New wave, new rave

Hidin’ from reality
In your world of hypocrisy – Bob Marley

நேற்று எழுதிய பதிவின் Prequel

ப்ளூஸ் 19 ம் நூற்றாண்டின் இறுதியில் ஆஃப்ரோ அமெரிக்கர்களிடமிருந்து தோன்றியது. பின்னர், அது, ஜாஸ், ராக் அண்ட் ரோல், ராக், இன்னும் ஏகப்பட்ட இசை வடிவத்துக்கு வித்திட்டது.

அது உலகப் பிரபலமாகி, வெள்ளை மாளிகை வரை போனது எப்படி? ஒரு இனத்தின் எழுச்சியோடு, விடுதலையோடு பயணிக்க வேண்டிய அவசியம் அதற்கு இருந்தது.

இதை ஏன் சொல்கிறேனென்றால், என்னைப்பொருத்தவரை ப்ளூஸ் தான் இன்று உலகத்தில் இருக்கும் இசையிலேயே எளிமையான இசை. பாடு பொருள் எளிமையானது,மூன்றே மூன்று chords போதும். அவர்களின் வலியைப் பதிவு செய்ய அதுவே போதுமானதாக இருந்தது. அலங்காரங்கள் எல்லாம் பிற்பாடு ஏற்பட்டவை. அது எளிமையாக இருந்ததினால் தான் அவர்களையும் தாண்டி, உலகமெங்கும் வியாபித்திருக்கிறது. ப்ளூஸின் எளிமை தான் எல்லோரையும் ஈர்க்கச் செய்கிறது.

திரும்பத் திரும்ப ஏன் எளிமை என்கிற சொல்லை உபயோகப்படுத்துகிறேன் என்றால், நான் சிறு வயது முதல் கர்நாடக சங்கீதம் கேட்டுக் கொண்டு வந்தவன். ப்ளூஸ் ஈர்த்த அளவுக்கு கர்நாடக சங்கீதம் ஈர்க்கவில்லை.

சிலரின் கருத்துக்கள் :

i : கர்நாடக சங்கீதம் ஒரு குறிப்பிட்ட வகையினரிடம்/வகைப்பாட்டுக்குள் சிக்கி இருக்கிறதனால் எங்களால் அதற்குள் ஈடுபடமுடியவில்லை.

ஏற்புடைய கருத்து. முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன்.

ii ) என்ன காரணத்தினாலோ அதற்குள் ஈடுபட முடியவில்லை.

இந்தியன் படத்தில் தன்னா நானே தானானே கேட்டதும் கமலுக்கு ஏற்படும் ரியாக்ஷன் தான் எல்லோருக்கும் ஏற்படுகிறது.

ஸோ, இங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதை விட்டு, குப்பத்திலோ, கவர்னர் மாளிகையிலோ எங்கு வாசித்தாலும் இப்போதைக்கு பயன் பெரிதாக இருக்காது. மேட்டுக்குடி மக்கள், அடித்தட்டு மக்கள், இவர்கள் இரண்டையும் விட்டுவிடுவோம், நடுவாந்தரமாக இங்கு இதைப் படித்துக் கொண்டிருக்கும் நம்மில் எப்போது ரசனை பரவலாக உருவாகும். இதைப் பற்றி முதலில் பேசலாம். அப்புறம் சேரிக்குப் போகலாம். நாம் தான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உடனுக்குடன் ஆதரிக்கிறோம். ஒரு செயலை ஆதரிப்பதற்கு முன்னால் நமக்கு முதலில் புரிதல் வேண்டாமா? முதலில் நம்மில் தான் இந்த மாற்றம் உருவாக வேண்டும், கிருஷ்ணா முதலில் நம்மிடம் தான் நிறைய உரையாடிருக்க வேண்டும், குப்பத்துக்குப் போய் சொல்லிக்கொடுப்பதற்கு கர்நாடக சங்கீதம், ப்ளூஸ் போன்று ஒரு இனவெழுச்சியின் ஒரு அங்கமோ, விடுதலை முழக்கமோ கிடையாது. நான் கூட என்னுடைய கிட்டாரை எடுத்துக் கொண்டு ஒரு குப்பத்துக்குப் போக முடியும், ஃபோட்டோக்கள் எதுத்துக்கலாம். இங்கு ஷேர் செய்து கொள்ளலாம். சமூக ஆர்வலர் என்கிற பேரை சில மாதங்களில் நிறுவிக் கொள்ளலாம்.இன்னும் சொல்லப் போனால், என்னுடைய ப்ளூஸ் எல்லோருக்கும் புரியும் படி இருக்கும், ராக் அன்ட் ரோல் பீட்டுக்கு ஏத்தபடி அவர்களை ஆட வைக்க என்னால் முடியும். இப்படி எல்லோரும் சேர்ந்து அவர்களை exploit செய்வது சரியா? சோத்துக்கு வழி இல்ல, போங்கடா நீங்களும் உங்க ப்ளூசும்னு சொல்லிட்டா?

