அகிரா குராசாவாவின் ஆவி எங்களை ஆசீர்வதிக்கும்

“It seems a waste to me to work and work for years,” Rory Gallagher told Rolling Stone in 1972, “and just turn into some sort of personality.”

இதைத் தான் இளையராஜாவைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றுகிற விஷயம். ஆயிரம் படங்களுக்கு மத்தியில் ஹவ் டு நேம் இட் மாதிரி சில ஆல்பங்கள் ஒரு ஓரத்தில். அதிலும் எம் எஸ் வியிடன் ரமணரைப் பற்றி கீ வீரமணி கோலத்தில் ஒரு மட்டையான டிவோஷனல் ஆல்பம் வேறு செய்திருந்தார். (https://www.youtube.com/watch?v=9KgELK2atBk) இன்று அனைவரும் அவரை வழிபடுகின்றனர், ஆயிரம் படங்கள், அதிக முறை தேசிய விருதுகள், ரேடியோக்களில் எப்போதும் ஒலிக்கும் அவரது பாடல்கள், விழா மேடைகளில் மைக்கை பிடித்தவர்கள் எல்லாம், ராஜா சார், ராஜா சார், ராஜா சார் , ராஜா சார்

ஆக, அவர் இப்படிப்பட்ட பிம்பத்தைத் தான் எதிர்பாத்திருந்தார் போல. என்னவொன்று காலப்போக்கில் அவரை மறந்துவிடுவோம், இப்போது மறுக்கலாம். ஏனெனில், அவர் ஒரு சினிமா இசையமைப்பாளர். அவ்வளவு தான், காலம் கடந்து நிற்கும் சினிமாக்களே கடந்த முப்பது வருடங்களில் ஒரு பத்து கூடத் தேறாது. அப்படியிருக்க…..

அது தான் உண்மை, இப்போது என் எம் எஸ் வி பாடல்களை டீவியில் பார்க்க முடியவில்லை? சில காரணங்கள், பிளாக் அன்ட் ஒயிட், நாயக நாயகியர்களின் தழுதழுக்கும் முக பாவங்கள், நடன அசைவுகள், நாம் பார்த்தேயிராத அவர்களின் தோற்றம்….சுருங்கக்கூறினால், நாம் சகிக்கவே சகிக்கமுடியாத வீடியோக்கள், கரெக்ட்?? இதே மாதிரி சில காரணங்கள் ராஜாவுக்கும் உருவாகி வரும், காலப்போக்கில் மறக்கப்பட்டு விடுவார். இளையராஜா Juke- Box மட்டுமிருக்கும். அவர் இந்தளவுக்கு நீடித்ததற்கு காரணம் அவர் கடந்த பத்து வருடங்களில் செய்த இசை ஒன்றும் கிடையாது. FM Revival . சினிமாக்களில் சில ஹீரோக்கள் சரக்கடிக்கும் போது ராஜா சார் கேட்டதினால் மட்டுமே.

இது நிதர்சனமான உண்மை. மீடியாக்களில் பிரபலங்களினால் ஏற்பட்ட references ஒரு சின்ன அலையை ஏற்படுத்தியது. இவையெல்லாம் சேர்ந்து ராஜா சார் கேட்பதை ஒரு vogue ஆக மாற்றியது. மழை, ராஜா சார், கிட்டார், கவுதம் மேனன் .காதல் போன்ற இத்யாதிகள் ராஜா என்ற பெர்சனாலிட்டியை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இளையராஜாவை தங்களுடைய டீனேஜில் கேட்டு வளர்ந்தவர்கள், அவர்களுக்கும் முந்தியவர்கள் மட்டுமே உருப்படியாக அவருடைய பாடல்களை ஒரு நேசிப்போடு கேட்கிறார்கள், மற்றவர்கள் Followers of a Vogue.

காலப்போக்கில் மறைந்து விடும்.

அப்புறம் நான் ஷேர் பண்ணிருக்கிற வீடியோ நம்ம தாத்தாவோட அருமையான இன்ஸ்ட்ருமென்ட்டல் ஆல்பம். அநேக பேர் கேட்டிருக்க வாய்ப்பில்லை, கேளுங்கள். படங்களைக் குறைத்து இதை மாதிரி 2000 க்கு அப்புறம் பண்ணியிருக்க வேண்டும். ராய் கூடர் மாதிரி ப்ரடூசர் கையில் சிக்கியிருக்க வேண்டும். இந்தியா முழுவதும் எவ்வளவோ இசைக்கலைஞர்களுடன் இணைந்திருக்கலாம், முறையாக எடுத்துச் சென்றால் இன்டர்நெஷனல் ஆர்டிஸ்ட்ஸ்/ஜாம்பவான்கள் கூட விருப்பம் தெரிவிப்பார்கள். இது வரை ஒரே ஒரு ஆஸ்திரேலியா பொண்ணு மொபைல் கேமெராவை வைத்துக் கொண்டு தானெடுக்கும் படத்தில் இளையராஜாவை இசை பண்ணித்தரச் சொல்லியிருக்கிறது. ரஹ்மான் சரியான நேரத்தில் சரியான ஆட்களை வைத்து சரியான திசையில் சென்றுவிட்டார். இளையராவிற்கு இருப்பதோ வெட்டி வேரு வாசம் வெடலப்புள்ள நேசம் கேட்கும் அந்தக்காலத்து , அதாவது ராஜூமுருகனின் மாமாக்கள், சித்தப்பாக்கள், ராஜாவை மட்டம் தட்டிப் பேசும் இந்தக் காலத்து குஞ்சுகுளுவான்கள், அவருடைய பாடல்களை செவ்வனே கவர் செய்து கொண்டிருக்கும் கிட்டாரிஸ்ட்ஸ் மற்றும் இதர
யூட்யூப் இசைக்கலைஞர்கள். அவ்வளவு தான் ராஜாவின் சரித்திரம் முடிவுற்றது.

கடைசியா மிஸ்கினிடமிருந்து சில வார்த்தைகள் வாசர்களுக்காக ப்ரத்யேகமாய் :

“நான் தூங்கி முழிக்கும் போது அப்பா முகத்தில் தான் முழிப்பேன், என்னுடைய அடுத்த படத்தில் அப்பாவுடைய பின்நவீனத்துவமான முன்னணி இசையை தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்துவேன், அகிரா குராசாவாவின் ஆவி எங்களை ஆசீர்வதிக்கும்”.

https://www.youtube.com/watch?v=ollLDa0Z4ug

Advertisements