கோரா, ஒரு ஆஃப்ரிக்க இசைக்கருவி. சமீபத்தில் கூட ரஹ்மான் 24 படத்தில் ஏதோ ஒரு பாடலில் உபயோகப்படுத்தினார். ஏற்கனவே Toumani Diabaté பற்றி எழுதியிருக்கிறேன். இப்போது டெரெக் க்ரிப்பர் என்ற சவுத் ஆஃப்ரிக்க கிட்டாரிஸ்ட் பற்றி பார்க்கலாம். Toumani கோராவில் வாசித்ததை கிளாசிக்கல் கிட்டாருக்கு ஏற்ப இசைத்து ஒரு ஆல்பம் வெளியிட்டுள்ளார் .இவர் செய்து கொண்டிருப்பது நம்முடைய ரமேஷ் விநாயகம் இங்கு கர்நாடக இசைக்கு செய்து கொண்டிருக்கும் கமகா பாக்சிற்கு ஒப்பானது.

இவர் என்ன செய்தார். உலகின் முதன்மையான கிளாசிக்கல் கம்போஸர்களில் ஒருவராகக் கருதப்படுவர் ஜே எஸ் பாக். அவருடைய பெரும்பாலான ஸ்கோர்கள் எழுத்துவடிவில் இருக்கின்றன. இன்று எவரும் பயிற்சி பெற்று வாசிக்கும் நிலையில் உள்ளது. ஆனால் Toumani போன்ற ஆஃப்ரிக்க இசைக்கலைஞர்களின் இசை எழுத்து வடிவில் இல்லை.

Vihuela Tablatures

Similarly the old vihuela music from the 1500’s was published in beautiful tablatures that represented the six “courses” of strings on the vihuela as horizontal lines and the frets of each strings as numbers placed on these lines.

In the times before recording these published scores of the music by the vihuela composers of Spain were disseminated throughout Europe, in editions of thousands of copies. This was the way to share music. It is incredible to think that human beings have made this way of sharing musical thoughts, just on a piece of paper. You put the piece of paper in front of somebody with the an instrument and the ability to read the map, and voila! the music is heard. And the beauty of this system is that there is no “definitive” version of the piece. the piece exists in a realm of possibility.

மேலுள்ளவற்றை தமிழாக்கம் செய்ய விரும்பவில்லை. அவை டெரெக் க்ரிப்பரின் வலைத்தளத்திலுள்ள தகவல்கள். இது தான் முக்கியமான வரிகள் “the music by the vihuela composers of Spain were disseminated throughout Europe , in editions of thousands of copies”. ஒரு இசை பரவலாகப் போய்ச் சேர வேண்டுமானால் இது தான் நடக்கவேண்டும். முதலில் அதை எளிமைப் படுத்தி, சாத்தியங்களை விரிவு படுத்தி, தகுந்த கேப்ஸ்யூல் வடிவில் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். முதலில் அனைத்து வகையான கலைஞர்கள் மத்தியில் வரவேற்கப் பட்டு வெவ்வேறு வடிவில் புழக்கத்தில் இருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இது நடந்து வந்தால் பாமரனுக்கு ஒரு நாள் கண்டிப்பாக போய்ச் சேரும் என நம்புகிறேன்.கோராவில் ஆப்பிரிக்க மக்கள் இசைத்து வந்த இசை நம்முடைய கர்நாடக இசை மாதிரி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நேரடியாகக் கடத்தப்பட்டது. பேப்பரில் எழுதப்படவில்லை. தலைமுறை தலைமுறையாக அவர்கள் வாசித்து வருகிறார்கள். இப்போது நாம் கேட்கும் கோரா, பொதுவாக மாலியில் இசைத்து வருபவை எல்லாம் இப்படிக்கு கடத்தப்பட்டது தான், ஒவ்வொருவரும் அதை ஒலிப்பதிவு செய்து இருக்கிறார்கள், அவை டிஜிட்டல் வடிவில் இருக்கின்றன, இருந்தாலும் வெஸ்டர்ன் கிளாசிக்கல் போல சீட் மியூசிக் வடிவில் இல்லை. பேப்பரில் இருக்கும் நொட்டேஷனைப் பார்த்து படிக்கும் வசதி இல்லை, இங்கு தான் டெரெக் க்ரிப்பர் அவைகளை மிகுந்த சிரமத்திற்கு அப்புறம் ஸ்கோர்களாக மாற்றி அனைவரும் எடுத்துக் பயிற்சி செய்து வாசிக்கும் வசதியைக் கொடுத்திருக்கிறார் , கட்டணமும் வசூலிக்கிறார். தேவைப்படுகிறவர்கள் உபயோகித்துக்கொள்ளலாம்.

இதையே தான் ரமேஷ் விநாயகமும் செய்ய ஆசைப்படுகிறார். கர்நாடக இசையை அனைவரும் கற்றுக்கொள்ள ஒரு எளிமையான டூல் வேண்டுமென்று பிரயத்தனப்பட்டு கமகா பாக்ஸை சாத்தியப்படுத்தி இருக்கிறார். வாய்ப்பாட்டு வடிவில் ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சுலபமாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பை அனைவருக்கும் சாத்தியப்படுத்தும் முயற்சி.

இன்று நான் மாலியிலிருக்கும் இசையை கற்றுக்கொண்டு வருவது போல எங்கோ ஒரு நாட்டில் கர்நாடக இசையை கற்றுக் கொள்ளும் ஒருவன் உருவாகலாம். ரமேஷின் முயற்சி அடுத்த கட்டத்துக்கு சீக்கிரம் போக வேண்டும். ஒரு காலத்தில் நிறைய மேண்டலின் ஸ்ரீனிவாஸ், கிட்டார் பிரசன்ன உருவாக வாய்ப்பிருக்கிறது. ஒரு காலத்தில் கர்நாடக இசைக்கு கிட்டார் புதிதாக இருந்தது போல வேறு ஏதாவது இசைக்கருவிகள் வந்து சேரலாம்.

Advertisements