ஒரு படத்துக்கு ஆயிரம் விமர்சனம் ஒரே வாரத்துல வந்திருது . ஆயிரத்து ஒன்னா நான் எழுதல, கவலைப்படாம படிக்கலாம். ஏற்கனவே அநேக பேர் கொரியாக்காரன், ஈரான்காரன், பிரெஞ்சுக்காரன் படம்னு போய்ட்டாங்க. கொரியாக்காரன் படத்துல பேப்பரை விரிச்சு தரைல நம்ம ஸ்டைல்ல சரக்கடிக்கற மாதிரி காட்டினாலும் எனக்கு கொரியாக்காரன் படம்லாம் ஒட்டவே மாட்டேங்குது. எனக்கு தமிழ் படம் முக்கியம், அதான் ஆயிரம் தடவ திட்டிகிட்டு, சலிப்போடயாவது எழுதறேன், ஒரு வேள இதைப் படிச்சிட்டு அடுத்த படத்துலயாவது மியூசிக் சிறப்பா வந்திருச்சுன்னா எனக்கு தான் மகிழ்ச்சி.

ஸோ, சின்ன படத்துக்கு இந்த கரிசனம், பெரிய பட்ஜெட்ல எடுக்கற காஸ்ட்லி குப்பைக்கு வேற ட்ரீட்மெண்ட்.

சரி இப்போ இந்த ஆயிரம் விமர்சனத்துக்கு வருவோம், எவனாவது உருப்படியா எழுதறானா?
தரமணி படம் வர்றதுக்கு முன்னாடியே டீஸரப் பாத்து ஆராஞ்சு அவிச்சிட்டாய்ங்க. . இப்ப இருக்குற பொண்ணுங்க, இப்படி இல்ல, பசங்க அப்படி இல்ல, டேய், அது ஒரு டீசர் மட்டும் தான். விமர்சிச்சு, விமர்ச்சிச்சு, இன்னொரு கதையையே விமர்சனத்தின் முடிவுல ரெடி பண்ணி டைரக்டர் கைல கொடுத்திடறாய்ங்க. சினிமெட்டாக்ரஃபி சூப்பர்னு ஒரே வார்த்தைல முடிச்சிடறாய்ங்க. கேமரால கதையை எங்கடா சொல்றாய்ங்க, மலேசியாவையோ, மன்னார்குடியையோ மட்டும் சுத்தி வளைச்சி எடுத்தா போதுமா? ஒவ்வொரு பிரேமும் கண்ணுல ஒத்திக்கற மாதிரி இருந்தா சினிமெட்டாக்ரஃபி சூப்பராயிடுமா?

சரி, எடிட்டிங்?? கபாலி மாதிரி மீடியாக்கர் படத்துல வெட்டி ஒட்டி எடுக்கற எடிட்டிங் பண்ணினவர் கிட்ட பதினாலு பேட்டி. உறியடி படத்துல அட்டகாசமா எடிட்டிங் பண்ணின அபினவ் சுந்தர் நாயக் பேர் பேரு வெளிய தெரியாது. ஏன்னா சின்ன பட்ஜெட் படம், ஹிண்டுல எழுதின ரிவ்யூல கூட எடிட்டிங் பத்தி எழுதினவனுக்கு கண்ணு தெரில, இல்லாட்டி இப்டி எழுதறது தான் விமர்சனமா? ஆனா, மியூசிக் பத்தி மட்டும் கூட ரெண்டு வரி விமர்சனம் எழுதிடறாய்ங்க. ஒரே எரிச்சல், இல்லாட்டி, சூப்பர் அவ்ளோ தான். ஹ்ம்ம்.

ஜோக்கர் படத்துக்கு வருவோம், ரொம்ப நாளைக்கு அப்புறம் கொஞ்சம் சென்சிபிலிட்டியோட இருந்த ஸ்கோர். பெரும்பாதி படத்துல மியூசிக் கதையை சொல்ல அட்லீஸ்ட் “முயற்சி” பண்ணுது. (இளையராஜாவோட ஆரம்ப காலத்துக்கு அப்புறம், ஸ்வதேஸ், ரிதம் கடைசியா எனக்கு திருப்தி பண்ணிய படங்கள்). இந்த முயற்சியே ரொம்ப பெரிய விஷயம், இப்போ சமீப காலத்துல வந்த குப்பைகளோட ஒப்பிடும் போது, உதா: காக்கா முட்டை, விசாரணை, கபாலி
எவனோ ஒருத்தன் முதல் பாதில மியூசிக் ஒரே எரிச்சலா இருக்கன்னு எழுதிருந்தான். இன்னொரு தடவ பாக்க டிக்கெட் வேணும்னா எடுத்து
தரேன்.

ஸ்கோர் ரொம்ப ப்லீக்கா இருக்கும்னு நெனச்சேன். டார்க் ஹ்யூமர் எலிமெண்ட்ஸ் இருந்ததுனால கொஞ்சம் பாசிட்டிவ்வா இருந்துச்சு. ரெண்டாவது பாதி தான் எரிச்சல், அதுக்கு தான் இந்த போஸ்ட்டே எழுதறேன். (நெகட்டிவிட்டி வந்துவிடக் கூடாதுன்னு சுத்தி வளைச்சி எழுத வேண்டிருக்கு, பாவம் பணம் போட்டிருக்காய்ங்க).

