Nothing Can Bind Us Together Quite Like Music – Part 2

டி எம் கிருஷ்ணா எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிக்கு தாராளமாக ஆதரவு கொடுத்திருப்பேன். ஆனால் ஹிண்டுவில் அவர் எழுதுவது எல்லாமே சின்ன சின்ன ஆசைகள் மாதிரி தான். சரி, அப்படி ஆசைப்படறதுக்குக் கூட ஆட்கள் இல்லை. அதனால் முழுவதும் ஏற்றுக்கொள்ள முடியுமா? எனக்கும் கூட 12 பார் ப்ளூஸ் எல்லாருக்கும் கற்றுக்கொடுக்க ஆசை தான். ((சேரியில் போய் என்று அடையாளப்படுத்திக்க விரும்பவில்லை, ஆர்வமுள்ள எல்லோருக்கும் பொதுவானது இசை)) என்னுடைய எதிர்கால திட்டங்களில் ஒன்று அது. ஆகையால், இதற்கு பிற்பாடாவது அவருக்கு ஆதரவு பெருகி நிறைய மாற்றங்கள் நடந்தால் நல்லதே.

அப்புறம் டி எம் கிருஷ்ணா என்னை விட பல மடங்கு உயர்ந்தவர் என்பதில் சந்தேகமே கிடையாது. பேசிக்கொண்டிருப்பவர்களை விட ஒரு விஷயத்தை சிறிய அளவிலாவது செய்பவர்களே சாதனையாளர்கள். இந்தக் கோட்பாட்டின்படி ஹிப் ஹாப் தமிழாவை ஆதரிக்க முடியுமா?

கர்னாடக சங்கீதத்தில் எனக்கு கேள்வி ஞானம் மட்டும் தான்.

Fundamental Research என்று ஒரு வகை இருக்குறது. James Clark Maxwell செய்த ஆராய்ச்சிகள் இன்னிக்கு அளப்பரிய வளர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அவரின் பங்களிப்பில்லாமல் கம்ப்யூட்டர்ஸ், இன்டர்நெட், பேஸ்புக் என்று எதுவுமே இருந்திருக்க வாய்ப்பில்லை என்று Mark zuckerberg சொல்கிறார். எனக்கு இந்த ஏரியா மீது ஒரு ஈர்ப்பு எப்போதுமே உண்டு. அப்புறம் Applied Science. டி எம் கே பண்ணுவது இதைத் தான். அந்த இடத்துக்கு வருவதற்கு ஏகப்பட்ட Fundamental Research தேவைப்படுகிறது, நாம் அவையெல்லாம் செய்துவிட்டோமா ?

எல்லோரையும் போல் என்னாலும் கர்நாடக சங்கீதத்தை இலகுவாக ரசிக்க முடியவில்லை. இதே போல் வெஸ்டர்ன் க்ளாசிக்ஸ். நேர்மையாகச் சொன்னால். பாக், பீத்தோவன் அவ்வளவு சுலபமாக ரசிக்க முடியவில்லை. ஆனால் கற்றுக் கொள்வது எளிமையாக இருக்கிறது, ஏன்? கர்நாடக சங்கீதம் ஒரு குறிப்பிட்ட வகையினரிடமிருந்து வெளியே வரவேண்டும், அது ஏற்புடைய கருத்து தான். அதையும் மீறி ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.

முதலில் கர்நாடக சங்கீதம் நம்முடைய கல்ச்சுரல் சிஸ்டத்திலிருந்து வெளியே வந்து Curriculum ஆக அமைய வேண்டும். தொன்மையான பாரம்பரிய இசை இந்த இசை. எவ்வளவு பேர் ஒரு கர்நாடக இசை பாடலைப் பொறுமையாகக் கேட்கிறோம். நாம் எப்போது கடைசியாக ஒரு கர்நாடக இசைப் பாடலைக் கேட்டோம் என்று யோசித்துப் பாருங்கள். விடை கிடைக்கும், இப்போது நடந்திருக்கும் டி எம் கேவைத் தாண்டி யோசிக்க வேண்டும், பொதுவாக நாம் எப்படி கர்நாடக இசையை பார்க்கிறோம், ரசிக்கிறோம், ஏன் ரசிக்க முடிவதில்லை, ரசனை பரவலாக உருவாக யார் முனைகிறார்களோ அவர்கள் தான் எனக்கு முக்கியமாகத் தெரிகிறார்கள்.

