Original Song by Srinivasan R

Adapted Lyrics by Srinivasan Based on the Short Story “Illadha Ondru” by the legendary tamil writer Sundara Ramaswamy aka Su.Ra

இல்லாத ஒன்றைத் தேடி அலைந்தான் ராப்பகலாய்

என்னவென்றுப் புரியாமல் தத்தளித்தான் நெடுநாளாய்

அச்சில் வந்த கௌரவத்தால்

மெய்வருத்தம் பாராமல்

கண்டதை எல்லாம்

விழுங்கி வந்தான்

காண்பவையெல்லாம் மாயத்தோற்றம்

உண்மை எங்கே?

இல்லாத ஒன்றைத் தேடி அலைந்தான் ராப்பகலாய்

என்னவென்றுப் புரியாமல் தத்தளித்தான் நெடுநாளாய்

ரசனை எனும் ஒரு துளி

விழுந்த அந்த கணத்திலே

மயக்கத்திலிருந்து

முழித்துக் கொண்டான்

குப்பைகளை ஒதுக்கும் திடம்

வந்தது அன்று

இல்லாத ஒன்றைத் தேடி அலைந்தான் ராப்பகலாய்

என்னவென்றுப் புரியாமல் தத்தளித்தான் நெடுநாளாய்

உண்மை எதுவென

அவளிடம் கேட்டான்

கையில் தந்தாள்

வெற்றுப் பேனா

மையை நிரப்பு

எழுதித் தீர்த்து விடு

இல்லாத ஒன்றைத் தேடி அலைந்தான் ராப்பகலாய்

என்னவென்றுப் புரியாமல் தத்தளித்தான் நெடுநாளாய்

Advertisements