Paragraph 3:

படிப்பது, பார்ப்பது அவரவர் விருப்பம், இருந்தாலும் சொல்லத் தோன்றுகிறது. தமிழில் எழுதப்படும் சினிமா விமர்சனங்கள், இசை விமர்சனங்கள், இசை, சினிமா பற்றிய கட்டுரைகள் (நான் அடிக்கடி உளறுவது உட்பட) எதையும் படிக்கத் தேவையில்லை. ஏனெனில் எதுவுமே உங்களுக்கு உபயோகமாக இருக்காது. யூ ட்யூப் இருக்கிறது, தேடுங்க, நிறைய தேடுங்க, பாருங்க, நிறைய கேளுங்க. அவ்வளவு தான்.

Paragraph 5:

i) இவையெல்லாம் சாதாரண சினிமா ரசிகனுக்கே தெரியும் அல்லது படம் பார்த்த பிற்பாடு அவனே முடிவு செய்ய வேண்டியது. இதற்கு சினிமா ஆர்வலர்கள், அனுபவஸ்தர்கள், விமர்சகர்கள் வியாக்யானம் செய்ய வேண்டிய அவசியமிருப்பதாகத் தெரியவில்லை. மனரீதியாக ஈரானிலோ, ஜப்பானிலோ ,கொரியாவிலோ, அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ வசிப்பவர்கள் செய்யும் விமர்சனங்கள் இது. நேற்று டீ கடையில் பேப்பர் பார்த்துக்கொண்டிருந்த மார்பிள் கிரைண்ட் செய்பவர் ஆண்டவன் கட்டளை சூப்பர் படம் சார் என்று சொன்னார், அநேக பேர் நன்றாக உள்ளது என்கின்றனர், இது தான் முக்கியம், படம் விறுவிறுப்பாக உள்ளதோ, ஜவ்வாக இழுக்கிறதோ அவரவர் முடிவு தான். விசாரணை என்னை பொருத்தவரை சுவாரஸ்யமான படமே.   இதற்கெல்லாம் (இயக்குனர்கள்) மணிகண்டன் ஒன்றும் செய்ய இயலாது, முடிந்த அளவுக்கு நல்ல படம் செய்ய முயற்சிக்கிறார், நான் மணிகண்டனுடன் ஒத்துப்போகிறேன், சாப்பாட்டில் உப்பு கம்மி, காப்பியில் சக்கரை ஜாஸ்தி என்று சொல்வது போல படத்தில் எது கம்மி என்று முடிந்தால் சொல்லுங்களேன், அதை விட்டு பொத்தாம்பொதுவாக ஏதோ ஒன்று குறைகிறது என்கிறார்கள், அது எதுவென்று சொன்னால் ஒரு வேளை மணிகண்டனுக்கு உபயோகமாக இருக்கக்கூடும். நிற்க, அவர் உங்கள் விமர்சனங்களை எல்லாம் படிப்பவர் மாதிரியும் தெரியவில்லை.

ii) என்னைப் பொருத்தவரை நல்ல படம் vs நல்ல படம் இல்லை, அவ்வளவு தான். எவ்வளவு நேரம் ஓடுகிறதோ, அவ்வளவு நேரமும் என்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொள்ள முடிந்தால் அது சிறந்த படம். இப்படியெல்லாம் நடக்குமா, இப்படியெல்லாம் ஒருவன் செய்வானா என்று யோசிக்கவே மாட்டேன். சினிமாவே ஒரு சாமர்த்தியமான பித்தலாட்டம் தான். படத்தில் நடக்கும் சம்பவங்கள், இடங்கள் முழுக்க கற்பனையாகக் கூட இருக்கலாம், அந்த இடத்தில் கதாபாத்திரம் உண்மையாக வெளிப்படுகிறானா, நான் அந்த இடத்தில் எப்படி உணர்ந்திருப்பேன், சுருக்கமாகக் கூறினால், கதாபாத்திரம் உண்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் எனக்கு போதும்.

