படிச்சிட்டு ச்சே, நம்மளும் ஏதாவது சாதிக்கணும், 25 வயசுல தான் கிட்டாரையே கைல தூக்கிருக்க, சீக்கிரம் ஓடுன்னு சொல்லிப்பேன் .அவ்வளவு அரைகுறை அப்போ. அப்போலாம் சாதிக்கறதுக்கும் பிரபலாமாகறதுக்கும் கொஞ்சம் இடைவெளி இருந்துச்சு. இப்போ பிரபலமாகறது தனி கேட்டகரி. நறுக்குன்னு நாலு நல்ல ஃப்ரெண்ட்ஸ், நமக்குப் புடிச்ச விஷயங்கள டெய்லி பண்ணிக்கிட்டு பொலப்ப ஓட்டறது தேவலன்னு படுது. சாதாரணனாக இருக்கறது ஒன்னும் சாமான்யமான விஷயம் கெடையாது இப்போ.

“Fame is a Martyr” ஏவியேட்டர் படத்துல புடிச்ச டயலாக். என்னவோ நெறைய பேருக்கு இதச் சொல்லத் தோணுது. நமக்குப் புடிச்ச விஷயங்களப் பண்ணாம வேற யாருக்கோப் புடிச்ச விஷயங்களப் பண்றோம். வேற யாருக்கோ உபயோகப்படற விஷயங்கள தாராளமாப் பண்ணலாம். மனசுக்கு எது லிபரேட்டிங்கா இருக்கோ அதப் பண்ணுங்க மொதல்ல. ஒரு நாள் மாஸ்டர் கிட்டக்க எனக்கும் ஆர்னித்தாலஜி , சலீம் அலி, பறவை நோக்குதல் போன்ற விஷயங்கள் ஆர்வம் ஜாஸ்தின்னு வழிஞ்சேன் .ஒரு லிங்க் அனுப்பி இப்பவும் லேட் ஆகல, இன்னிக்கே ஆரம்பிக்கலாம்னு வாழ்த்தி அனுப்பினார். நமக்கு தான் செலக்டிவ் அம்னீசியா மாதிரி செலக்டிவ் சோம்பேறித்தனம் இருக்கே. கிட்டார் கத்துக்கணும்னு ஆசையா இருக்கு ,டைம் இல்லன்னு சொல்றவங்களப் பாத்தாலே செம கடுப்பாகும். டைம் எல்லாம் இருக்கு. ரெண்டே காரணங்கள், ஒன்னு செலக்டிவ் சோம்பேறித்தனம் ரெண்டு, மியூசிக் மேல காதல் இல்ல. சும்மா ஐ லவ் மியூசிக் னு சொல்றது முட்டாள்தனம். சும்மா எல்லாரும் கேக்கறாங்கன்னு நம்மளும் கேக்கறோம். அவ்ளோ தான். நமக்குப் புடிச்ச எல்லாத்தையும் தாண்டி மியூசிக் இருக்கு. ஒரு தடவ அதப் புடிச்சிட்டோம்னா போதும், வாழ்க்கையே மாறிடும். கிட்டார் என்ன, எத்தன இன்ஸ்ட்ருமென்ட் வேணும்னாலும் வாசிக்கலாம். டான்ஸ், பாடறது இதெல்லாம் ஓரளவுக்கு சின்ன வயசுல இருந்தே இருக்கும். இன்ஸ்ட்ருமென்ட் வாசிக்கறது தான் நாம் எந்த வயசுல வேணும்னாலும் தேர்தெடுக்கலாம். Acquired taste மாதிரி .தப்பில்ல. சில பேர் Prodigy, Virtuoso அவங்க வேற தளம்.

நான் கிட்டார் வாசிக்கறதப் பாத்துட்டு கொஞ்சம் ஃப்ரெண்ட்ஸ் வாங்கினாங்க. ஒரே ஒருத்தன் ஏதோ தேறிருக்கான் .மிச்சவங்க அதோடு சரி. வீட்டு கொலுல வைக்கவும் வாய்ப்பு இல்ல பாவம் அவங்களுக்கு. அவங்களாம் நான் மேல சொன்ன ரெண்டு விஷயத்தையும் பரிசீலித்து மீண்டும் தொடரலாம்.

எலிசபெத் காட்டன் ஒரு அமெரிக்க ஃபோல்க் ம்யூசிஷன். டீன் ஏஜ்ல அவங்களாவே கிட்டார் கத்துகிட்டாங்க, சில பாட்டும் எழுதினாங்க, அதுக்கப்புறம் கிட்டார் வாசிக்கறதையே விட்டுட்டாங்க, எப்பவாச்சும் சர்ச்சுல மட்டும். குடும்பம், புள்ளக்குட்டின்னு செட்டில் ஆயாச்சு. அறுபது வயசுல ஒரு ரிவைவல்.யாரோ ஒருத்தர் கேள்விப்பட்டு, நெறைய பேருக்குச் சொல்லி, பயங்கர ஃபேமஸ் ஆனாங்க. பாப் டிலன் மொதக் கொண்டு கவர் பண்ணினாரு. பதினொரு வயசுல எழுதின “Freight Train” அவ்ளோ பெரிய ஹிட். அநேக பாட்டு அப்போ கல்யாணத்துக்கு முன்னாடி (17 வயசுல) எழுதினது. அஸ்ட்ரோ பிசிக்ஸ்ல பி எய்ச் டி பண்ணிக்கிட்டு இருந்த ப்ரையன் மே Queen பாப்புலாரிட்டில கலந்து ஒரு பெரிய ராக் அன் ரோல் ஐகானாயிட்டார். நம்ம இன்னிக்கு பெரிய கிடாரிஸ்ட்னு சொல்ற சில பேர் ட்ரம்ஸ் மாதிரி வேற இன்ஸ்ட்ருமென்ட்ஸ் வாசிச்சிட்டு கொஞ்சம் லேட்டா கிட்டார் வாசிக்க ஆரம்பிச்சு பேமஸ் ஆயிருக்காங்க. நெறைய உதாரணம் சொல்லிகிட்டே போலாம். ஏதாவது ஒரு இன்ஸ்ட்ருமென்ட் கற்றுக்கொள்ள ஆரம்பிங்கோ, தாழ்மையான வேண்டுகோள்.

அப்புறம் பாலிமேத் ஆகணும்னுட்டு சில பேர் எல்லாத்தையும் கலந்துகட்டி செஞ்சு, மாஞ்சு போகறதப் பாக்கறேன். பாவமா இருக்கு. டிஸ்க்ரிப்ஷன்ல எழுத்தாளர், விமர்சகர், புகைப்பட நிபுணர், சினிமா டைரக்டர்…………….சேர்த்துகிட்டே போறாங்க. இது ஒரு ட்ரெண்ட் மாதிரி தெரியுது .எல்லாம் Attention Seeking, Identity Crisis..Bala Mars பாலா இதப் பத்தி நல்ல எழுதுவார் …..எப்படியோ போறாங்க. ஒரு சின்ன விஷயத்த மொதல்ல ரசிச்சு பண்ணுங்க போதும்.

Bala Mars உங்க பைய்யன் கிட்டார் கத்துக்க ஆரம்பிச்சிட்டாரா?

I own no copyrights to this song or these pictures
Advertisements