ஏன் ஒரு இன்ஸ்ட்ருமென்ட் கற்றுக்கொள்வது அவசியம்? நியோரோலாஜிக்கல் அனுகூலங்கள் தவிர்த்துப் பார்த்தாலும் ஏகப்பட்ட பலன்கள் இருக்கின்றன. அடிக்கடி சொல்லியிருக்கிறேன் .நான் யாரைப் பார்த்தாலும் ஏதாவது ஒரு இன்ஸ்ட்ருமென்ட் கற்றுக்கொள்ளச் சொல்லுவேன். “இந்த வயசுக்கு அப்புறம் எப்படின்னு” பெரும்பாலும் பதில் வரும். ஒரு சில பேர் கிட்டாரும், கீ போர்டும் வாங்கியிருக்கிறார்கள். அதில் ஒருவர் வீட்டில் அவர் வாங்கிய கிட்டார் அழுக்கு படிந்த நிலையில் இருக்கிறது, எனக்கு ஒன்றும் வருத்தமில்லை. ட்ரெட் மில் வாங்கி அதில் ஜட்டி காயப்போடும் வீட்டை விட இது பரவாயில்லை.

சிலர் போட்டோகிராபியில் ஆர்வமென்று DSLR வாங்கிவிடுகின்றனர். வீட்டுக்கு அருகிலிருக்கும் செடியில் தேமேனென்று உக்கார்ந்திருக்கும் தட்டானைப் படம்பிடிப்பார்கள். இல்லாவிடில் சிறுசேரியிலோ, மெப்சிலோ இருக்கும் அவர்களின் ஆபீசை, டீக்கடை க்ளாஸ், மசால் வடை (ஜூம் செய்து), வீட்டு பால்கனியில் வைத்திருக்கும் பௌலில் இருக்கும் பூவை ஜூம் செய்து படம் பிடித்து அதில் வாட்டர்மார்க் மறக்காமல் போட்டு இங்கு ஷேர் செய்து விடுவார்கள். ஐந்து நிமிஷத்தில் அம்பத்தாறு லைக்குகள் வரும். அநேக பேர்வழிகளுக்கு இதற்கு அப்புறம் ஆர்வம் குறைந்துவிடும். வெகு சிலரே இதிலிருந்து வெளியே வருகின்றனர். தீவிரப்பற்று இருப்பவர்களுக்கு மொபைல் கேமரா போதும். ஆனால் உருப்படியாக இருக்கும் போட்டோவுக்கு ஒரு நாளும் அவ்வளவு லைக்குகள் வந்து பார்த்ததில்லை.

செம்ம போட்டோகிராபி + டிஜிட்டல் ஆர்ட்

https://www.facebook.com/photo.php?fbid=10205290206282807&set=a.2988214192516.151205.1476923504&type=3&theater

விஷயம் இது தான், புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதை தான்.

சில பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே தங்கள் குழந்தைகளை ஒரு இன்ஸ்ட்ருமென்ட் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்துகிறார்கள். நல்ல விஷயம் தான், அநேக குழந்தைகள் ரெண்டே மாதத்தில் கிட்டாரையோ, கீ போர்டையோ ஓரம் கட்டிடுவார்கள். என் நண்பர் பயங்கர ஆர்வமாக இருந்ததினால் தன் மகனை டான்ஸ் க்ளாஸ் சேர்த்துவிட்டார், இப்போது அங்கு போகவே பிடிக்கவில்லை என்கிறான், a lapse of interest

பசங்களுக்கு திடீரென்று ஒரு விஷயத்தின் மீது ஆர்வம் வருவதும் இன்னொன்றின் மீது தாவுவதும் இயற்கை தான். பொழுதன்னிக்கும் ஸிந்த் பீட்ஸ் இறைந்து கிடைக்கும் தமிழ் சினிமா பாட்டுக்கள் போட்டால் எப்படி கிட்டாரோ, கீ போர்டோ வாசிக்கும் ஆர்வம் இருக்கும். (ஸிந்தஸைசர் கூட எதிர்காலத்தில் கற்றுக்கொள்ள கீ போர்ட் முதல் படி) அநேக பெற்றோர்களுக்கு சினிமா பாட்டு தவிர ஒன்றும் தெரியாது, ஆனால் பசங்களோ எப்படியாவது கிட்டாரோ, கீ போர்டோ வாசித்துவிட வேண்டும். ஸ்டீவி ரே வான், எரிக் கிளாப்டன், ஜான் மேயர் போட்டுக் காண்பித்தால் பசங்களிடம் ஒரு சின்ன பொறியாவது கிளம்ப வாய்ப்பிருக்கிறது. இப்படி ஸ்டீவி வொண்டர் பாட்டை கேட்டால் யாருக்குத் தான் கீ போர்ட் வாசிக்கத் தோணாது?

http://www.facebook.com/HarryVarthakouris in performance at the White House celebrating the music of Stevie Wonder http://www.varthakouris.com
youtube.com
Advertisements