இதைப் படியுங்கள்.

http://dyske.com/paper/778

(இந்த ஆர்டிகிளில் எனக்கு முழுவதும் ஒப்புதல் இல்லை. எனக்குத் தெரிந்து சில நிறைய அமெரிக்கர்கள் ஜாஸை தூக்கிப் பிடிப்பார்கள்)

To be able to enjoy instrumental music, you must be able to appreciate abstract art, and that requires a certain amount of effort. Just mindlessly drinking wine, for instance, would not make you a wine connoisseur. Mindlessly looking at colors (which we all do every day) would not make you a color expert either. Great art demands much more from the audience than the popular art does.

இது தான் முக்கியமான விஷயம். இதை கர்நாடக சங்கீதத்துக்கு பொருத்திப் பார்க்கலாம். ஸோ, ஒரு வகையான உழைப்பு தேவைப்படுகிறது, சில கலை வடிவங்களை ரசிப்பதற்கு. நீங்களே மற்ற விஷயங்களைத் தேடிக்கொள்ளுங்கள்.

Ry Cooder, நான் அடிக்கடி எழுதும் ஒரு இசைக்கலைஞர். என்ன செய்தார் இவர்.

Cooder turned his attention to world music, recording the album A Meeting by the River with Indian musician V.M. Bhatt. Cooder’s next project, a duet album with renowned African guitarist Ali Farka Touré titled Talking Timbuktu, won the 1994 Grammy for Best World Music Recording. His next world crossover would become one of the most popular musical rediscoveries of the 20th century. In 1997, Cooder traveled to Cuba to produce and play with a group of son musicians who had little exposure outside of their homeland. The resulting album, Buena Vista Social Club, was a platinum-selling international success that made stars of Compay Segundo, Ibrahim Ferrer, and Rubén González, and earned Cooder another Grammy. He continued to work on projects with his Buena Vista bandmates, including a collaboration with Manuel Galbán in 2003 titled Mambo Sinuendo. His other work in the 2000s included sessions with James Taylor, Aaron Neville, Warren Zevon, and Spanish diva Luz Casal.

கிருஷ்ணா இவர் மாதிரி சில விஷயங்களை இங்குள்ள சூழ்நிலையில் அவரின் தளத்தில் தொடர்ந்து இயங்கி வந்திருந்தால் கண்டிப்பாக சிலாகித்திருப்பேன். ஒரு வெள்ளையருக்கு ஆஃப்பிரிக்கா, மாலியில் இருக்கும் ஒருவரையும், நம்முடைய விஸ்வ மோகன் பட்டையும், க்யூபாவிலிருக்கும் கலைஞர்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கு எது உந்து சக்தி.

பதில். Music is Universal.

அமெரிக்க லைட்னிங் ஹாப்கின்ஸ், ஜான் லீ ஹூக்கர், மாலியில் இருக்கும் அலி ஃபார்க்கா எல்லோரும் ஒரே புள்ளியில் சந்திக்கிறார்கள். அவர்களை இணைத்ததே இவரின் வெற்றி.

யார் பின்னால் ஓடுகிறோம் என்று தெரிந்து ஓடுங்கள்.

இப்போது நான் நேற்று எழுதிய பதிவையும் படியுங்கள், ஓரளவுக்கு தெளிவு வரலாம்.

சுபம்

Advertisements