இந்த ஜீவராசிகளும் நம்ம கூடத் தான் வாழ்ந்துகிட்டு இருக்காங்க .90 ஸ்லயே இப்படி பொளந்துகட்டிருக்காங்க .(BTW இது லேட்டஸ்ட் ரிகார்டிங்).இந்தியாவுல தோன்றின செம்மதனமான,ஒரிஜினலான ராக் பேண்டுல ஒன்னு ஜீரோ. என்ன பிரச்சினைன்னா இந்த மாதிரி நல்ல பேண்ட்ஸ்க்கு சென்னைக்கு வரணும்னு ஆசை இருக்கு. கல்கத்தா, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி இப்டி எல்லா சிட்டீஸ்க்கும் போயாச்சு. சென்னை??? நடக்கவே மாட்டேங்குது.அவர்களுக்கு சென்னை அவ்வளவு பரிச்சயம் இல்ல. இவர்களுக்கு மும்பை , பெங்களூர்ல இருக்கற ஃபேன் ஃபாலோயிங் இல்லைங்கறது உண்மை தான்.இங்க இருக்கற வென்யூஸ்ல மொக்க மியூசிக் போட்டுக்கிட்டு இருக்காங்க.

இந்தப் பாட்டுல லீட் கிட்டார் வாசிக்கறவர் பேரு , Warren Mendonsa இன்னிக்கு தேதில, இந்தியால பெஸ்ட், பெஸ்ட், பெஸ்ட் . வெளிநாட்டு ராக் ஆர்டிஸ்ட்ஸ் அவங்களுக்குப் புடிச்ச ஆர்டிஸ்ட்ஸ் /ஆல்பங்கள் பத்தி சொல்லும் போது இவரோடது ஒன்னு இருக்கு. இவரோட பெங்களூர் கிக் கு போயிருந்தப்போ ஒரு பத்து நிமிஷம் பேசினேன் , ஏன் அவரால சென்னைக்கு வர்ற முடியலன்னு பேசினோம். இப்போ இவர் இருக்கற பேண்ட், Blackstrat Blues ..நெறைய வீடியோஸ் இருக்கு, கேட்டுப் பாருங்க. யாருக்காச்சும் இன்ட்ரெஸ்ட் இருந்துச்சுன்னா எனக்குப் பிங்க் பண்ணுங்க.

அப்புறம் ஒரு நாள் ஃபீனிக்ஸ் மால் போயிருந்தேன் , வெளில லான் ல செம்ம ஃக்ரவுட் .ரெண்டு மூணு பசங்க, Stairway to Heaven ப்ளே பண்ணிட்டு இருந்தாங்க. ஒரு படத்துல வெண்ணிற ஆடை மூர்த்திக்கு வடிவேல் சைக்கிள் சொல்லிக் கொடுக்கறது கண்ணு முன்னாடி வந்து போச்சு. RIP Led Zeppelin னு சொல்லிட்டு வந்துட்டேன் .(பக்கத்துல இருந்த ரெண்டு கப்புள் என்னப் பாத்து சிரிச்சுட்டு, அவங்களும் கெளம்பிட்டாங்க) .

போதனைகள் :

சரக்கு அடிக்கறது தப்பு. நல்ல சரக்கு , நல்ல பப்ல அடிச்சா தப்பில்ல.

நல்ல பப்ல மொக்க மியூசிக் கேட்டு அடிக்கறது மகா பாவம் .

Advertisements