ரொம்ப நேரம் யோசிச்சிகிட்டு இருந்தேன். ஏன் நம்மாளுங்க இன்ஸ்ட்ருமென்ட்ஸ் மூலமா ஒரு காட்சியோட தீவிரத்தைச் சொல்ல முயற்சியே செய்ய மாட்டேங்குறாங்க. இந்த ஆங்கிள்ல கூட யோசிச்சேன், நம்மளோட இசை பெரும்பாலும் வாய்ப்பாட்டு இசை சார்ந்தது. அப்படியும் பார்க்க முடியவில்லை, ஒரு வேளை செல்லம்மா, கண்ணம்மானு, ஓ ஓ என்று பின்னணியில் அழுதால் தான் காட்சியின் வீரியம் புரியும்னு டைரக்டரும், ஷான் ரோல்டனும் நெனச்சிருப்பாங்களோ.

அப்படிப் பார்த்தா ஸ்ரீதர் தன்னோட படங்கள்ல நீட்டி முழக்கி இருந்த வசனத்தை சுருக்கினாரே, சில விஷயங்களில் சென்டிமென்ட்ஸ் பார்த்தார் ஸ்ரீதர், அதே நேரத்துல ஏகப்பட்ட விஷயம் புதுமையா பண்ணினார். மகேந்திரன், மணிரத்னம் பாலு மகேந்திரா கேமிரா மூலமாக கதை சொல்ல முயற்சித்தார்களே. பாடல்கள் சுவாரசியமாக மாற ஆரம்பித்தன. டெல்லியில் இருந்து வரும் போது மனசத் தொடுகிற மாதிரி இன்ஸ்ட்ருமென்ட்ஸ் மூலமாகச் சொல்ல முடியாதா? ஷான் ரோல்டன், அதான் கேட்டேன், வேற கம்போஸர்னா இதை எழுதாமலே போயிருப்பேன். இப்டி ஓலமிட்டா ஷான் ரோல்டன் குரல் வேற ராஜா சார் மாதிரி கூடிய சீக்கிரம் பிடிக்காமப் போயிருமோன்னு தோணுது.

நெப்ராஸ்கா எடுத்த டைரக்டர் அலெக்ஸ்சாண்டர் படம் முழுக்க சைலண்ட்டா ஒரு படம் எடுக்க ஆசைன்னு சொல்லிருக்கார். நெப்ராஸ்காவிலேயே சைலன்ட் போதவில்லையாம், ஒரு வகையில் சரி, எனக்கும் அப்படித் தான் படம் பாக்குறப்போ தோணிச்சு. முழு சைலன்ட் படம் கூட எடுபட்டிருக்கும்.

https://www.youtube.com/watch?v=8SGwcZizcVc

இந்த வீடியோ பாருங்க. ஏன் நம்ம படங்கள்ல வெர்பல் காட்சிகள் அதிகமா இருக்கறது இல்ல? அதுக்காக ராஜு முருகனோ, ஷான் ரோல்டனோ இப்படி எடுத்திருக்கலாம்னு உபதேசம் பண்ற போஸ்ட் இல்ல இது. ஒரு கன்ஸ்ட்ரக்டிவ் ஃபீட்பேக், அவ்ளோ தான். இன்னும் சொல்லப் போனா இந்த வீடியோல நெப்ராஸ்கா ஸ்கோர் பத்தியும் சொல்றார். ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனோட நெப்ராஸ்கா ஆல்பத்தோட கவர் மாதிரி இருக்குன்னு சொல்றார், அதுவும் சரின்னு தான் படுது,

அக்கூஸ்டிக் டோன் அதே மாதிரி ஃபீல் தான் தருது. அவருக்கு ஓகே , ஆனா நம்மளுக்கு எல்லாம் நெப்ராஸ்கா படத்தோட ஸ்கோர் திருக்குறள் மாதிரி, கண்ணுல ஒத்திக்கணும். அவர் சொல்ற காரணம் மியூசிக் ப்லீக்கா இருக்குற அளவுக்கு படம் இல்ல. ஸோ, எப்படியெல்லாம் விமர்சம் பண்றாய்ங்க பாருங்க அங்க, இம்புட்டுக்கும் ஆஸ்கர் நாமினேட்டட். ஸ்கோர்.

என்ன கேட்டிருந்தா தாராளமா செம்மத் தனமா சஜஸ்ட் பண்ணிருப்பேன். கடைசி 20 மினிட்ஸ் வந்த சீனோட மியூசிக் டெக்ஸரே மாத்திருப்பேன், எவ்வளவோ இன்ஸ்ட்ருமெண்ட்ல எங்கயோ ஒரு நோட்ல ஒளிஞ்சிருக்கு சோகங்கள், உங்களுக்குத் தெரியாத சட்டதிட்டங்கள் ஒன்றுமில்லை யுவரானர்.

சும்மா சொகத்தைக் காமிக்க ஓலமிடறத நிப்பாட்டுங்க, நாங்கல்லாம் எங்கயோ இருக்கோம், சீக்கிரம் ஓடி வாங்க கம்போஸர்ஸ். வெயிட் பன்றோம்.

அப்புறம், கடைசியா படத்துல ரொம்ப ரொம்ப ரசிச்ச ஒரே விஷயம்,, குவாட்டருக்கு அடிச்சி புடிச்சு ஆட்டைய போடற பவா செல்லத்துரை. “மண்டைக்குள்ள ஒரே கலவரம் பையா” , செம்ம. அவர் வர்ற இருப்பது நிமிஷம் படம் ரொம்ப ரொம்ப புடிச்சிருந்துச்சு. அவரு செத்தாரு, படமும் ???? வேணாம் நீங்க போய் பாருங்க. தாராளமா பாக்கலாம். யாராவது புனித சினிமா வாத்தியார்கள் சாக்கடை, கூவம், செப்டிக் டேங்க், மலம், வாந்தி அப்டின்னு சொல்ற முன்னாடி பாத்துட்டு வந்திடுங்க.

https://www.youtube.com/watch?v=drdrVr-4dBo

Advertisements