Paragraph 8:

ஆக இதற்கெல்லாம் தான் சினிமா, இசை ஆர்வலர்கள் மற்றும் அனுபவஸ்தர்கள் பிரயத்தனப் படவேண்டும். தங்களைப் படிப்பவர்களை தங்களுடன் அடுத்தகட்டத்துக்கு நகர்த்த வேண்டும். நீங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர, நீங்கள் இது வரை எழுதியதை நீங்களே சிலாகித்துக் கொள்ளாமல் ஒதுங்கி அடுத்து புதிதாக = கச்சிதமாக எப்படி எழுதலாம் என்று யோசித்தால் போதும், நான் யோசிக்கத் தொடங்கி விட்டேன் >>>

Paragraph 4:

மறைந்த கர்நாடக பாடகர் மணி அய்யர் பாடினால் ரிக்ஷா காரன் முதல் அனைத்து பாமர மக்களும் கேட்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது தான் நல்ல கலை. கர்நாடக இசையை முறையாய் கற்காமல் அதை ரசிப்பவர்களுக்கு சிக்கலான ராகங்களை, சங்கதிகளை கண்டுபிடுத்துவிடும் – ரசிக்கும் தன்மை, நிரவலை ரசிப்பது எல்லாமே தொடர்ந்த பயிற்சியால் வருவது. இது அவர்களின் தனிப்பட்ட ஆர்வம் மட்டுமே. இதே போல், ராக் அண்ட் ரோல் கேட்கும் போது கிட்டார் சோலோ, ட்ரம்ஸ் சோலோ, அட்டகாசமான பேஸ் லைன்ஸ் ரசிப்பதும் இதே ரகம் தான். Harmony, Syncopation, Counter-Point, Falsetto, Vibrato , Unusual Tempo & Time Signature இப்படி ஏகப்பட்ட இத்யாதிகள் இருக்கின்றன. இவையெல்லாம் பற்றி அறிமுகம் இருந்தால் இன்னும் கலையை ஆழமாக ரசிக்கலாம், சிலாகிக்கலாம். ஆனால் இவை “கட்டாயம்” கிடையாது.  ஆனால் இசை பற்றி எழுதுபவர்கள் இவை பற்றி எழுதினால் கேட்பவர்களின் ரசனை மேம்பட வாய்ப்புள்ளது, படிப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும் (அதனால் தான் நான் இது வரை இசை பற்றி எழுதிய எதுவுமே உபயோகப்படாது என்றேன், இனிமேல் பார்க்கலாம்). இதைத் தான் ஒரு துறையில் அதிக ஞானம் இருப்பவர்கள் செய்யவேண்டுமென விரும்புகிறேன். வெறும் மேம்போக்காக “தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான படம் – கழிவிரக்கம் அதிகம் – இசை ஒரே இரைச்சல் – கேமரா இடங்களை பசுமையாகக் காட்டி இருக்கிறது – ஏதோ ஒன்று குறைகிறது (அது என்னன்னு சொல்லுங்க ஜீ (அது தெரிஞ்சா நான் சொல்லமாட்டேனா) – மலக்கிடங்கு – (சிலர் எழுதும் விமர்சனங்கள் இயக்குனரின் ஸ்க்ரிப்டை விட பக்கங்கள், குறியீடுகள் , கண்டுபிடிப்புகள் அதிகம்- அவை சேர்க்கப்படவில்லை) – அபத்தங்கள் இல்லாத சுவாரஸ்யமான திரைப்படம் – பிரச்சாரத் தொனி – நல்ல நடிப்பு…………………………

Paragraph 6:

இந்த வீடியோவில் வருவது போல செய்ய முடிந்தால் செய்யுங்கள். இதுவே படம் பார்ப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும், அவர்களின் ரசனையை மேம்படுத்தும், படம் பார்க்கும் போது அவர்கள் இன்னும் தீவிரமாக கலையுடன் ஈடுபட வழிவகுக்கும். இது மாதிரி சமீபத்தில் எவருமே எடிட்டிங் பற்றியோ, ஒளிப்பதிவு பற்றியோ தமிழில் எழுதி நான் பார்த்ததில்லை. இது என்னை பார்க்கத் தூண்டியது. சிறந்த காட்சிகள் ஒலி எதுவுமில்லாமல் இலகுவாகப் புரியவேண்டும், அதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். ஒரு காட்சி எப்படி அணுகப்பட்டிருக்கிறது, எடிட்டிங்கின் மற்றும் ஒளிப்பதிவின் வேலை என்ன? Medium Shot, Close-Up Shot போன்றவற்றின் பயன்பாடு குறித்து அருமையாக விளக்கப்பட்டிருக்கிறது. அது எவ்வாறு ஒரு காட்சியை சிறந்த காட்சியாக்குகிறது, எப்படி தாக்கத்தை பார்வையாளருக்கு கடத்துகிறது……