சஞ்சய் சுப்பிரமணியன் ஒரு பேட்டியில் இவ்வாறு சொல்கிறார்

“கர்நாடக இசைத் துறை என்பது ஆர்கனைஸ்டு செக்டார் கிடையாது.ஏதோ சில சபாக்கள் சேர்ந்து சில காரியங்களைச் செய்துவருகின்றன. அவ்வளவுதான். இதற்குப் போய் உள்ளே வரலாமா, வரக் கூடாதா, கோர்ட்டில் கேஸ் போடலாமா என்றெல்லாம் யோசிக்க வேண்டியதில்லை.”

அவ்வளவு தான், லாபி, கூஜா என்று எல்லா இடத்திலும் தான் இருக்கிறது.

ரமேஷ் விநாயகம் உருவாக்கிய கமகா பாக்ஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கீர்களா? அவருடைய இருபத்தைந்து வருட ஆராய்ச்சியின் பலன். இது என்ன என்று தெரிந்துகொள்ள

http://www.rameshvinayakam.com/research/

http://timesofindia.indiatimes.com/…/articleshow/8814474.cms

இது தான் என்னைப்பொருத்தவரை ஒரு முக்கியமான Breakthrough.

“Isn’t it a bit unfair that Western music is able to pen down every note on paper while Carnatic music can’t?”

கர்நாடக சங்கீதம் வாய்ப்பாட்டு வடிவமாகத் தான் இருக்கிறது. எல்லோரும் இந்த இசை வடிவத்தை புரிந்து கொள்வதற்கு ஒரு டூல் வேண்டும், திருக்குறளுக்கு எழுதிய பல்வேறு உரைகள் மாதிரி. இன்னும் இன்னும் இன்னும் இன்னும் இன்னும் இன்னும் இன்னும் எவ்வளவு எளிமைப் படுத்த முடியும், இப்படி யோசித்தால் தான் அனைவருக்கும் ஒரு நன்னாளில் சென்று சேரும், வெறும் கனவு தேறாது. குழந்தைகளுக்கு ரைம்ஸ் எல்லாம் புத்தகத்திலிருந்து பென் ட்ரைவுக்கு போய் விட்ட சூழலில் ஒரு விஷயம் சென்று சேரும் கேப்ஸ்யூல் வடிவம் ரொம்ப ரொம்ப முக்கியம். இந்த முயற்சியால் வெளிநாட்டவர்களும் நம்முடைய இசையை எளிதில் புரிந்து கொள்ளலாம். கமகம் தான் நம்முடைய இசையை தனித்துக் காட்டுகிறது, அதே சமயத்தில் கடினமாக்குகிறது. இது இன்னும் எளிமைப் படுத்தப்பட்டு பள்ளிகளில் ஹிந்தி, சமஸ்கிருதம் மாதிரி ஆப்ஷனல் கோர்ஸாக முதலில் வைத்து ……………………நடக்கவேண்டிய விஷயங்களை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது .

கடைசியாக, இந்த இசை வடிவம் வளர்வதற்கு Musicologists பங்கேற்பு வேண்டும். ஏகப்பட்ட விஷயங்கள் தோண்டி எடுக்கப் படவேண்டும். எங்க, இங்கே Ph.d வாங்குவது ஒரு ஜெராக்ஸ் எடுப்பது மாதிரி, என்னவொன்று கொஞ்சம் காஸ்டலியான ஜெராக்ஸ்.”மாப்ள , ஒரு வருஷத்துல Ph.d முடிச்சிருவாப்ல, சம்பள ஸ்கேல் உயர்ந்துவிடும்” என்று உறுதியளித்து கல்யாணம் முடிப்பது, 5L 10L என்று பேரம் பேசுவது என்று Ph.d பற்றி நிறைய கதைகள் இருக்கின்றன.

இந்த வீடியோ பார்த்தீர்களானால் எவ்வளவு ஒரு உயர்வான இசையை நாம் இழக்கிறோம் என்று தெரியும். நான் கஷ்டப்பட்டு ஜாஸ் கற்றுக்கொண்டு வருகிறேன். ஏன்,எனக்கு கர்னாடிக் கற்றுக்கொள்ள தயக்கம் இருக்கிறது? சிறு வயது முதல் கர்நாடக சங்கீதம் கேட்டு வளர்ந்த ஐயங்கார் தான் நான்.

இன்னும் கேள்விகள் எவ்வளவோ இருக்கின்றன.

விடை தேடும் முன்

நாம் தான் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறோமே, நானும் இதில் அடக்கம்

https://www.youtube.com/watch?v=gFxSOS1p3IE
https://www.facebook.com/srinivasan.rengarajan.9/posts/1249892451688151

Advertisements