கண்ணதாசன், எம் எஸ் வி, இவர்களைத் தாண்டி எனக்கு எம் எஸ் வியிடம் வாசித்த டெக்னீஷியன்களின் மேல் ஒரு தீவிர நாட்டம் உண்டு. எப்போது எம் எஸ் வி தீவிரமாகக் கேட்க ஆரம்பித்தோனோ, அப்போதிலிருந்தே தேடித் தேடி யார் இந்த இன்ஸ்ட்ருமென்ட் வாசித்தது, அந்த இன்ஸ்ட்ருமென்ட் சோலோ யார் வாசித்தது என்று அறிய ப்ரயத்தனப்படுவேன். எனது மாமா நிறைய பேரை அறிமுகப்படுத்தினான். அக்கார்டியன் மங்களமூர்த்தி, தப்லா பிரசாத், ஷ்யாம், ஃப்ளூட் நஞ்சப்பா , ட்ரம்ம்மர் நோயல் க்ராண்ட். ஃபோப்ஸ் வயலின், அரேஞ்சர்ஸ் ஹென்றி டேனியல், ஜோசெப் கிருஷ்ணா, கண்டக்டர் கோவர்த்தனம் ,ட்ரம்பெட் தாஸ் (அதோ அந்த பறவை ட்ரம்பெட் வாசித்தவர்) அவரது மகன் தாமஸ் (உனக்கென்ன மேலே நின்றாய் ட்ரம்பெட் சோலோ ) வீடு வரை உறவு பாட்டில் அந்த பிரமாதமான ட்ரம்பெட் சோலோ வாசித்த லூயி, மேண்டலின் மற்றும் santoor வாசித்த ராஜு, தும்பா சேகர், . கிட்டாரிஸ்ட் ராதா விஜயன், அபு (காத்திருந்தேன் காத்திருந்தேன் – நினைத்தாலே இனிக்கும்)…..இன்னும் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். அந்த பிரம்மாண்டமான குழுவில் ஒருவர் ஃபிலிப்ஸ், முதன்மையானவர்.ஓரளவுக்கு அந்தக் கால திரையிசை பற்றி தெரிந்தவர்களுக்கு கண்டிப்பாக இவரைப் பற்றி தெரியும், தெரியாவிட்டால், No Worries, தெரிந்து கொள்வோம்

இசைக்குடும்பத்தில் பிறந்த இவர், 12 வயதில் கிட்டார் வாசிக்க ஆரம்பித்தவர், அநேக விஷயங்களை, சீக்கிரமே கற்றுக்கொண்டு சினிமாவில் வாசிக்க ஆரம்பித்தார். நிறைய அமெரிக்க இசைக்குழுக்களை ரேடியோவில் கேட்டு, இவரே ஒரு எலெக்ட்ரிக் கிட்டார் இவருக்கென்று மூர் மார்க்கெட்டில் கிடைத்த பயன்படுத்திய பொருட்களைக் கொண்டு அசெம்பிள் செய்தார்.

ஏன் இவர்களைப் பற்றி எழுதுகிறேன் என்றால், இன்றைக்கு சந்தோஷ் நாராயணன் போன்றவர்களின் இசையை ரசிப்பதற்கு மூல காரணம் அன்று இவரும், இவருடைய நண்பர் , ட்ரம்மர் நோயல் க்ராண்ட் செய்த அசாத்தியமான முயற்சிகள். Tone, timbre எல்லாவற்றையுமே அதற்கு முந்திய தலைமுறையிலிருந்து தலைகீழாக மாற்றியவர்கள். ராக் அண்ட் ரோல், ஜாஸ், ப்ளூஸ், வெஸ்டர்ன் பாப், ஹார்மனி, ஸ்பானிஷ், ப்ரெசிலியன் போன்ற பல இத்யாதிகளை நமது முன்னோர்களின் செவிகளுக்கு அந்த காலத்தில் பழக்கப்படுத்த எம் எஸ் வி நினைத்தால், நோயல், ஃபிலிப்ஸ் போன்றவர்கள் அதை கச்சிதமாக வெளிப்படுத்தினார்கள்.