Paragraph 1:

நான் இசை பற்றி எழுதுவது எனக்கே சலிப்பைத் தந்து விட்டது, சினிமா விமர்சனம் எழுதுவதே கிடையாது. படம் பார்த்த உடன் ஏதாவது கிறுக்குவதைக் கூட குறைத்து விட்டேன், அடுத்தவர்கள் எழுதுவதால், வீடியோ போடுவதால் எனக்கென்ன ஆகிவிடப்போகிறது? அவர்கள் இது வரை செய்தது எல்லாமே குப்பை என்று சொல்லவில்லை, ஆனால் வேறுவிதமாக எழுதப் ப்ரயத்தனப்பட்டால் அவர்களுக்குத் தான் நல்லது, நான் அடிக்கடி எழுதியது கூட குப்பை தான், ஒரு பாரா, ஒரு லின்க், இன்னொரு பாரா, இன்னொரு லின்க், இப்படி சுவாரஸ்யமற்று எழுதுவதற்கு கச்சிதமாக ஒரு வீடியோ தயாரிக்கலாம். அநேக பேர் வெவ்வேறு Genre பற்றி அறிமுகம் கொடுங்கள் என்கிறார்கள். எழுதி லின்க் கொடுப்பதற்கு பதிலாக முக்கியமான பாடல்களை இணைத்து, சிறு அறிமுகத்துடன் (முகத்தை காட்ட வேண்டுமென்ற அவசியமில்லை, குரல் போதும்) கச்சிதமாக ஒரு வீடியோ தயாரிக்கப் போகிறேன், என்ன செய்ய, அடுத்தவர்களுக்கு உதவவேண்டுமென்றால் சட்டென சோம்பேறித்தனம் வந்துவிடுகிறது, செலக்டிவ் சோம்பேறித்தனம் .இந்த மாதிரி வீடியோ செய்பவர்கள் பார்த்ததும் சில விஷயங்கள் செய்ய ஆர்வம் வருகிறது. சிறந்த பின்னணி இசை வந்த திரைப்படங்களின் காட்சிகளை எடுத்துப் போடலாம்.அது எப்படி ஒரு காட்சியை முக்கியமானதாக்கியது, ஆகையால், சினிமா Visual Medium , visual ஆக imagery உருவாக்குவதே பொருத்தமாக இருக்கும். ……..

Paragraph 7:

ஓகே, இப்படிப்பட்ட இத்யாதிகளை எல்லாம் படம் பார்க்கும் போது அவசியம் கவனிக்க வேண்டுமா? தேவையில்லை, நல்ல படம் பார்க்கும் பொழுது எதுவுமே தோன்றாது, அவ்வளவு ஒன்றிப்போய்விடுவோம்..ஆனால் இவையெல்லாம் பற்றி அறிமுகம் இருந்தால் Novice என்ற தளத்திலிருந்து connoisseur என்ற இடத்துக்கு நகரலாம். கலையை முழுமையாக எல்லோரும் ரசிக்க வேண்டுமென்பதே என்னுடைய விருப்பம். அது ஜாஸ் ஆக இருந்தாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி. அதிலுள்ள நுணுக்கங்களை அறிந்து கொள்ள ப்ரயத்தனப் படவேண்டும். ஒரு சமயம் நான் பாடல்கள் கேட்கும் பொழுது அடுத்த எந்த chord வரும், என்ன time signature என்று கவனிப்பேன், மறு சமயம் பாடலில் முழுமையாக மூழ்கிவிடுவேன், who the fuck gives a damn about Chords or Time Signature?

Paragraph 2:

என்னுடைய ஒரே குறை தமிழில் யாருமே முழுமையாக விமர்சனம் எழுதுவது கிடையாது. இசைக்கு இங்கு விமர்சனம் அறவே இல்லை.

post scriptum : Cinema Beyond Entertainment யூ ட்யூப் சேனலை அவசியம் பாருங்கள்.

Advertisements