நான் அன்றாடம் எவ்வளவோ ஆர்டிஸ்ட்ஸ் கேட்கிறேன். ஒரு நாளும் நிறைய கேட்டுவிட்டோமென்றுத் தோன்றவேத் தோன்றாது. தோண்டத் தோண்ட வந்துகொண்டே இருக்கும். யாருமே கேட்டிராத அப்ஸ்க்யூர் பேண்ட்லாம் (Nick Drake, Roy Buchanan) கேட்டிருப்பேன், ரொம்ப பாப்புலர் பேண்ட் ஏதாவது ஒன்னு கேட்டிருக்க மாட்டேன், நம்ம ரசனையைப் பொருத்துத் தானே பெரும்பாலும் நம்ம தேடல் அமையும், சில தேடும் போது தென்படாது. நேற்று Senthilkumar Shanmugam ஒரு ராட்சசியோட பாட்டை இன்பாக்ஸ்ல் அனுப்பிக் கேளுங்க என்று சொன்னார், காலில் விழுந்துட்டேன் இன்பாக்ஸ்லியே , இவ்வளவு நாளும் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் என் கண்ணுக்குத் இவள் தென்படவில்லை? சே, இவள் மைல்ஸ் டேவிஸுடைய கொஞ்ச கால மனைவி வேறு. மைல்ஸ் டேவிஸுக்கு ஜிமி ஹென்றிக்ஸ் மாதிரி ஆட்களை அறிமுகப் படுத்தியதே இவள் தான். என்னோட இன்னொரு ஜாஸ் ஃபங்க் மியூசிக் தெய்வம் ஹெர்பி ஹேன்காக் பற்றித் தேடிய போதும் இவளுடைய பேர் கண்ணுக்குத் தென்படவில்லை.

Ahead of It’s or Their time என்று ஒரு பதம் இருக்கு. இதற்கு சில பேரைச் சொல்லிக் கேட்டிருக்கோம். ஒவ்வொரு காலத்திலேயும் சில கலைஞர்கள் அவர்களின் காலத்தில் ரொம்ப வருஷம் கழித்து மக்கள் கேட்கப்போவதையெல்லாம் பரீட்ஷார்த்தமாக செய்திருப்பார்கள். எதையும் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். எக்ஸ்பெரிமெண்ட்ஸ் அவர்களின் அன்றாடமாக மாறிப்போய்விடும் .முதல் முறை பிங்க் ப்ஃலாய்ட், அதுலயும் சித் பேரட் இருக்கும் பொழுது வந்த பாட்டுக்கள் எங்கேயோ இருக்கும். அப்புறம் ப்ளூஸ்ல் லைட்னிங் ஹாப்கின்ஸ், டி போன் வாக்கர் கேட்ட போது அவ்வளவு ஆச்சர்யமாக இருந்தது.

Aja ஆல்பம் – Steely Dan முதல் முறை கேட்டுவிட்டு கொஞ்ச காலம் தமிழ் சினிமா பாட்டு பக்கம் வரவே இல்லை, ரஹ்மான் அவர் வந்த பிறகு ஏன் முதல் வேலையாக சவுண்ட் லாண்ட்ஸ்கேப் மாற்றினார்? இந்த ஆல்பம் கேட்டால் தான் ஓரளவு தெரிய வரும்.

Josie from Aja

https://www.youtube.com/watch?v=V1njBdAyNGI

அப்புறம் ப்ளூ சீர் .இவர்களும் அவர்களுடைய காலத்திலேயே 60ஸ் , ஏர்லி 70ஸ் ஹெவி மெட்டலைச் செய்துகொண்டிருந்தார்கள்.

Blue Cheer : Doctor Please, holy shit, this came out in the 60’s

https://www.youtube.com/watch?v=tjbDzwjoQwA

இவைகளை விட Kraftwerk முதலில் கேட்ட போது நான் பார்த்த எல்லாமே ரொம்ப அரதப் பழையதாகத் தெரிந்தது. அநேக பேர் கேட்டிருக்கலாம். கேட்காதவர்கள் முதலில் இவர்களுடைய ஒரு பாடலையாவது கேளுங்கள். அப்புறம் மீதியை படியுங்கள். ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. எந்திரன் படத்தில் வரும் ஒரு பாடல் Kraftwerkக்கு செய்த homage (நான் காப்பி என்று எடுத்துக்கொள்ளவில்லை). என்னவொன்று எந்திரன் பாடல் The Chiffons க்கு செய்த homage மாதிரி இருந்தது.

