இது பற்றி எழுத வேண்டாமென்றிருந்தேன். ஹிந்தி படம் என்பதால் சில பேர் பார்க்க தவறிவிடக் கூடும்.தரமணி டீஸருக்கே பெண்ணியம், ஆணியம் என்று பொங்கியவர்கள். ஒரு வேளை நம் விமர்சகர்கள் கண்ணுக்கு லேட்டாகத் தெரியவரலாம் அல்லது “பெண்ணியமும் அதன் இருண்மை அழகியலும்” (அதிலும் அழகியல் கண்டிப்பாக வரணும்) என்று காட்சிப்பிழைக்கோ, அந்திமழைக்கோ ஒரு கட்டுரை அவர்கள் மவுனமாக எழுதிக் கொண்டிருக்கலாம். எது எப்படியோ, அவசியம் பார்க்க வேண்டிய படம். முக்கியமாக ஓலா மேட்டரில் “உணர்ச்சிவசப்பட்டவர்கள்” பார்க்க வேண்டிய படம். உணர்ச்சிவசப்பட்டு எளிதில் சைட் எடுத்துவிடுவதில் நம்மாட்களுக்கு ஈடு இல்லை. Cause and Effect பற்றி எதுவும் யோசிக்கத் தேவையில்லை. ஹீரோயிசம் எவ்வளவு நம்முடைய மனதில் ஊறியிருக்கிறது என்று அந்த விஷயத்தில் தெரிந்து கொண்டேன், வாயவே திறக்கக் கூடாது என்று நினைத்தேன். வாயை திறந்திருந்தால் பொது புத்தி என்று புத்திமதி சொல்லி அனுப்பி இருப்பார்கள். நல்ல வேளை கடைபிடித்துவிட்டேன்.

அமிதாப் – அமிதாப்பின் குரல், ஸ்க்ரீன் பெர்சோனா டைரக்டர் அந்த கதாபாத்திரம் மூலம் சொல்ல விரும்பும் விஷயத்திற்கு மிகவும் உதவுகிறது. ஆயிரம் ரஞ்சித்க்கள், வெற்றிமாறன்கள் இயக்கினாலும் ரஜினியின் இமேஜ் ட்ராப்பை மாற்ற முடியாது. பிக் பி இஸ் ரியலி எ பிக் பி. ஏன் அமிதாப்பை இன்னும் நாம் ஜவுளிக்கடை, நகைக்கடை விளம்பரத்தில் மட்டும் நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்? என் வீட்டுக்காரி தான் இப்படி யோசிக்கவைத்து விட்டாள். இப்போது தான் அமிதாப்பை முதல் முறை திரையில் பார்க்கிறாள். ஹிந்தி ஆக்டர் மாதிரியே தெரியவில்லை என்றாள். அது தான் அமிதாப்!!! Freewheeling Film making எப்போது வரப்போகிறதோ?

அப்புறம் அந்த மூன்று பெண்கள் கண்டிப்பாக கன்வின்சிங்காக நடித்தே தீரணும், இல்லாவிட்டால் இப்படிப்பட்ட நல்ல படம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தி இருக்காது. அந்த நார்த் ஈஸ்ட் பெண்ணாக வருபவர், என்னுடைய ஃபேவரிட் கிட்டாரிஸ்ட் ரூடி வாலங்கின் பெண். இரண்டு மூன்று நார்த் ஈஸ்ட் கதா பாத்திரங்கள் இருந்தது நல்ல விஷயம்.

பின்னணி இசை- ஏதோ அஞ்சப்பர் ஹோட்டலில் பேக்ரவுண்டில் ஓடிக்கொண்டிருக்கும் இளையராஜா இன்ஸ்ட்ருமென்ட்டல் மாதிரி இருக்கிறது, ஏற்கனவே எழுதின மாதிரி இந்திய சினிமாக்கள் பார்க்கும் போது மட்டும் இரைச்சலாக இல்லாமலிருந்தாலே சூப்பர் என்று சொல்லத் தோன்றுகிறது.

முதல் பாதி த்ரில்லர், இரண்டாம் பாதி கோர்ட் ரூம் டிராமா.

Don’t Show, Tell என்று ஒரு பதம் இருக்கிறது. மணிரத்தினத்தின் “பேசாதே, காட்டு” மாதிரி இது ஒரு வகை. அபூர்வமாக தமிழ் சினிமாவில் சரியாக உபயோகப்படுத்தி இருப்பார்கள். ஃப்லாஷ் பேக் போவதில் நம்மாட்கள் கில்லாடிகள். என்னாச்சு என்று ஒரு கதாப்பாத்திரம் கேட்டாலே, அது ஒரு பெரிய கதை என்று ஃப்லாஷ் பேக் ஆரம்பித்து விடும். கடைசி வரைக்கும் எந்த சம்பத்திற்க்காக வாதங்கள் நடந்ததோ அதை காண்பிக்கவே மாட்டார்கள். படம் முடிந்து எழுத்து போடும் போது தான் அந்த இரவு ராக் ஷோவில் என்ன நடந்தது என்று நமக்கு தெரியவரும். ஆக, சம்பவத்தை காட்டாமல், கதா பாத்திரங்கள் பேசிப் பேசி, விவாதித்து நமக்குள் ஒரு அனாலிசிஸ் ஏற்பட ஆரம்பிக்கிறது. அந்த பெண்கள் மீது தப்பில்லை என்று சீக்கிரமே தெரிந்தாலும் கூட.

சில குறைகள் இருந்தன, என் வேலை விமர்சனம் எழுதுவது அல்ல. சொல்லி என்ன பிரயோசனம், ஒரு வேளை அது உங்களுக்குத் தெரியாமல் போகலாம், நல்ல படம், போய் பாருங்கள்.

ஒரு பெண் மீது குற்றம் சுமத்தலாமா? சுமத்தலாம், சிறைக்கு அனுப்பலாமா? அனுப்பலாம், அவள் குடிப்பதை விமர்சிக்கலாமா? லாம், லாம் , லாம் …கண்மூடித்தனமாக பெண்ணியக்காவலர்களாக அவர்களை அடைகாத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. (நேற்று ராம்குமார் விஷயம் கேள்விப்பட்ட உடன் யாருமே சிறைக்கு யார் சென்றாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற பயமே வருகிறது). இதுக்கு அப்புறம் அமிதாப் பேசுவதை படத்தில் பாருங்கள்

ஆனாலும் பெண்களின் அடிப்படை சுதந்திரத்தில் கைவைக்கும் ஆண்கள், அவர்களின் Marital Status பற்றி தேவையில்லாமல் தங்களின் முதுகு அரிப்புக்கு சொரிவதற்காக எழுதிக்கொண்டிருக்கும் வக்கிரமான ஆண்கள், (That’s none of anyone’s fucking business) அதை கொண்டாடும் ஆண்கள் இருக்கும் வரை அவர்கள் அடைகாக்கப் படவேண்டியவர்களே.

ஆகவே இது முக்கியமான படம், It’s so relevant and Contemporary.

PINK is a social thriller that reflects on the dubious morals of today’s times. In Theatres on 16th…
youtube.com
Advertisements