Magnified, sanctified, be thy holy name
Vilified, crucified, in the human frame
A million candles burning for the help/love that never came
You want it darker

சாதாரணமான வரிகள் தாம் ஆனால் Incessant Thought Pattern உருவாகி விடுகிறது.

இதை மாதிரி ஒரு haunting ட்ராக் கேட்டு எவ்வளவோ நாட்களாகி விட்டது. வெறுமெனே பேஸ் கிட்டார், கூடவே Cantor and Synagogue Choir , இரண்டும் சேர்ந்து ஒரு மாதிரி மனநிலையை உருவாக்குகிறது. அது என்னவென்றே சொல்லத் தெரியவில்லை. எல்லவவற்றுக்கும் மேல் இவரது குரல், எங்கேயோ, ஏதோ ஒரு கிரகத்திலிருந்து ஒலிக்கும் அசரீரி போன்று இருக்கிறது. தனிமையில் நம் காதருகில் ஜெபிப்பது போலவும் இருக்கிறது.  இது இவரது மிகச் சிறந்த ஆல்பங்களில் ஒன்று என்று  முழுவதும்  கேட்டவர்கள்  ரிவ்யூ எழுதியிருக்கிறார்கள். இவருடைய  தற்போதைய மனநிலையை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது.

Hineni, hineni
I’m ready, my lord

இந்த மாதிரி சிறந்த பாடல்களின் சிறப்பம்சம் என்னவென்றால், இதனுடைய பலமுகத் தோற்றம். You perceive what you feel.

If you are the dealer, I’m out of the game
If you are the healer, it means I’m broken and lame

அவருடைய விரக்தியை காட்டுகிறது. தற்போது நடந்து கொண்டிருக்கும் பல விஷயங்களை யோசிக்கத் தூண்டுகிறது. பீட்ல்ஸின் ஜார்ஜ் ஹாரிசன் My Sweet Lord ல் கடவுளைப் பார்க்க, உணர, கடவுளின் அருகில் இருக்க முயற்சி செய்தார். இவர் அந்த முயற்சியெல்லாம் செய்யாமல் சில கேள்விகளை மட்டும் வைக்கிறார்.கடவுளைத் தான் கேட்கிறாரா? நம்முடைய interpretation தான் இங்கு முக்கியம். கடவுள் ஒரு உருவகம் தான். கேள்வி கேட்கவேண்டிய அமைப்புகள் ஏகப்பட்டது இருக்கின்றன. ஒரு வகையில் பார்த்தால் Everyone  Wants It (the world ) Darker அல்லது அப்படி விரும்பும் அதிகாரம் இருப்பவர்களை நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படியிருக்க கடவுள் என்ன செய்வார்? நம்பிக்கை இருப்பவர்கள் கடவுளைக் கேட்கலாம், ஏன் இதையெல்லாம் அனுமதித்தாய் என்று.

மிகப் பெரிய சம்பவங்களே வெறும் செய்திகளாக மாறி அன்றாடத்துடன் கலந்து மற்றுமொரு செய்தி வரும் வரை தான் அதற்கு ஆயுள். எந்த வித வன்முறையாக இருந்தாலும் இதற்கு விதிவிலக்கு கிடையாது. News feed hopping creatures ஆக மாறிவிட்டோம்.  இப்படிப்பட்ட சூழலில் இந்த மாதிரி அடிப்படை விஷயங்களுக்காக எளிய கேள்விகள் எழுப்புபவர்கள் குறைந்துவிட்டார்கள். நமக்குள் எந்த வித Tranquility ஏற்பட வாய்ப்பே இல்லாமல் போய்விட்ட நேரத்தில் இந்த பாடல் ஏதோ தனித்து இருக்கிறது.

ரொம்ப நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆல்பம். இவருக்கு வயது 82. இவரைப் பற்றி இதுவரை கேள்விப்படாமல் இருந்தால் ஒன்றும் பாதகமில்லை. இன்றே கூட ஆரம்பிக்கலாம். அநேகமாக இதுவே இவரது கடைசி ஆல்பமாக இருக்கலாம். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த ஆல்பத்தை கைவிடப் போன நிலையில் அவரது மகன் படுக்கையில் இருந்து எழுப்பி அவரது வீட்டிலேயே ரிக்கார்ட் செய்திருக்கிறார்.

Advertisements