ஒரு முறை கிட்டார் பாலா (இவரும் எம் எஸ் வியிடம் வாசித்தவர்) ஃபிலிப்ஸிடம் உங்கள் கிட்டாரில் என்ன கேஜ் பயன்படுத்தினீர்கள் என்று கேட்டாராம். அதற்கு ஃபிலிப்ஸின் பதில் “வெங்காயம், கேஜ்லாம் ஒரு மண்ணும் தெரியாது அந்த காலத்துல ஆர்டினரி கருணா ஸ்ட்ரிங்ஸ் போட்டு தான் எல்லா பாட்டுமே வாசிச்சோம்” என்று சொன்னாராம். நல்ல எலெக்ட்ரிக் கிட்டார் கூட கிடையாது .வெறும் ஆர்டினரி ஹாஃப்னர் கிட்டாரில் சிங்கிள் காயில் பிக் அப் பயன்படுத்தி. அகூஜா ஆம்பிளிஃபையரில் போட்டு வாசித்தாராம். அது எவ்வளவு கஷ்டம் என்று கிட்டார் வாசிப்பவர்களுக்குத் தெரியும்,

இவரின் சில முக்கியமான பாடல்கள், இவர் வாசித்த எல்லா பாடல்களுமே எனக்கு பிடிக்கும். எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன், யாருமே கிட்ட நெருங்க முடியாத கிட்டார் ராட்சஷன். இவருக்குப் பிறகு இவரை விட ஒரு சிறந்த கிட்டாரிஸ்ட் தமிழ் சினிமாவில் பார்க்கவில்லை. பீரியட்.

காற்று வந்தால் தலை சாயும்:

https://www.youtube.com/watch?v=6TYndPjBkxo

அவர் அப்போது வைத்திருந்த கிட்டாரை நினைவில் வைத்து பார்த்தோமானால் அவரு வாசிக்கும் அந்த அட்டகாசமான glide பிரமிக்க வைக்கிறது.

வண்ணக்கிளி சொன்ன மொழி :

https://www.youtube.com/watch?v=sh7r_0yDNTw

பாடலின் ஆரம்பத்திலிருந்தே உங்களுக்கே தெரியும், செமத்தனமான palm muting டெக்னீக்

அவளுக்கென்ன அழகிய முகம்:

https://www.youtube.com/watch?v=kOMtTQSSW4E

இந்தப் பாடலில் இவர் தான் கிட்டார் வாசிக்கிறார். அனைவரும் பல முறை கேட்டிருப்போம். செக்சியான லீட் கிட்டார். Amazing Double Stops

அன்புள்ள மான்விழியே:

https://www.youtube.com/watch?v=CXLDe5rPrOc

எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

சட்டி சுட்டதடா :

https://www.youtube.com/watch?v=nSnUsM5u4zI

ஏன் எனக்கு எம் எஸ் வி பிடித்த அளவுக்கு வேறு கம்போஸர்ஸ் ஈர்க்கவில்லை என்றால் இந்த பாடல் தான் காரணம். ஒரு pathos பாடலை இவ்வளவு அட்டகாசமாக செய்திருக்கிறார். பாடலின் ஆரம்பத்திலேயே ஃபிலிப்ஸின் கிட்டார் வந்து விடும்.என்னவொரு உணர்வை அது தருகிறது!!எனக்கு தெரிந்து pathos பாடலில் இப்படி லீட் கிட்டார் யாருமே கொடுத்ததில்லை.

ஆட வரலாம், மலரென்ற முகம், ஆஹா மெல்ல நட மெல்ல நட

https://www.youtube.com/watch?v=iDzhxQ-L3Oc

https://www.youtube.com/watch?v=6N-VVp96-Yc

https://www.youtube.com/watch?v=a3SvjgZmyv0

இது ஃபிலிப்ஸின் பாடல்கள், பீரியட்.

கடைசியில், இது தான் ஃபிலிப்ஸின் மாஸ்டர் பீஸ். யாரந்த நிலவு

https://www.youtube.com/watch?v=R8mgrtqbfNw

ஃ பிலிப்ஸ் பற்றி இந்த போஸ்ட் ஓரளவுக்கு அறிமுகம் கொடுத்திருக்கும் என நம்புகிறேன். இனி, இந்தப் பாடல்கள் டீவியில் பார்த்தால் ஃபிலிப்ஸுக்காகக் கேளுங்கள்.

21fr-philips_2223470f

Watch the classic song Kaatru Vandhal from the 1962 movie Kathirunda Kangal starring Savitri, Gemini Ganesan, M.R. Radha, S.V. Ranga Rao, Pandari Bai,…
youtube.com
Advertisements