சில முக்கியமான ஆல்பங்கள் .

Kraftwerk – The Man-Machine

https://www.youtube.com/watch?v=NL3NqfFTec8

Radio Activity:

Full Album:

https://www.youtube.com/watch?v=4kEti-BB4Pw

Live:

https://www.youtube.com/watch?v=0EBTn_3DBYo

Autobahn:

https://www.youtube.com/watch?v=Kp3vb95TRdE

கேட்டுவிட்டு இவை வெளிவந்த வருஷத்தை பாருங்கள். சிந்தசைஸர் முப்பாட்டன்கள். இவர்கள் பற்றி தனி போஸ்ட் போடலாம்.

கடைசியாக Betty Davis.

They Say I’m Different – 1974

இந்த ஆல்பத்திலிருந்து ஆரம்பித்தேன் நேற்றிரவு. தொடர்ந்துகொண்டே இருக்கிறது. முதல் பாடல் Curtis Mayfield’s Pusher Man மாதிரி தான் இருந்தது. இந்த ஆல்பத்திற்கு இரண்டு வருடங்கள் முன்பு தான் Super Fly வந்தது. Curtis Mayfield அமெரிக்க இசையின் ஒரு பிதாமகர் .இந்த ஒப்பிடலில் இருந்து சில வினாடிகளிலேயே வந்து விட்டேன். மூன்றாவது பாடல். Your Mama Wants Ya Back

ஃபங்க் மியூசிக்கின் தேவதை, ராட்சஷி. நான் கேட்டுக்கொண்டிருந்த I-Ball Multi Purpose Portable Speaker ஐ எடுத்து வீசிவிடலாம் போல இருந்தது. இன்னும் நல்ல மியூசிக் சிஸ்டத்தில் கேட்கும் துரதிருஷ்டசாலியாக இருக்கிறேனே .இப்போது ஆல்பம் ரிவ்யூ எழுத முடியாது, நிறைய கேட்க வேண்டும். நறுக்கென்று நாலே ஆல்பங்கள் தான் செய்திருக்கிறார். அதற்கு அப்புறம் எதுவும் செய்யவில்லை, மியூசிக் சீனில் இருந்து விலகிவிட்டார். என்ன செய்ய அவ்வளவு அராத்தான விஷயங்கள் செய்திருக்கிறார். இப்போது சமீபத்தில் கேட்ட ஃபங்க் ஆல்பங்களை எல்லாம் குப்பையில் போட்டு விட்டுடலாம். ஒன்னும் புதிதில்லை. ஏன் இவர் தொடர்ந்து இயங்காமல் போனார் என்று கோவமாக வருகிறது, அதே நேரத்தில் தொடர்ந்திருந்தால் ஒரு வித mediocrity க்கு போய் இருப்பாரோ என்று நினைத்தேன், sick moron, என்று என்னையே திட்டிக்கொண்டேன். நாலு ஆல்பங்களில் எந்த வித சலிப்பும் தோன்றவில்லை.

நாலு பேர் படிப்பார்கள், லைக் போடுவார்கள். எதற்கு இவ்வளவு சீக்கிரம் எழுதினேன் என்றால், என்னுடைய பரவசத்தைக் கடத்தவேண்டுமென நினைத்தேன். செந்திலுக்கும் இதே போல ஒரு Incessant Excitement. இது ஒரு Ceaseless Celebration, யாருக்காவது சொன்னால் தான் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். இந்த ஆல்பம் உங்களுக்கு சுமாராகக் கூட தோன்றலாம். பரவாயில்லை. எனக்கு இந்த நிமிடம் ரொம்ப முக்கியம். அவ்வளவு பாசிட்டிவ் எனெர்ஜி. இவ்வளவு சந்தோஷத்தை மனிதர்கள் சுலபமாகக் கொடுக்க முடியாது. எங்கேயோ எப்போதோ ஒரு காலத்தில் ஒரு அமெரிக்க பெண் செய்தது எனக்கு இன்றைய இன்பம். இதற்காகவே இன்னும் நாற்பது பக்கங்கள் எழுதலாம், என்றாவது என்னை போன்ற மனநிலை உடைய ஒருவன் படித்து Betty Davis பித்து பிடித்து என்னைப் போல், செந்திலைப் போல பரவசப்படலாம், இன்று படிக்கும் ஒருவனுக்கு இந்த Ceaseless Celebration தொற்றிக்கொண்டால் சந்தோஷமே.

https://www.youtube.com/watch?v=fM4JEyNl8vM

Advertisements